கிழக்கின் புனித நூல்கள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கிழக்கின் புனித நூல்கள்

கிழக்கின் புனித நூல்கள் (Sacred Books of the East) மூல மொழிகளிலிருந்து ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்ட ஆசியச் சமய நூல்களில் 50-இன் தொகுப்பாகும். சமசுகிருதம், பிராகிருதம், பாளி, பாரசீகம், சீனம், அரபு போன்ற கீழை நாட்டு மொழிகளின் இலக்கணம் மற்றும் இலக்கியங்களை கற்றறிந்த மேலை நாட்டு அறிஞர்கள் பலர், கீழை நாட்டின் புனித நூல்களை ஆங்கிலத்தில் மொழி பெயர்த்தனர். ஆங்கிலத்தில் மொழிபெயர்த்த 50 புனித நூல்களை, மாக்ஸ் முல்லர் தொகுத்தார். இந்து, பௌத்தம், சமணம், சொராட்டியம், தாவோயியம், கன்பூசியம் மற்றும் இசுலாம் சமய நூல்களை ஒக்ஸ்போர்ட் பல்கலைக்கழகப் பதிப்பகம் 1879 முதல் 1910 வரை அச்சடித்து வெளியிட்டது.

கிழக்கின் இப்புனித நூல்கள் ஐக்கிய அமெரிக்காவின் அனைத்து பொது ஊடகங்களில் விலையின்றி கிடைக்கிறது.[1]இந்த 50 நூல்களின் மின்னணு பதிப்பும் இணையத்தில் விலையின்றி படிக்கவும், இலவசமாகப் பதிவிறக்கவும் கிடைக்கிறது.

பட்டியல்[தொகு]

