மதீனா கட்டிடம், ஐதராபாத்து

ஆள்கூறுகள்: 17°22′N 78°30′E / 17.367°N 78.500°E / 17.367; 78.500
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
மதீனா கட்டிடம்
அண்மைப்பகுதி
மதீனா கட்டிடம்
மதீனா கட்டிடம்
மதீனா கட்டிடம் is located in தெலங்காணா
மதீனா கட்டிடம்
மதீனா கட்டிடம்
தெலங்காணாவில் கட்டிடத்தின் அமைவிடம்
மதீனா கட்டிடம் is located in இந்தியா
மதீனா கட்டிடம்
மதீனா கட்டிடம்
மதீனா கட்டிடம் (இந்தியா)
ஆள்கூறுகள்: 17°22′N 78°30′E / 17.367°N 78.500°E / 17.367; 78.500
நாடு இந்தியா
மாநிலம்தெலங்காணா
மாவட்டம்ஐதராபாத்து
மெற்றோஐதராபாத்து
திட்டமிடல் நிறுவனம்பெருநகர ஐதராபாத்து மாநகராட்சி நிர்வாகம்
சுமார் 1938களில் மதீனா கட்டிடம்.

மதீனா கட்டிடம் ( Madina building ) என்பது வக்ஃப் வாரிய சொத்தாகும். மேலும் இது ஹஜ் யாத்ரீகர்களுக்கு சேவை செய்யும் நோக்கில் கட்டப்பட்டுள்ளது. [1]

வரலாறு[தொகு]

சவூதி அரேபியாவின் புனித நகரமான மதீனாவில் வசிக்கும் முஸ்லிம்களுக்கு ஆதரவளிக்கும் நோக்கில் இக்கட்டிடம் கட்டப்பட்டது. இந்த கட்டிடம் மூலம் பெறப்படும் வாடகை மதீனாவின் ஹெஜாஸில் வசிப்பவர்கள் மத்தியில் விநியோகிக்கப்பட்டது. நவாப் அல்லாதீனின் குடும்பம் இதற்கு முக்கிய காரணமாக இருந்தது. [2] இந்தக் கட்டிடத்தில் சுமார் 200 கடைகளும் 100 குடியிருப்புகளும் உள்ளன. [3]

வணிகப் பகுதி[தொகு]

மதீனா கட்டிடம் இந்தியாவின் ஐதராபாத்தின் மிகப் பழமையான வணிக புறநகர்ப் பகுதியாகும். இது வரலாற்று புகழ் பெற்ற சார்மினருக்கு மிக அருகில் உள்ளது. [4] இது ஐதராபாத்தில் உள்ள ஒரு முக்கிய பாரம்பரிய சில்லறை வீதி. இக்கட்டிடம் அண்டை வணிகப் பகுதிகளான பதர்கட்டி, ஷெஹ்ரான், சார்மினார், இலாட் பஜார் ஆகியவற்றுடன் இணைக்கப்பட்டுள்ளது. இது பெண்களுக்காகவும், மணப்பெண்களுக்காகவும் பிரத்யேகமாக கடைகளைக் கொண்டுள்ளது. மேலும் தினமும் மில்லியன் கணக்கில் வணிகங்கள் இந்த பிராந்தியத்தில் செய்யப்படுகின்றன. [5] திருமண ஆடைகளில் பெரும்பாலானவை அண்டை மாநிலங்களான, அமெரிக்கா, ஐரோப்பா, மத்திய கிழக்கு, பாக்கித்தான், வங்காளதேசம் போன்ற பல நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகின்றன. புனித ரமலான் மாதத்தில் இங்கு மக்கள் கூட்டம் அதிகமாக இருக்கும். [6]

தெருவில் நகர அடிப்படை உணவு உணவுகளை வழங்கும் பல உணவகங்கள் உள்ளன, மதீனா உணவு விடுதி போன்ற சில பிரபலமான ஐதராபாத்து உணவகங்கள் உள்ளன. இது அனைத்து பிரபலமான ஐதராபாத்து உணவுகளையும் வழங்குகிறது. புனித ரமலான் மாதத்தில் வழங்கப்படும் ஐதராபாத்து கலீமுக்கு இவை மிகவும் பிரபலமாக உள்ளன.

மதீனா உணவு விடுதி[தொகு]

1947 ஆம் ஆண்டில் கட்டிடத்தின் வெளியே மதீனா உணவு விடுதி திறக்கப்பட்டது. [7] [8]

போக்குவரத்து[தொகு]

தெலங்காணா மாநில அரசின் பேருந்து நிறுவனம் பேருந்துகளை இயக்குகின்றன. இது நகரின் அனைத்து பகுதிகளையும் இணைகிறது. அருகிலுள்ள எம்.எம்.டி.எஸ் தொடர் வண்டி நிலையம் யாகுத்புரா அல்லது மலக்பேட்டில் உள்ளது .

மேற்கோள்கள்[தொகு]

  1. "Waqf". Aug 31, 2018.
  2. Warren, Frederick Ilchman; Stanley, Nider Katz; Edward, L.Queen (1998). Philanthropy in the World's traditions. Indiana University Press. பக். 294–295. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:0-253-33392-X. https://books.google.com/books?id=zMYViaXor6cC. பார்த்த நாள்: 15 June 2012. 
  3. Staff Reporter. "Fire at Madina building". https://www.thehindu.com/news/cities/Hyderabad/Fire-at-Madina-building/article15906354.ece. 
  4. Bollards to go between Madina and Charminar
  5. "Textile traders mull moving out of Hyderabad". The Times of India. 20 June 2013. http://timesofindia.indiatimes.com/city/hyderabad/Textile-traders-mull-moving-out-of-Hyderabad/articleshow/20673584.cms. 
  6. Ramzan sans haleem from Madina Hotel
  7. parasa, Rajeswari (2018-05-17). "Hyderabad: New Madina opens, no resemblance to the past". Deccan Chronicle (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2019-05-31.
  8. "Hyderabad: Rahul Gandhi will have a dinner in Madina hotel". The Siasat Daily (in பிரிட்டிஷ் ஆங்கிலம்). 2018-08-04. பார்க்கப்பட்ட நாள் 2019-05-31.