தெம்புரோங் குகை

ஆள்கூறுகள்: 4°25′0″N 101°11′0″E / 4.41667°N 101.18333°E / 4.41667; 101.18333
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தெம்புரோங் குகை
Gua Tempurung
Tempurung Cave
தெம்புரோங் குகையின் காட்சி
தெம்புரோங் குகை Gua Tempurung Tempurung Cave இன் அமைவிடத்தைக் காட்டும் வரைபடம்
தெம்புரோங் குகை Gua Tempurung Tempurung Cave இன் அமைவிடத்தைக் காட்டும் வரைபடம்
அமைவிடம்கோப்பேங், பேராக், மலேசியா
ஆள்கூறுகள்4°25′0″N 101°11′0″E / 4.41667°N 101.18333°E / 4.41667; 101.18333
ஆழம்ஏறக்குறைய 150 மீ
நீளம்ஏறக்குறைய 3,000 மீ
கண்டுபிடிப்புகி.பி. 1892
நிலவியல்சுண்ணாம்புக் கல்
வாயில்கள்2
இடையூறுகள்இருண்ட குகை
Cave surveyபிரித்தானிய குகை ஆராய்ச்சியாளர்கள்

தெம்புரோங் குகை (மலாய்: Gua Tempurung; ஆங்கிலம்: Tempurung Cave); என்பது மலேசியாவின் பேராக் மாநிலத்தில், கோப்பேங் நகருக்கு அருகில் உள்ள ஒரு குகை ஆகும். இந்தக் குகையானது குகை ஆர்வலர் மத்தியில் பிரபலமாக உள்ளது. ஏறக்குறைய மூன்று கிலோமீட்டர் நீண்ட இந்தக் குகை மலேசியாவின் மிக நீண்ட குகைகளில் ஒன்றாகும். தவிர தீபகற்ப மலேசியாவில் மிக நீண்ட குகையாகவும் கருதப் படுகிறது.

தெம்புரோங் குகை 400 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்னர் உருவான குகையாகும். இந்தக் குகையில் சுண்ணாம்பு, ஈயம், பளிங்கு கற்கள், தாது பொருள்கள் புதைந்து உள்ளன.[1] கடந்த நூற்றாண்டில் பல்வேறு காலக் கட்டங்களில் இந்தக் குகையில் சில சிறிய அளவிலான ஈய சுரங்கங்கள் இருந்துள்ளன. [2]

இந்தக் குகை அமைந்து இருக்கும் கோப்பேங் நகரத்தைச் சுற்றிலும் சுண்ணாம்புக் குன்றுகளும் சுண்ணாம்பு மலைகளும் நிறைய உள்ளன.[3] சுண்ணாம்புக் குன்றுகளும் சுண்ணாம்பு மலைகளும் குடையப்பட்டு அங்கிருந்து சுண்ணாம்பு கற்கள் வெட்டி எடுக்கப் படுகின்றன. அவை சிமெண்ட் தயாரிக்க உதவுகின்றன.[4] ஈப்போவைச் சுற்றிலும் சிமெண்ட் ஆலைகள் உள்ளன.[5]

பொது[தொகு]

நிறம் மாறும் பாறைகள்[தொகு]

இந்தக் குகை போர்க் காலங்களில் மக்களைப் பாதுகாக்க மன்னர்களால் பயன்படுத்தப்பட்ட வரலாற்றுப் பின்னணியைக் கொண்டது. இயற்கையாக உருவான இந்த தெம்புரோங் குகையில் உலகிலேயே விலை உயர்ந்த சலவைக் கற்கள் உள்ளன.

