சூப்பர் ஜூனியர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சூப்பர் ஜூனியர்
2015 இல் கே காண் இசை விழாவில் சூப்பர் ஜூனியர் பங்குபெறும் பொது
இடமிருந்து வலமாக: கிம் ரியோ-வூக், லீ டோங்ஹே, லீடூக், காங்கின், சோய் சி-வோன், யேசுங், யூன்யுக், சோ கியூ-ஹைன் மற்றும் கிம் ஹீ-சுல்.
பின்னணித் தகவல்கள்
பிற பெயர்கள்சூப்பர் ஜூனியர் 05 (2005-2006)
பிறப்பிடம்சியோல், தென் கொரியா
இசை வடிவங்கள்
இசைத்துறையில்2005–present
வெளியீட்டு நிறுவனங்கள்
  • எஸ்எம்
  • லேபிள் எஸ்.ஜே
  • அவெக்ஸ் ட்ராக்ஸ்
இணைந்த செயற்பாடுகள்
  • சூப்பர் ஜூனியர்-கே.ஆர்.ஒய்.
  • சூப்பர் ஜூனியர்-டி
  • சூப்பர் ஜூனியர்-எம்
  • சூப்பர் ஜூனியர்-எச்
  • சூப்பர் ஜூனியர்-டி & இ
  • எஸ்.எம். டவுன்
இணையதளம்superjunior.smtown.com
உறுப்பினர்கள்
  • லீடூக்
  • கிம் ஹீ-சுல்
  • யேசுங்
  • ஷிண்டோங்
  • லீ சுங்-மின்
  • யூன்யுக்
  • லீ டோங்ஹே
  • சோய் சி-வோன்
  • கிம் ரியோ-வூக்
  • சோ கியூ-ஹைன்
முன்னாள் உறுப்பினர்கள்
  • ஹான் ஜெங்
  • காங்கின்
  • கிம் கி-பும்

சூப்பர் ஜூனியர் (슈퍼주니어) என்பது நவம்பர் 5, 2005 ஆம் ஆண்டு முதல் எஸ்.எம் என்டர்டெயின்மெண்ட் நிறுவனத்தால் ஆரம்பிக்கப்பட்ட தென் கொரிய நாட்டு ஆண்கள் இசைக்குழுவாகும்.[1][2] இந்த குழு ஆரம்பத்தில் மொத்தம் பதின்மூன்று உறுப்பினர்களைக் கொண்டிருந்தது. இக்குழுவில் முதலில் லீடூக், கிம் ஹீ-சுல், ஹான் ஜெங், யேசுங், காங்கின், ஷிண்டோங், சங்மின், யூன்ஹுக், லீ டோங்ஹே, சோய் சி-வோன் மற்றும் கிம் ரியோ-வூக் போன்ற பன்னிரண்டு உறுப்பினர்களுடன் அறிமுகமானது. பின்னர் 2006 இல் கிம் கி-பும் மற்றும் சோ கியூ-ஹைன் ஆகியோர் இக் குழுவில் சேர்ந்தனர்.

இக்குழு 2009 ஆம் ஆண்டில் அவர்களின் சிறந்த விற்பனைப் படைப்பான "சாரி சாரி"என்ற பாடல் சர்வதேச அங்கீகாரத்தை அடைத்தது.[3][4] இப்பாடல் அவர்களுக்கு வசூல் ரீதியாகவும் மற்றும் விமர்சன ரீதியாகவும் மிகப்பெரிய வெற்றியை கொடுத்தது.

2009 ஆம் ஆண்டில் சாதகமற்ற ஒப்பந்த விதிமுறைகள் காரணமாக எஸ்.எம் மீது ஹான் ஜெங் வழக்குத் தாக்கல் செய்தார் மற்றும் 2011 இல் அதிகாரப்பூர்வமாக குழுவிலிருந்து வெளியேறினார். 2015 ஆம் ஆண்டில் எஸ்.எம் உடனான கிபூமின் ஒப்பந்தம் முடிவடைந்தது, 2019 ஆம் ஆண்டில், காங்கின் தானாக முன்வந்து குழுவிலிருந்து வெளியேறினார். 2021 ஆம் ஆண்டு நிலவரப்படி, சூப்பர் ஜூனியர் ஒன்பது உறுப்பினர்களைக் கொண்டுள்ளது.

சூப்பர் ஜூனியர் தொடர்ச்சியாக நான்கு ஆண்டுகளாக அதிகளவான பாடல்கள் விற்பனை செய்தது . இந்த குழு மெனட் ஆசிய இசை விருதுகளிலிருந்து பதின்மூன்று இசை விருதுகளைப் பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Ahli
  • Leeteuk
  • Heechul
  • Yesung
  • Kangin
  • Shindong
  • Sungmin
  • Eunhyuk
  • Siwon
  • Donghae
  • Ryeowook
  • Kyuhyun
Bekas ahli
  • Hangeng
  • Kibum
  • Kangin

மேற்கோள்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=சூப்பர்_ஜூனியர்&oldid=3630915" இலிருந்து மீள்விக்கப்பட்டது