கிழக்கின் புனித நூல்களின் தொகுதிகள்
வரிசை எண் சமயம் வெளியீடு ஆண்டு மொழிபெயர்ப்பாளர்கள் நூலின் பெயர்
1 இந்து 1879 மாக்ஸ் முல்லர் உபநிடதங்கள் பகுதி 1/2:[2]
2 இந்து 1879 ஜார்ஜ் புஃலர் ஆரியர்களின் புனித நூல்கள் (தர்ம சூத்திரங்கள்:
3 கன்பூசியம் 1879 ஜேம்ஸ் லெக்கி 4 புனித நூல்களும், 5 பாரம்பரிய நூல்களும்:
  • மன்னர் சூ (ஆவண நூல்கள்)
    • தாங் நூல்
    • யூ
    • சியா
    • சாங்
    • காவ்
  • சீக் பாடல்கள்
4 சொராட்டியம் 1880 ஜேம்ஸ் தர்மேஸ்தெத்தர் அவெத்தா பகுதி 1/3:
  • வெந்திதாத்
5 சொராட்டியம் 1880 இ. டபிள்யூ. வெஸ்ட் பகலவி மொழி நூல்கள், பகுதி 1/5:
  • புந்தாக்கள்
  • சாத்-ஸ்பரம்
  • சான்டி-இ-வாக்மன்
  • சாயிஸ்ட் னே சாயிஸ்ட்
6 இசுலாம் 1880 ஈ. எச். பால்மேர் குரான் பகுதி 1/2 – அத்தியாயம் I-XVI
7 இந்து 1880 ஜூலியஸ் ஜூலி விஷ்ணுவின் அவதாரங்கள்
8 இந்து 1882 காசிநாத் திரியம்பக் தெலாங் பகவத் கீதை:
9 இசுலாம் 1880 ஈ. எச். பால்மேர் குரான் பகுதி 2/2 – அத்தியாயம் XVII-CXIV
10 பௌத்தம் 1881 மாக்ஸ் முல்லர் தம்மபதம், சுத்த நிபாதா: சொற்பொழிவுகளின் தொகுப்பு
11 பௌத்தம் 1881 எப். டபிள்யூ. டேவிட்ஸ் பௌத்த சூத்திரங்கள்:
  • மகாபரிநிர்வாண சூத்திரம்
  • தர்மம்-சங்கம் பவதான சூத்திரம்
  • தேவிக்கா சுத்தானந்தா
  • அகான்கேய சுத்திரம்
  • கேடோகிலா சூத்திரம்
  • மகா-சுதஸ்சனாச சூத்திரம்
  • சப்பாசவா சூத்திரம்
12 இந்து 1882 ஜூலியஸ் எக்கெல்லிங் சதபத பிராமணம், பகுதி 1/5:
  • மத்தியாந்தின சாகை I-II
13 பௌத்தம் 1881 டி. டபிள்யூ. டேவிட்ஸ் மற்றும் ஹெர்மன் ஒல்டன்பெர்க் விநயபிடகம் நூல்கள், பகுதி 1/3:
  • பதிமோட்சம்
  • காந்தாக மகாவாக்கியம், I–IV.
14 இந்து 1882 ஜார்ஜ் புஃலர் மனுதரும சாத்திரம், பகுதி 2/2:
  • வாசிஷ்டம்
  • போதாயனர் சூத்திரங்கள்
  • பரிசிஸ்தம்
15 இந்து 1884 மாக்ஸ் முல்லர் உபநிடதங்கள்,பகுதி 2/2:
16 கன்பூசியம் 1882 ஜேம்ஸ் லெக்கி கன்பூசிய நூல், பகுதி 2/6:
  • மன்னர் யீ
17 பௌத்தம் 1882 எப். டபிள்யூ. ரெய்ஸ் டேவிட்ஸ் மற்றும் ஹெர்மன் ஒல்டன்பெர்க் விநயபிடகம், பகுதி 2/3
  • மகாவக்கா, V–X
  • குல்லவக்கா I–II
18 சொராட்டியம் 1882 ஈ. டபிள்யூ. வெஸ்ட் பகலவி நூல்கள், பகுதி 2/5
  • தாடிஸ்தான்-இ-தெனிக்
  • மானூஸ்கிகாரின் நிருபங்கள்
19 பௌத்தம் 1883 சாமுவேல் பீல் அஸ்வகோசர் எழுதிய கௌதம புத்தர் சரித்திரம், கிபி 420-இல் சமசுகிருத மொழியிலிருந்து போதிசத்துவர் என்ற நூலை சீன மொழியில் மொழிபெயர்த்தது.
20 பௌத்தம் 1885 ஈ. டபிள்யூ. வெஸ்ட் மற்றும் ஹெர்மன் ஒல்டன்பெர்க் விநயபிடகம் நூல், பகுதி 3/3:
  • குல்லவக்கா, IV–XII.
21 பௌத்தம் 1884 எச். கெர்ன் தாமரை சூத்திரம்
22 சமணம் 1884 ஹெர்மன் ஜோகோபி பிராகிருத மொழியிலிருந்து சமண சூத்திரங்கள், பகுதி 1/2
  • ஆச்சாரங்க சூத்திரம்
  • கல்ப சூத்திரம்
23 சொராட்டியம் 1883 ஜேம்ஸ் தர்மெஸ்தேதேர் அவெத்தா, பகுதி 2/3:
  • சிரோசாக்ஸ்
  • யாஸ்து
  • நியாயிஸ்
24 சொராட்டியம் 1884 ஈ. டபிள்யூ. வெஸ்ட் பகலவி நூல்கள், பகுதி 3/5:
  • தினாய் மைனோக்-இ-கிராத்
  • சிகந்த்-குமானிக் விசார்
  • சர்தார்
25 இந்து 1886 ஜார்ஜ் புஃலர் மனுதரும சாத்திரம்: ஏழு விளக்க உரைகளின் சாரத்துடன்
26 இந்து 1885 ஜூலியஸ் எக்கெல்லிங் சதபத பிராமணம், பகுதி 2/5
  • மத்தியாந்தின சாகை III–IV
27 கன்பூசியம் 1885 ஜேம்ஸ் லெக்கி கன்பூசிய நூல், பகுதி 3/6:
  • லீ கீ I (கன்பூசிய சடங்குகளின் நூல்)
28 கன்பூசியம் 1885 ஜேம்ஸ் லெக்கி கன்பூசிய சடங்கு நூல், பகுதி 4/6:
29 இந்து 1886 ஹெர்மன் ஒல்டன்பெர்க் கல்பம், பகுதி 1/2:
  • சாங்கியான கிரியா சூத்திரம்
  • ஆஸ்வலாயன கிரியா சூத்திரம்
  • பராஸ்கார கிரியா சூத்திரம்
  • காதியா கிரியா சூத்திரம்
30 இந்து 1892 ஹெர்மன் ஓல்டன்பெர்க் (ஆபஸ்தம்ப சூத்திரம்), மாக்ஸ் முல்லர் (யக்ஞம்), (கல்ப கிரியா சூத்திரம்), பகுதி, 2/2:
31 சொராட்டியம் 1887 லாரன்ஸ் ஹெவொர்த் மில்ஸ் அவெத்தா, பகுதி 3/3:
  • யாஸ்னா
  • விஷ்பெராத்
  • அப்ரிநகான்
  • காக்ஸ்
32 இந்து 1891 மாக்ஸ் முல்லர் வேத மந்திரங்க்ள், பகுதி 1/2
33 இந்து 1889 ஜூலியஸ் ஜூலி பிரகஸ்பதி சூத்திரம்
34 இந்து 1890 ஜார்ஜ் திபௌத் பிரம்ம சூத்திரம், பகுதி 1/3
35 பௌத்தம் 1890 டி. டபிள்யூ. டேவிட்ஸ் நாகசேனரிடம் கிரேக்க மன்னர் மிலிந்தரின் கேள்விகள், பகுதி 1/2
36 பௌத்தம் 1894 டி. டபிள்யூ. டேவிட்ஸ் நாகசேனரிடம் கிரேக்க மன்னர் மிலிந்தரின் கேள்விகள், பகுதி 2/2
  • மிலிந்தபன்கா
37 சொராட்டியம் 1892 ஈ. டபிள்யூ. வெஸ்ட் பகலவி நூல்கள், பகுதி 4/5
  • நாஸ்கின் பொருளடக்கம்
38 இந்து 1896 ஜார்ஜ் திபௌத் பிரம்ம சூத்திரம், பகுதி 2/3
39 தாவோயியம் 1891 ஜேம்ஸ் லெக்கி தாவோயியம் நூல்கள், பகுதி 1/2
  • மன்னர் தாவோ தெ
  • சூயான்சி நூல் I–XVII
40 தாவோயியம் 1891 ஜேம்ஸ் லெக்கி தாவோயியம் நூல்கள், பகுதி 2/2
  • சுயாங் சௌ சே, XVII–XXXIII
  • தாய்-சாங், செயல்கள் மற்றும் அவற்றின் எதிர்வினைகள்
  • பிற தாவோயியம் நூல்கள்
41 இந்து 1894 ஜூலியஸ் எக்கெல்லிங் சதபத பிராமணம், பகுதி 3/5:
  • மத்தியாந்திக சாகை V–VII
42 இந்து 1897 மோரிஸ் புளூம்பீல்டு அதர்வண வேத மந்திரங்கள், சடங்குகள் மற்றும் விளக்க உரைகள்
43 இந்து 1897 ஜூலியஸ் எக்கெல்லிங் சதபத பிராமணம், பகுதி 4/5:
  • மத்தியாந்திக சாகை VII, IX, X.
44 இந்து 1900 ஜூலியஸ் எக்கெல்லிங் சதபத பிராமணம், பகுதி 5/5:
  • மத்தியாந்தின சாகை XI–XIV.
45 சமணம் 1895 ஹெர்மன் ஜோகோபி