இந்த மலைக் குகையில் உள்ள துளைகளின் வழியாக சூரிய ஒளி நுழையும் போது, குகையின் பாறைகள் நிறம் மாறுகின்றன. அருவி கொட்டுவது போலவும், பனி உறைந்து இருப்பது போலவும் மலைக் கற்கள் காட்சி தருகின்றன.[6]

மலாயா அவசரகாலத்தின் போது (1948-1960), Malayan National Liberation Army (MNLA) எனும் மலாயா தேசிய விடுதலை படையினர் குகையை ஒரு மறைவிடமாகப் பயன்படுத்தினார்கள். அவர்கள் விட்டுச் சென்ற சில கிறுக்கல்கள் இன்னும் சுவர்களில் காணப் படுகின்றன.[7][8]

தெம்புரோங் குகை விவரங்கள்[தொகு]

  • குகையின் மொத்த நீளம் 4.5 கி.மீ. இருப்பினும் ஏறக்குறைய 1.9 கி.மீ. தொலைவிற்கு மட்டுமே உள்ளே செல்ல பொதுமக்கள் அனுமதிக்கப் படுகின்றனர்.
  • இந்தக் குகை 1.6 கி.மீ. நீளமுள்ள நிலத்தடி நதியைக் கொண்டு உள்ளது.
  • குகை வளாகத்தில் 5 உயரமான குவிமாடங்கள் உள்ளன.
  • அவற்றில் தங்கநிறம் பாய்ந்த குவிமாடம் (Golden Flowstone Cavern) 90 மீட்டர் உயரம் கொண்டது. இதன் கீழே ஒரு நதி ஓடுகிறது. அதனால் அந்த நதி தங்க நிறத்தில் எப்போதும் மிளிர்கின்றது.
  • இராட்சச அடிநிலைக்குகை (Gergasi Cavern) 15 மீட்டர் உயரமுள்ள ஒரு பெரிய நெடுவரிசையைக் கொண்டு உள்ளது.
  • ஈயச் சுரங்க அடிநிலைக் குகையில் (Tin Mine Cavern); முன்பு காலத்தில் ஈயச் சுரங்கத் தொழிலாளர்கள் விட்டுச் சென்ற சுரங்கச் சுவடுகளைக் காணலாம்.[9]
  • தெம்புரோங் என்றால் மலாய் மொழியில் தேங்காய் ஓடு. இந்தக் குகையின் சில குவிமாடங்கள் தேங்காய் ஓடுகளைப் போல இருப்பதாகக் கூறப்படுகிறது.
  • ஒவ்வோர் ஆண்டும் மார்ச் முதல் மே மாதம் வரையில் குகை வெளவால்களின் இனச்சேர்க்கை காலம் ஆகும். ஆகவே அந்தக் கட்டத்தில் இலட்சக் கணக்கான குகை வெளவால்களுக்கு இந்தக் குகை அடைக்கலம் தருகிறது.

தெம்புரோங் குகை காட்சியகம்[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. Tempurung Cave is the largest limestone cave in Peninsular Malaysia and is estimated to be 400 million years old.
  2. Apart from limestone, the cave contains deposits of tin, marble and other minerals. There was some small-scale tin mining in the cave at various times over the past century.
  3. "Home". Cavesofmalaysia.com. பார்க்கப்பட்ட நாள் 29 April 2021.
  4. Jacq-Hergoualc'h, Michel; Victoria Hobson (September 2002). The Malay Peninsula: Crossroads of the Maritime Silk Road (100 BC - 1300 AD). BRILL. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:90-04-11973-6. 
  5. Ipohworld’s World » Yau Tet Shin’s New Town Under Construction 1908. Ipohworld.org. Retrieved on 29 April 2021.
  6. ம.மோகன் (7 பெப்ரவரி 2018). "படப்பிடிப்பு நடத்த விரும்புவோருக்கு பச்சைக் கம்பளம் விரிக்கும் மலேசியாவின் 'பேராக்'". கட்டுரை. இந்து தமிழ். பார்க்கப்பட்ட நாள் 8 பெப்ரவரி 2018. {{cite web}}: Check date values in: |accessdate= and |date= (help)
  7. Rashid, Rehman (1993). A Malaysian Journey. பக். 27. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:983-99819-1-9. https://archive.org/details/malaysianjourney0000rehm. 
  8. Gua Tempurung cave was once served as a hideout for the notorious communists, led by Chin Peng. The historical graffiti left by the communist guerrillas are said to be part of their plot to go against the British government during the Emergency Era of the 1950s.
  9. Gua Tempurung contained a generous amount of tin deposit which attracted Chinese miners. There are some mining equipment and patriotism propaganda messages written in Chinese characters on the wall.

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=தெம்புரோங்_குகை&oldid=3739624" இலிருந்து மீள்விக்கப்பட்டது