சிலிம்

ஆள்கூறுகள்: 3°51′N 101°29′E / 3.850°N 101.483°E / 3.850; 101.483
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சிலிம்
Slim
நாடு மலேசியா
மாநிலம் பேராக்
உருவாக்கம்1800
பரப்பளவு
 • மொத்தம்410 km2 (160 sq mi)
மக்கள்தொகை (2020)
 • மொத்தம்21,900
நேர வலயம்மலேசிய நேரம் (ஒசநே+8)
 • கோடை (பசேநே)பயன்பாடு இல்லை (ஒசநே)
இணையதளம்https://ptg.perak.gov.my/portal/web/muallim

சிலிம் (Slim) என்பது மலேசியா, பேராக் மாநிலத்தில், முவாலிம் மாவட்டத்தில் அமைந்து உள்ள ஒரு துணை மாவட்டம். முன்பு பத்தாங் பாடாங் மாவட்டத்தின் ஒரு பகுதியாக இருந்தது. 2016-ஆம் ஆண்டு புதிதாகத் தோற்றுவிக்கப்பட்ட முவாலிம் மாவட்டத்தில் ஒரு பகுதியாக இணைக்கப் பட்டது.

சிலிம் என்பதற்குச் செலிம் (Selim); சிலிம் கிராமம் (Slim Village); கம்போங் சிலிம் (Kampong Slim); சிலின் (Slin) எனும் வேறு பெயர்களும் உள்ளன.[1]

சிலிம் கிராமம் ஈப்போ மாநகரத்தில் இருந்து 95 கி.மீ.; கோலாலம்பூர் மாநகரத்தில் இருந்து 108 கி.மீ.; தொலைவில் அமைந்து உள்ளது. சிலிம் கிராமத்திற்கு மிக அருகாமையில் உள்ள பெரிய நகரம் தஞ்சோங் மாலிம் ஆகும்.

வரலாறு[தொகு]

மலாயாவில் காலனித்துவப் பிரித்தானிய ஆட்சியின் போது பிரித்தானிய முதலாளிமார்கள் ரப்பர் தோட்டங்களைத் தோற்றுவித்தார்கள். அந்தத் தோட்டங்களில் வேலை செய்வதற்காகத் தென்னிந்தியாவில் இருந்து ஆயிரக் கணக்கான தமிழர்கள் தோட்டத் தொழிலாளர்களாக அழைத்து வரப்பட்டார்கள்[2] .

1890 - 1900- ஆம் ஆண்டுகளில் சிலிம்; சிலிம் ரீவர்; துரோலாக்; பேராங் போன்ற இடங்களில் பல ரப்பர்த் தோட்டங்கள் உருவாக்கப்பட்டன. சிலிம் ரீவர் தோட்டம்; சிலிம் தோட்டம்; லீமா பெலாஸ் தோட்டம்; உலு சிலிம் தோட்டம்; சுங்கை பீல் தோட்டம் என பல ரப்பர்த் தோட்டங்கள்.

காடுகளை வெட்டுதல்; ரப்பர் மரங்களை நடவு செய்தல்; ரப்பர் பால் சேகரித்தல் போன்ற வேலைகளுக்காகத் தமிழர்கள் கொண்டு வரப் பட்டார்கள். இவர்களின் அயராத உழைப்பினால் மலாயாவின் காலனித்துவப் பிரித்தானிய ஆட்சியும் செழிப்புற்றது.[3]

சிலிம் ரீவர் ஒரு குட்டி மெட்ராஸ்[தொகு]

1900-ஆம் ஆண்டுகளில் சிலிம் ரீவர், பேராங், பீடோர் போன்ற நகரங்கள் வளர்ச்சிப் பெற்றதற்கு அந்த நகரங்களின் சுற்று வட்டாரத்தில் இருந்த ரப்பர்த் தோட்டங்களும் ஒரு காரணமாக அமைகின்றன. 1940-ஆம் ஆண்டுகளில் தஞ்சோங் மாலிம் நகரத்தைக் காட்டிலும் சிலிம் ரீவர் நகரில் தான் தமிழர்களின் நடமாட்டங்கள் அதிகமாக இருந்தன. குட்டி மெட்ராஸ் என்றும் சொல்லப் பட்டது.

அந்தக் காலக் கட்டத்தில், சிலிம் ரீவர் நகரில் தமிழர்கள் மூலைக்கு மூலை ஒட்டுக் கடைகள்; வெற்றிலைப் பாக்குக் கடைகள்; பலசரக்குக் கடைகள் வைத்து இருந்தார்கள். தவிர தமிழர்களின் மளிகைக் கடைகள்; துணிமணிக் கடைகள்; சிற்றுண்டிச் சாலைகளும் இருந்தன.

நாட்டின் மேம்பாட்டு வளர்ச்சித் திட்டங்களினால் சிலிம் பகுதியில் இருந்த பல ரப்பர் தோட்டங்கள் காணாமல் போய் விட்டன. அங்கு வாழ்ந்த தமிழர்களும் அவர்களின் வாரிசுகளும் கால வெள்ளத்தில் கரைந்து போய் விட்டார்கள்.[4]

மேற்கோள்கள்[தொகு]

  1. Kampung Kuala Slim Ada Keunikan Tersendiri.
  2. Arnold Lloyd's, Wright (1908). Twentieth century impressions of British Malaya. Great Britain: Greater Britain Publishing Company. பக். 420. 
  3. Gangulee, N. (1947). Indians in the Empire Overseas: A Survey. London: The New India Publishing House. பக். p 175 26Ibid., p 199. https://archive.org/details/in.ernet.dli.2015.476384. 
  4. Hugh, Tinker (1974). The New System of Slavery: The Export of Indian Labour Overseas (1830 – 1920). London: Oxford University Press. பக். 208. 


"https://ta.wikipedia.org/w/index.php?title=சிலிம்&oldid=3582603" இலிருந்து மீள்விக்கப்பட்டது