பஞ்சலிங்கேசுவர கோவில், கோவிந்தனஹள்ளி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பஞ்சலிங்கேசுவர கோவில்
இந்துக் கோயில்
வடமேற்கிலிருந்து கோயிலின் காட்சி (பொ.ச.1238)
வடமேற்கிலிருந்து கோயிலின் காட்சி (பொ.ச.1238)
நாடு இந்தியா
மாநிலம்கருநாடகம்
மாவட்டம்மாண்டியா
மொழிகள்
 • அலுவல்கன்னடம்
நேர வலயம்இந்திய சீர் நேரம் (ஒசநே+5:30)
அஞ்சல் குறியீட்டு எண்571432
ஐ.எஸ்.ஓ 3166 குறியீடுஐஎன்-கேஏ

பஞ்சலிங்கேசுவர கோவில் ( Panchalingeshwara Temple ) என்பது இந்திய மாநிலமான கர்நாடகாவின், மாண்டியா மாவட்டத்தில், கோவிந்தனஹள்ளி கிராமத்தில் அமைந்துள்ள ஒரு இந்துக் கோவிலாகும். இது, போசளப் பேரரசு மன்னன் வீர சோமேசுவரனின் ஆட்சிக்காலத்தில் பொ.ச.1238இல் கட்டப்பட்டது. "பஞ்சலிங்கேசுவரர்" என்ற பெயருக்கு "ஐந்து இலிங்கம்" ( சிவனின் உலகளாவிய சின்னம்) என்று பொருள். இந்தியத் தொல்லியல் ஆய்வகத்தால் தேசிய முக்கியத்துவம் வாய்ந்த நினைவுச்சின்னமாக இந்த கோயில் பாதுகாக்கப்படுகிறது. [1]

கோயில் திட்டம்[தொகு]

கோவந்தனஹள்ளி கிராமம்

ஒரு பஞ்சகுட்டா ( ஐந்து கோபுரங்களுடன் கூடிய ஐந்து சிவாலயங்கள்) கட்டுமானத்திற்கு அரிய உதாரணம் இந்தக் கோயில். [2] ஐந்து சிவாலயங்கள் வடக்கு-தெற்கு அச்சுத் திட்டத்தில் கட்டப்பட்டுள்ளன. ஒவ்வொரு சன்னதியிலும் கர்ப்பக்கிருகம் மண்டபங்களால் இணைக்கப்பட்டுள்ளது. வளாகத்தில் உள்ள சிவாலயங்களின் எண்ணிக்கையானது போசளக் கோயில்களில் காணப்படும் நிலையான அம்சங்களாகும். [3] [4] இரண்டாவது மற்றும் மூன்றாவது ஆலயங்களுக்கு முன்னால் தாழ்வாரங்கள் அமைந்துள்ளன. [5]

படத் தொகுப்பு[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. "Alphabetical List of Monuments - Karnataka -Bangalore, Bangalore Circle, Karnataka". Archaeological Survey of India, Government of India. Indira Gandhi National Center for the Arts. பார்க்கப்பட்ட நாள் 5 April 2013.
  2. Foekema (1996), p.25
  3. Foekema (1996), pp.21-25
  4. Brown in Kamath (2001), pp.134-136
  5. "Panchalingeshvara Temple". Archaeological Survey of India, Bengaluru Circle. ASI Bengaluru Circle. Archived from the original on 2 May 2015. பார்க்கப்பட்ட நாள் 4 April 2013.

குறிப்புகள்[தொகு]