மேற்கோள் மதிப்பெண்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

ஒரு சகமதிப்பாய்வு ஆய்வு இதழின் மேற்கோள் மதிப்பெண் (CiteScore) என்பது அந்த இதழில் வெளியிடப்பட்ட சமீபத்திய கட்டுரைகளுக்கு ஆண்டு சராசரி மேற்கோள்களின் எண்ணிக்கையைப் பிரதிபலிக்கும் மதிப்பாகும். இந்த ஆய்விதழ் மதிப்பீடானது பொதுவாகப் பயன்படுத்தப்படும் ஆய்விதழ் மேற்கோள் அறிக்கை தாக்கக் காரணிகளுக்கு மாற்றாக எல்செவியரால் திச திசம்பர் 2016-ல் தொடங்கப்பட்டது (கிளாரிவேட் கணக்கிடுகிறது). மேற்கோள் மதிப்பெண் இசுகோபசு தரவுத்தளத்தில் பதிவு செய்யப்பட்ட மேற்கோள்களை அடிப்படையாகக் கொண்டது. மேலும் இந்த மேற்கோள்கள் முந்தைய நான்கு ஆண்டுகளில் வெளியிடப்பட்ட ஆய்வுக் கட்டுரைகளுக்குச் சேகரிக்கப்படுகின்றன.

கணக்கீடு[தொகு]

எந்தவொரு குறிப்பிட்ட வருடத்திலும், ஒரு ஆய்விதழின் மேற்கோள் மதிப்பெண் என்பது அந்த ஆண்டு மற்றும் முந்தைய 3 ஆண்டுகளில் பெறப்பட்ட மேற்கோள்களின் எண்ணிக்கை, அந்த காலகட்டத்தில் (நான்கு ஆண்டுகள்) ஆய்விதழில் வெளியிடப்பட்ட ஆவணங்களின் மொத்த எண்ணிக்கையால் (கட்டுரைகள், பத்திரிகையின் மதிப்புரைகள், மாநாட்டு ஆவணங்கள், புத்தக அத்தியாயங்கள் மற்றும் தரவு ஆவணங்கள்) வகுத்துப் பெறப்படுகிறது.[1]

எடுத்துக்காட்டாக, நேச்சர் ஆய்விதழின் 2019 ஆம் ஆண்டின் மேற்கோள் மதிப்பெண் 51.0[2]
[3]எல்லா தரவுகளும் முழுமையாகக் கிடைத்தபோது, 2018ஆம் ஆண்டில் 2017 மேற்கோள் மதிப்பெண் முதலில் அறிவிக்கப்பட்டது என்பதை நினைவில் கொள்க. மேற்கோள் மதிப்பெண் பொதுவாக மே மாத இறுதியில் வெளியிடப்படுகிறது.[4] ஆய்விதழ் தாக்க அறிக்கை தாக்கக் காரணி வெளியிடுவதற்கு ஏறக்குறைய ஒரு மாதம் முன்னதாக வெளியிடப்படும்.[5] கொடுக்கப்பட்ட ஒவ்வொரு மேற்கோள் மதிப்பெண் கணக்கீட்டு தேதியையும் பின்னர் சேர்த்தல், திருத்தங்கள் அல்லது தரவுகளில் நீக்குதல் ஆகியவை மதிப்பெண் புதுப்பிப்புக்கு வழிவகுக்காது என்பதையும் கருத்தில் கொள்க.[6] இசுகோபசு அடுத்த ஆண்டிற்கான திட்டமிடப்பட்ட மேற்கோள் மதிப்பெண்ணையும் வழங்குகிறது. இவை ஒவ்வொரு மாதமும் புதுப்பிக்கப்படுகிறது.[1]

பழைய கணக்கீடு[தொகு]

2020க்கு முன்னர் இந்த மதிப்பானது வேறு வடிவில் கணக்கிடப்பட்டது. ஒரு குறிப்பிட்ட ஆண்டில், ஒரு பத்திரிகையின் மேற்கோள் மதிப்பெண், அந்த ஆண்டில் பெறப்பட்ட மேற்கோள்களின் எண்ணிக்கை, முந்தைய மூன்று ஆண்டுகளில் அந்த இதழில் வெளியிடப்பட்ட கட்டுரைகளின் மொத்த எண்ணிக்கையின் அடிப்படையில் வெளியிடப்பட்டது:[1]

எடுத்துக்காட்டாக, நேச்சர் 2017இன் மேற்கோள் எண் 14.456.

