லாவாஷ்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

லாவாஷ் (Lavash; ஆர்மீனியம்: լավաշ, சியார்சிய: ლავაში, பாரசீக மொழி: لواش‎ — lavâš, தத்தாரியம்: lәvәş, துருக்கியம்: lavaş; உருசியம்: Лава́ш) என்பது ஆர்மேனியா அசர்பைஜான், ஈரான் மற்றும் துருக்கி ஆகிய நாடுகளில் உண்ணப்படும் ஒரு மெல்லிய வகையிலான தட்டை ரொட்டி ஆகும். இது தந்தூரில் சுடப்படுகிறது.[1][2]

லாவாஷ்
வகைஉரொட்டி
பகுதிமேற்காசியா and மத்திய ஆசியா
பரிமாறப்படும் வெப்பநிலைசூடாகவும் குளிர்மையாகவும்
லாவாஷ் என்னும் ஆர்மேனிய பண்பாட்டின் பாரம்பரிய ரொட்டியின் தயாரிப்பு, அர்த்தம் மற்றும் தோற்றம்
ஆர்மேனியாவில் லாவாஷ் தயாரிப்பு
நாடுஆர்மேனியா
களம்உணவு
மேற்கோள்985
கல்வெட்டு வரலாறு
கல்வெட்டு2014 (9வது அமர்வு)

தயாரிப்பு[தொகு]

லாவாஷ் தயாரிப்பு

மாவு, நீர், நொதியம், உப்பு மற்றும் சர்க்கரையால் லாவாஷ் தயாரிக்கப்படுகிறது. சிலமுறைகளில் எள்விதைகள் சுடுவதற்கு முன் தூவப்படுகின்றன. பாரம்பரியமாகவே தந்தூர் என்று அழைக்கப்படும் கூம்பு வடிவிலான களிமண் அடுப்பில் லாவாஷ் சுடப்படுகிறது. ஆனால் தற்போதெல்லாம் தோசைக்கல் போன்ற அமைப்பிலேயே சுட்டு விடுகிறார்கள். [3]

பாரம்பரியம்[தொகு]

அசர்பைஜானில் உள்ள சபிராபாத் மாவட்டத்தில் திருமணமான கையோடு மணப்பெண் தன் புது வீட்டில் காலடி எடுத்து வைக்கும் முன்னர், அப்பெண்ணின் மாமியார் லாவாஷை அவரின் தோள்களில் வைத்து, "வளம்மிகு வீட்டிற்கு உம்மை வரவேற்கிறேன். உன் காலடிகள் இவ்வீட்டிற்கு நற்பேறு உண்டாகட்டும்" என்று கூறி வரவேற்கும் வழக்கம் உள்ளது.[4]

மேற்கோள்கள்[தொகு]

  1. "தி ஆக்ஸ்ஃபோர்ட் கம்பேனியன் ஆஃப் ஃபுட்ஸ் - கூகுள் புக்ஸ்".
  2. "லாவாஷ் தயாரிப்பது எப்படி? - ஸ்மித்சோனியன்".
  3. "லாவாஷ் ரெசிப்பி - ஹரியெட்".
  4. Кулиева Н. М. Современная сельская семья и семейный быт в Азербайджане / Под ред. доктора исторических наук Т. Г. Мусаевой. — Б.: «Элм», 2011. — С. 122.
"https://ta.wikipedia.org/w/index.php?title=லாவாஷ்&oldid=3144697" இலிருந்து மீள்விக்கப்பட்டது