(பிராகிருத மொழியிலிருந்து)

ஜைன சூத்திரங்கள், பகுதி 2/2:
  • உத்தராதியயான சூத்திரம்
  • சூத்திரகிரிதாங்க சூத்திரம்
46 இந்து சமயம் 1897 ஹெர்மன் ஓல்டன்பெர்க் வேத மந்திரங்கள், பகுதி 2/2:
  • அக்னி தேவ மந்திரங்கள், மண்டலம் I–V
47 சொராட்டியம் 1897 ஈ. டபிள்யூ. வெஸ்ட் பகலவி நூல்கள், பகுதி 5/5:
48 இந்து 1904 ஜார்ஜ் திபௌத் வேதாந்த சூத்திரங்கள், பகுதி 3/3, இராமானுஜரின் விளக்க உரையுடன்
49 பௌத்தம் 1894 எட்வர்டு பைலஸ் கோவெல், மாக்ஸ் முல்லர் மற்றும் தககுசு ஜுன்ஜிரோ மகாயான நூல்கள், பகுதி 1/2:
50 அட்டவணை 1910 மோரிஸ் விண்டர்நிட்ஸ், (ஆர்தர் அந்தோணி மெக்டோனால்டின் முன்னுரையுடன் கிழக்கின் புனித நூல்கள் பட்டியல்

மேற்கோள்கள்[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=கிழக்கின்_புனித_நூல்கள்&oldid=3140067" இலிருந்து மீள்விக்கப்பட்டது