இந்த கணக்கீட்டு முறை மாற்றப்பட்டதால், மேற்கோள் மதிப்பெண் ஒப்பிடும் போது கணக்கீட்டுத் தேதியை அறிவது முக்கியமானதாகும். எடுத்துக்காட்டாக, 2017 இல் நேச்சர் மேற்கோள் மதிப்பெண், 2020ஆம் ஆண்டு கணக்கீட்டு முறையில் கணக்கிடப்படுகிறது. இதனடிப்படையில் இந்த மேற்கோள் மதிப்பெண் 53.7 ஆகும்.[7]

மேற்கோள் மதிப்பெண் & ஆய்விதழ் தாக்க காரணி[தொகு]

மேற்கோள் மதிப்பெண் & அமெரிக்கன் கெமிக்கல் சொசைட்டி (ஏசிஎஸ், பச்சை) மற்றும் நேச்சர் குழு பத்திரிகைகள் (நீலம்), 2017 தரவுகளுக்கான ஆய்வு தாக்க காரணி மதிப்புகள் எதிர்பார்த்த ca. 1: 1 நேரியல் சார்பு, ஏனெனில் அந்த பத்திரிகைகளில் தலையங்கங்களின் குறிப்பிடத்தக்க பகுதியே உள்ளது.

மேற்கோள் மதிப்பெண்ணை இரண்டு ஆண்டு ஆய்விதழ் தாக்கக் காரணியுடன் போட்டியிட வடிவமைக்கப்பட்டுள்ளது. இது தற்போது மிகவும் பரவலாகப் பயன்படுத்தப்படும் ஆய்விதழ் மதிப்பீடு ஆகும்.[8][9] இவற்றின் முக்கிய வேறுபாடுகள் பின்வருமாறு:

அளவுரு தாக்க காரணி மேற்கோள் மதிப்பெண்
மதிப்பீட்டு காலம் (ஆண்டுகள்) 2 4
தரவுத்தளம் ஆய்விதழ் மேற்கோள் அறிக்கை இசுகோபசு
மேற்கோள் அட்டவணை ஆய்விதழ் எண்ணிக்கை (2016) 11,000 22,000
அணுகல் சந்தாதாரர்கள் யார் வேண்டுமானாலும்
மதிப்பிடப்பட்ட உருப்படிகள் கட்டுரைகள், மதிப்புரைகள் அனைத்து வெளியீடுகளும்

இதில் மற்றொரு வேறுபாடாக "வெளியீடுகளின் எண்ணிக்கை" அல்லது "பொருத்தமான உருப்படிகளின்" வரையறை உள்ளது.[10]

மேற்கோள்கள்[தொகு]

  1. 1.0 1.1 1.2 Journal Metrics – FAQs. journalmetrics.scopus.com
  2. calculated with data queried on May 6, 2020
  3. calculated with data queried on May 6, 2020
  4. Elsevier releases 2017 CiteScore™ values. elsevier.com. 31 May 2018
  5. Journal Citation Reports 2018 பரணிடப்பட்டது 2019-05-02 at the வந்தவழி இயந்திரம். clarivate.com. 26 June 2018
  6. For instance May 6, 2020 for CiteScore 2019 of Artificial Intelligence Review.
  7. CiteScore 2017 243783/4539=53.7
  8. Gray, Edward (2008). Comparison of Journal Citation Reports and Scopus Impact Factors for Ecology and Environmental Sciences Journals. doi:10.5062/F4FF3Q9G. 
  9. Journal Citation Reports: JCR பரணிடப்பட்டது 2021-05-03 at the வந்தவழி இயந்திரம். The University of Notre Dame Australia
  10. Van Noorden, Richard (2016). "Controversial impact factor gets a heavyweight rival". Nature 540 (7633): 325–326. doi:10.1038/nature.2016.21131. பப்மெட்:27974784. Bibcode: 2016Natur.540..325V. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=மேற்கோள்_மதிப்பெண்&oldid=3409649" இலிருந்து மீள்விக்கப்பட்டது