புக்கிட் கந்தாங்

ஆள்கூறுகள்: 4°46′N 100°45′E / 4.767°N 100.750°E / 4.767; 100.750
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
புக்கிட் கந்தாங்
Bukit Gantang
武吉干当
புக்கிட் கந்தாங் நகரில் புக்கிட் கந்தாங் ஆறு
புக்கிட் கந்தாங் நகரில் புக்கிட் கந்தாங் ஆறு
நாடு மலேசியா
மாநிலம் பேராக்
உருவாக்கம்கி.பி. 1800
நேர வலயம்மலேசிய நேரம் (ஒசநே+8)
 • கோடை (பசேநே)பயன்பாடு இல்லை (ஒசநே)
இணையதளம்http://www.mptaiping.gov.my/

புக்கிட் கந்தாங் (மலாய்: Bukit Gantang) என்பது மலேசியாவின் பேராக் மாநிலத்தில், லாருட், மாத்தாங், செலாமா மாவட்டத்தில் உள்ள ஒரு சிறிய நகரம். இந்த நகரத்தைச் சுற்றிலும் நிறைய சுண்ணாம்புக் குன்றுகளும் சுண்ணாம்பு மலைகளும் உள்ளன.

ஈப்போ மாநகரில் இருந்து 69 கி.மீ. தொலைவில் அமைந்து உள்ளது. மலேசியாவின் மிக நீளமான இரயில் சுரங்கங்களில் ஒன்றான புக்கிட் பெராப்பிட் இரயில் சுரங்கம் இங்குதான் உள்ளது. வடக்கு-தெற்கு நெடுஞ்சாலைக்கு அருகில் புக்கிட் காந்தாங் உள்ளது.

இந்த நகரத்திற்கு அருகில் உள்ள நகரங்கள்: சங்காட் ஜெரிங்; கம்போங் செ; மாத்தாங்; பாடாங் ரெங்காஸ்; கோலா செபாத்தாங்.[1] இந்தப் பகுதி ஒரு விவசாய பகுதியாகும். குறிப்பாக நெல், ரப்பர், எண்ணெய் பனை மற்றும் பழ மரங்கள் விவசாயம் செய்யப் படுகின்றன.

புக்கிட் கந்தாங்கிற்கு 'வெப்பமண்டலப் பழக் கிராமம்' (Tropical Fruit Village) எனும் புனைப்பெயரும் கிடைத்து உள்ளது.[2] இங்கு வாழ்பவர்களில் பெரும்பாலோர்ர் மலாய்க்காரர்கள்.

2007 புக்கிட் கந்தாங் பேருந்து விபத்து[தொகு]

2007 ஆகஸ்ட் 13-ஆம் தேதி புக்கிட் கந்தாங்கில் நடந்த பேருந்து விபத்து மலேசிய வரலாற்றில் மிக மோசமான வாகன விபத்துகளில் ஒன்றாகும். வடக்கு-தெற்கு அதிவேக நெடுஞ்சாலையின் 229-ஆவது கிலோமீட்டரில் அந்த விபத்து நடந்தது.

2010-ஆம் ஆண்டு கேமரன் மலையில் நடந்த பேருந்து விபத்தில் 27 பேர் பலியானார்கள். மற்றும் 2013-ஆம் ஆண்டு கெந்திங் மலையில் நடந்த பேருந்து விபத்தில் 37 பேர் பலியானார்கள்.

பேராக் புக்கிட் பெராப்பிட், புக்கிட் கந்தாங் - சங்காட் ஜெரிங் அருகே நடந்த இந்த விபத்தில் விரைவுப் பேருந்தின் 20 பயணிகள் கொல்லப் பட்டனர். அதிகாலை 4.40 மணியளவில் அந்த விபத்து நிகழ்ந்தது. பேருந்து ஓட்டுநர் ரோஹிசான் அபுபக்கர் என்பவர் பேருந்துக் கட்டுப்பாட்டை இழந்ததால் இந்த அகோர விபத்து நடந்தது.[3]

இனவாரியாக புக்கிட் கந்தாங் வாக்காளர்கள்[தொகு]




2018 நிலவரப்படி இனவாரியாகப் புக்கிட் கந்தாங் வாக்காளர்கள்[4]

  மலாய்க்காரர்கள் (72.39%)
  சீனர்கள் (18.9%)
  இந்தியர்கள் (8.41%)
  வேறு இனத்தவர்கள் (0.3%)

1984-ஆம் ஆண்டில் இந்தத் தொகுதி உருவாக்கப்பட்டது. லாருட், மாத்தாங், செலாமா மாவட்டத்தில் ஒரு தொகுதி. 1986-ஆம் ஆண்டில் இருந்து நாடாளுமன்ற மக்களவையில் இந்தத் தொகுதி பிரதிநிதிக்கப் படுகிறது.

2018 மார்ச் 30-இல் வெளியிடப்பட்ட கூட்டரசு அரசிதழின் படி, (Federal Government Gazette: Notice of Polling Districts and Polling Centres for the Federal and State Constituencies of the States of Malaya [P.U. (B) 157/2018] Bukit Gantang) புக்கிட் கந்தாங் தொகுதி 37 வாக்குச் சாவடி மாவட்டங்களாகப் பிரிக்கப்பட்டு உள்ளது.[5]

மேற்கோள்கள்[தொகு]

  1. Bukit Gantang merupakan Mukim dalam Daerah Taiping Negeri Perak Darul Ridzuan. Mukim Bukit Gantang terletak di bawah pentadbiran Larut Matang dan Selama.
  2. Kawasan ini merupakan kawasan pertanian khususnya padi sawah, getah, kelapa sawit dan buah-buahan. Bukit Gantang mendapat julukan 'Tropical Fruit Village'.
  3. One of the country's worst road accidents, which occurred in the wee hours of yesterday on the North-South Expressway near here, was a disaster waiting to happen.
  4. "14th General Election Malaysia (GE14 / PRU14) - Results Overview". election.thestar.com.my. பார்க்கப்பட்ட நாள் 2020-06-20.
  5. மலேசியா 2018 மக்கள் தொகை புள்ளிவிவரங்கள்


"https://ta.wikipedia.org/w/index.php?title=புக்கிட்_கந்தாங்&oldid=3145109" இலிருந்து மீள்விக்கப்பட்டது