அனில் மல்நாட்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஜி. ஆர். அனில் மல்நாட்
பிறப்புஜி. ஆர். தத்ராத்ரேயா
12 அக்டோபர் 1957
கருநாடகம், மல்நாட்
இறப்பு19 மார்ச்சு 2018(2018-03-19) (அகவை 60)
தமிழ்நாடு சென்னை
பணிபடத்தொகுப்பாளர்

அனில் மல்நாட் (Anil Malnad, 12 அக்டோபர் 1957 [1] - 19 மார்ச் 2018 [2] ) என்பவர் ஒரு இந்திய திரைப்பட படத்தொகுப்பாளர் ஆவார். இவர் தெலுங்கு, தமிழ், ஒடியா மொழிகளில் 200 க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் பணியாற்றியுள்ளார். தெலுங்கு திரைப்படமான சிதாரா (1984) படத்திற்கான சிறந்த படத் தொகுபுக்கான தேசிய திரைப்பட விருதை வென்றார்.

வாழ்க்கை குறிப்பு[தொகு]

இவர் இந்திய ஒன்றியம், கர்நாடகத்தின், மலைநாட்டில் பிறந்தார். இவருக்கு பெற்றோர் இட்டபெயர் ஜி. ஆர். தத்தாத்ரேயா மல்நாட் ஆகும். பாபு இயக்கிய 1971 ஆம் ஆண்டு வெளியான தெலுங்கு திரைப்படமான சம்பூர்ண ராமாயணம் படத்தில் உதவி இயக்குநராக தனது திரைப்பட வாழ்க்கையைத் தொடங்கினார். பின்னர் இவர் ஒரு படத்தொகுப்பாளராகி, பாபுவின் வம்ச வ்ருட்சம் (1980) படத்தில் படத் தொகுப்பாளராக அறிமுகமானார்.

மல்நாட் தனது குடும்பத்தினருடன் சென்னை குரோம்பேட்டையில் வசித்து வந்தார். இவர் தனது 66 வயதில் மாரடைப்பால் பாதிகபட்டு, 19 மார்ச் 2018 அன்று சென்னையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் காலமானார்..

தேர்ந்தெடுக்கப்பட்ட திரைப்படவியல்[தொகு]

தமிழ்[தொகு]

குறிப்புகள்[தொகு]

 

வெளி இணைப்புகள்[தொகு]

ஐ.எம்.டி.பி இணையத்தளத்தில் அனில் மல்நாட்

"https://ta.wikipedia.org/w/index.php?title=அனில்_மல்நாட்&oldid=3142127" இலிருந்து மீள்விக்கப்பட்டது