பீக்காம்

ஆள்கூறுகள்: 4°3′N 101°18′E / 4.050°N 101.300°E / 4.050; 101.300
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பீக்காம்
Bikam
比卡姆
நாடு மலேசியா
மாநிலம் பேராக்
உருவாக்கம்1880
நேர வலயம்மலேசிய நேரம் (ஒசநே+8)
 • கோடை (பசேநே)பயன்பாடு இல்லை (ஒசநே)
இணையதளம்http://www.mdtapah.gov.my/

பீக்காம் (Bikam) நகரம், மலேசியா, பேராக் மாநிலத்தில், பத்தாங் பாடாங் மாவட்டத்தில், சுங்கை துணை மாவட்டத்தில் அமைந்து உள்ள ஒரு சிறு கிராம நகரம். ஈப்போ, கோலாலம்பூர் மாநகரங்களை இணைக்கும், மலேசியாவின் வடக்கு-தெற்கு அதிவேக நெடுஞ்சாலை வழியில் இந்த நகரம் அமைந்து உள்ளது.

பழைய ஈப்போ, கோலாலம்பூர் கூட்டரசு நெடுஞ்சாலை வழியாகவும் இந்த நகரத்திற்குச் செல்லலாம்.[1] அத்துடன் பீடோர், தெலுக் இந்தான் நகரங்களை இணைக்கும் (Jalan Persekutuan 58) கூட்டரசு நெடுஞ்சாலை 58-க்கு அருகிலும் உள்ளது.

பீக்காம் கிராம நகரத்திற்கு வடக்கே பீடோர், தாப்பா நகரங்கள். தெற்கே சுங்கை, துரோலாக், சிலிம் ரீவர், தஞ்சோங் மாலிம் நகரங்கள். ஈப்போ மாநகரத்தில் இருந்து 64 கி.மீ.; கோலாலம்பூர் மாநகரத்தில் இருந்து 110 கி.மீ.; தொலைவில் பீக்காம் நகரம் அமைந்து உள்ளது.

பீக்காம் பழத்தோட்டங்கள்[தொகு]

பீக்காம் கிராம நகரத்திற்கு அருகில் கோலா பீக்காம் (Kuala Bikam) என்று மற்றொரு கிராம நகரம் உள்ளது. இந்த நகரத்தைச் சுற்றிலும் நிறைய பழத் தோட்டங்கள் உள்ளன. பப்பாளிப் பழத் தோட்டங்கள்; மாம்பழத் தோட்டங்கள்; நீர்க் கொய்யாத் தோட்டங்கள். பொதுவாகவே பீக்காம் கிராம நகரம் பழத் தோட்டங்களுக்கும்; பச்சை வனங்களுக்கும் புகழ் பெற்ற இடமாகும்.

கோலா பீக்காம் கிராம நகரத்தில் அதிகமான சீனர்கள் பழ வியாபாரம் செய்கிறார்கள். பெரும்பாலும் சீன தியாசியாவ் (Teochew) வம்சாவளியைச் சேர்ந்தவர்கள். ஏறக்குறைய 1500 சீன மக்கள். 1900-ஆம் ஆண்டுகளிலேயே இவர்கள் இங்கு குடியேறி விட்டார்கள். கடுமையான உழைப்பாளிகள். மூன்று தலைமுறைகளாக வாழ்கிறார்கள்.[2]

பீக்காம் தோட்டத் தமிழ்ப்பள்ளி[தொகு]

பீக்காம் பகுதியில் ஒரு தமிழ்ப்பள்ளி உள்ளது. பீக்காம் தோட்டத் தமிழ்ப்பள்ளி (SJKT Ladang Bikam). இந்தப் பள்ளியின் மாணவர்களில் பெண்கள் 16 பேர்; ஆண்கள் 6 பேர். அண்மைய காலங்களில் மாணவர்களின் எண்ணிக்கை கணிசமான அளவிற்குக் குறைந்து வருகிறது.

மூன்றாம் தலைமுறையைச் சேர்ந்த பெரும்பாலான தமிழ் இளைஞர்கள் கோலாலம்பூர், ஈப்போ, பினாங்கு பெரும் நகரங்களுக்கும்; வெளிநாடுகளுக்கும் புலம் பெயர்வதால் தமிழர்களின் எண்ணிக்கை சன்னம் சன்னமாய்க் குறைந்து வருகிறது. இதனால் தமிழ்ப்பள்ளிக்குச் செல்லும் மாணவர்களின் எண்ணிக்கையும் வெகுவாய்க் குறைந்து வருகிறது.

பீக்காம் தோட்டத் தமிழ்ப்பள்ளியில் மட்டும் அல்ல. மலேசியாவில் உள்ள பெரும்பாலான தமிழ்ப்பள்ளிகளில் முதலாம் வகுப்பிற்குச் செல்லும் மாணவர்களின் எண்ணிக்கை கடந்த 20 ஆண்டுகளில் கவலை அளிக்கும் வகையில் குறைந்து வருகிறது. எனினும் தமிழ் ஆர்வலர்களும் தமிழ் அமைப்புகளும் ’தமிழ்ப்பள்ளியே எங்கள் தேர்வு’ எனும் ஒரு சமூகப் பார்வையில் விழிப்புணர்வுகளை ஏற்படுத்தி வருகின்றனர். [3]

மேற்கோள்கள்[தொகு]


"https://ta.wikipedia.org/w/index.php?title=பீக்காம்&oldid=3842990" இலிருந்து மீள்விக்கப்பட்டது