சார் காமன்

ஆள்கூறுகள்: 17°21′44″N 78°28′29″E / 17.36222°N 78.47472°E / 17.36222; 78.47472
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சார்மினாரை பார்த்தபடி சார் காமன்

சார் காமன் (Char Kaman) (நான்கு வாயில்கள் என்று பொருள்) இந்திய மாநிலமான தெலங்காணாவின் ஐதராபாத்து நகரிலுள்ள நான்கு வரலாற்று கட்டமைப்புகளாகும். [1] இது சார்மினார் அருகே அமைந்துள்ளது. [2] சார்மினாரின் கட்டமைப்புகள் முடிந்தபின், அதன் வடக்கே சுமார் 60 அடி உயரமும் 30 அடி அகலமும் கொண்ட நான்கு உயரமான வளைவுகள் இந்திய-பாரசீக பாணியில் 1592இல் கட்டப்பட்டன. [3]

நான்கு வளைவுகளின் பெயர்கள் சார்மினார் காமன், மச்சிலி காமன், காளி காமன், ஷெர்-இ-பாட்டில்-கி-காமன்.[4] கலை மற்றும் கலாச்சார பாரம்பரியத்திற்கான இந்திய தேசிய அறக்கட்டளையால் ஒரு பாரம்பரிய கட்டமைப்பாக சார் காமன் அறிவிக்கப்பட்டுள்ளது. [5]

பராமரிப்பு[தொகு]

வரலாற்று பாரம்பரிய தளமான சார் காமன்களை மீட்டெடுக்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது. குறிப்பாக ரூ. 87 லட்சத்தை ஐதராபாத்து பெருநகர வளர்ச்சிக் கழகம் ஒதுக்கியுள்ளது. இந்த வளைவுகளில் சிதைந்த வளைவுகள் அகற்றப்பட்டன. அருகிலுள்ள கடைகள் அப்புறப்படுதப்பட்டன. மேலும், செதுக்கப்பட்ட வளைவுகளில் பழுது மற்றும் வண்ணமயமாக்கல் பணிகள் மேற்கொள்ளப்பட்டன.

மேற்கோள்கள்[தொகு]

  1. Henry, Nikhila (2011-07-10). "Char kaman in Old City faces monumental neglect - Times Of India". Times of India. http://timesofindia.indiatimes.com/city/hyderabad/Char-kaman-in-Old-City-faces-monumental-neglect/articleshow/9169234.cms. பார்த்த நாள்: 12 December 2018. 
  2. "Andhra Pradesh / Hyderabad News : Charminar pedestrianisation a far cry?". Chennai, India: The Hindu. 2010-07-01 இம் மூலத்தில் இருந்து 2010-07-07 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20100707143536/http://www.hindu.com/2010/07/01/stories/2010070161890300.htm. பார்த்த நாள்: 12 December 2018. 
  3. Landmarks of the Deccan: A Comprehensive Guide to the Archaeological Remains of the City and Suburbs of Hyderabad. 1992. https://books.google.com/books?id=wgo97XF0XuYC. 
  4. "Glory of the gates". தி இந்து (Chennai, India). 10 March 2004 இம் மூலத்தில் இருந்து 9 டிசம்பர் 2012 அன்று. பரணிடப்பட்டது.. https://archive.today/20121209014948/http://www.hindu.com/mp/2004/03/10/stories/2004031000490300.htm. 
  5. "HERITAGE - SITES". INTACH Hyderabad Chapter. Archived from the original on 6 அக்டோபர் 2011. பார்க்கப்பட்ட நாள் 5 செப்தெம்பர் 2011.
"https://ta.wikipedia.org/w/index.php?title=சார்_காமன்&oldid=3315254" இலிருந்து மீள்விக்கப்பட்டது