மஹபூப் சௌக் கடிகார கோபுரம்

ஆள்கூறுகள்: 17°21′42″N 78°28′15″E / 17.36177°N 78.47092°E / 17.36177; 78.47092
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
மஹபூப் சௌக் கடிகார கோபுரம்
அமைவிடம்ஐதராபாத்து (இந்தியா), இந்தியா
1890களில் மஹபூப் சௌக் கடிகார கோபுரம்

மஹபூப் சௌக் கடிகார கோபுரம் (Mahboob Chowk Clock Tower) என்பது ஐந்து மாடி கட்டடக்கலை கடிகார கோபுரம் ஆகும். இது 1892 ஆம் ஆண்டில் ஐதராபாத் மாநிலத்தின் பிரதமர் உஸ்மான் ஜா பஷீர்-உத்-தௌலா என்பவரால் கட்டப்பட்டது. ஐதராபாத்தின் ஆறாவது நிசாம் ( மிர் மஹபூப் அலி கான் )]] பெயரிடப்பட்ட மஹபூப் சௌக் பகுதி ஐதராபாத்தின் ஒரு முக்கியக் கட்டடக்கலை பாரம்பரியமாக கருதப்படுகிறது. [1]

கடிகார கோபுரம் சிறிய தோட்டத்தின் நடுவில் ஐந்து தளங்களில் அமைக்கப்பட்டுள்ளது. அதன் பக்கங்களில் நான்கு பெரிய கடிகாரங்கள் உள்ளன. அவை எந்த திசையிலிருந்தும் நேரத்தைக் காண உதவுகின்றன. கடிகார கோபுரம் துருக்கிய பாணியில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த கோபுரம் சார்மினருக்கு மேற்கே அமைந்துள்ளது. இது இலாட் பஜாரிலிருந்து வெகு அருகில் அமைந்துள்ளது. [2] [3] [4] [5]

மேற்கோள்கள்[தொகு]

  1. "Mahboob Chowk clock tower cries for attention". The Hans India (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2018-11-17.
  2. "Mahboob Chowk Clock Tower lies in neglect". The Siasat Daily. 21 October 2014.
  3. "Hyderabad's Heritage - Mesmerising Architectural Splendours". KnowAP. 2 July 2009. Archived from the original on 17 நவம்பர் 2018. பார்க்கப்பட்ட நாள் 13 மே 2021.
  4. "After decades of neglect, Hyd's 126-year-old Mahboob Chowk clock starts ticking again". The News Minute. 2018-10-01. https://www.thenewsminute.com/article/after-decades-neglect-hyds-126-year-old-mahboob-chowk-clock-starts-ticking-again-89242. 
  5. "Time stands still at Mahboob Chowk, only apathy ticks - Times of India". The Times of India. https://timesofindia.indiatimes.com/city/hyderabad/time-stands-still-at-mahboob-chowk-only-apathy-ticks/articleshow/56349851.cms.