இலக்குண்டி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
இலக்குண்டி
லோக்கி குந்தி
நகரம்
இலக்குண்டியிலுள்ள சமணக் கோயில்
இலக்குண்டியிலுள்ள சமணக் கோயில்
நாடு இந்தியா
மாநிலம்கருநாடகம்
நேர வலயம்இந்திய சீர் நேரம் (ஒசநே+5:30)
ஐ.எஸ்.ஓ 3166 குறியீடுஐஎன் கேஏ
வாகனப் பதிவுகேஏ-26
அண்மை நகரம்கதக்

இலக்குண்டி (Lakkundi ) [1] [2] கர்நாடகாவின் கதக் மாவட்டத்தில் ஹூப்ளியிலிருந்து அம்பி (ஹோஸ்பேட்) செல்லும் வழியில் இருக்கும் ஓர் சிறிய கிராமமாகும். கிராமம் கிழக்கில் கதக் - பெட்டகேரியிலிருந்து]] 11 கி.மீ.தொலைவிலும், தம்பாலிருந்து 14 கி.மீ தொலைவிலும், குக்கனூர் கல்லேஸ்வரம் மகாதேவர் கோயிலிலிருந்து 25 கி.மீ தொலைவிலும் உள்ளது. கல்வெட்டுகளில் இந்த ஊரை லோக்கி குண்டி எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. [3]

இக்கிராமத்தில் அமைந்துள்ள மல்லிகார்சுனர் கோயில், வீரபத்திரர் கோயில், மாணிக்கேசுவரர் கோயில், நன்னேசுவரர் கோயில், இலட்சுமிநாராயணன் கோயில், சோமேசுவரர் கோயில், நீலகண்டேசுவரர் கோயில் போன்ற பல கோயில்கள் பாழடைந்து காணப்படுகிறது . [4]

கோயில்கள்[தொகு]

இக்கிராமம் பழங்கால ஆர்வமுள்ள இடமாகும். இங்கு 50 கோயில்களும், 101 படிகள் கொண்ட கிணறுகளும் (கல்யாணி அல்லது புஷ்கரணி என அழைக்கப்படுகிறது) 29 கல்வெட்டுகளும் கிடைக்கப்பெற்றுள்ளது. இவை பிற்கால சாளுக்கியர்கள், கலாச்சூரிகள், தேவகிரி யாதவர்கள், போசளர்கள் காலங்களைச் சொல்கின்றன. மேலை சாளுக்கியக் கலையின் ஒரு சிறந்த மையமாக இவ்வூர் இருந்துள்ளது. இங்கு பல கோயில்கள் உள்ளன. அவற்றில் காசிவிசுவேசுவரர் கோயில், மிகவும் அலங்கரிக்கப்பட்ட மற்றும் விரிவாக கட்டப்பட்டுள்ளது. மிகப்பெரியதும் பழமையான ஆலயமுமான சமணக்கோயில் ஒன்று இங்கு உள்ளது. மேலும் இந்தியத் தொல்லியல் ஆய்வகம் பராமரிக்கும் சிற்பக் கலைக்கூடமும் இங்கு அமைந்துள்ளது.

இலக்குண்டியில் ஜிண்டேஷா வாலியின் தர்காவும் உள்ளது.

இலக்குண்டியில் உள்ள காசிவிசுவேசுவரர் கோயில் கோபுரத்திலுள்ள கீர்த்திமுக அலங்காரம்
துளையிடப்பட்ட சாரளம், இலக்குண்டியிலுள்ள மாணிக்கேசுவரர் கோவிலில் உள்ள மண்டபத்திற்குஒளியைக் கொண்டுவருகிறது
இலக்குண்டியிலுள்ள நன்னேசுவரர் கோயில்

இலக்குண்டி கோயில் கட்டிடக்கலைக்க்கும் தனசிந்தாமணி அட்டிமாபே ( கன்னட இலக்கியம் மற்றும் சமண மதம் ) ஆகியவற்றிற்கும் பெயர் பெற்றது.

வரலாறு[தொகு]

இலக்குண்டியை பிற்கால சாளுக்கியர்கள், காலச்சுரிகள், தேவகிரி யாதவர்கள், போசளர்கள் ஆட்சி செய்தனர். இராஷ்டிரகூடங்களிடமிருந்து (9 -10 ஆம் நூற்றாண்டுகள்) அதிகாரத்தைக் கைப்பற்றிய சாளுக்கியர்கள், கல்யாணியை தங்கள் தலைநகராக மாற்றினர். இந்த நகரத்தில் இப்போது எதுவும் மிச்சமில்லை. பிற்கால சாளுக்கிய கோயில்களில் பெரும்பாலானவை இங்கு பாதுகாக்கப்படுகின்றன. கதக்கிற்கு அருகிலுள்ள இலக்குண்டியில் உள்ள சமணக் கோயில், மேலைச் சாளுக்கியர் [5] பாணியின் வளர்ச்சியின் அடுத்த கட்டத்தை அறிமுகப்படுத்துகிறது.

12ஆம் நூற்றாண்டில், மேலைச் சாளுக்கியக் கட்டிடக்கலை அதன் முதிர்ச்சியையும் உச்சநிலையையும் அடைந்தது. காசிவிசுவேசுவரர் கோயில், குருவதியில் மல்லிகார்ச்சுனர், மகாதேவன் கோயில் போன்றவை பிற்கால சாளுக்கியக் கட்டிடக்கலைக்கு சிறந்த எடுத்துக்காட்டுகளாகும். பசவகல்யாணியின் மேலை சாளுக்கியர்களின் கட்டிடக்கலை பாதமியின் ஆரம்பகால சாளுக்கியர்களுக்கும் அவர்களுக்குப் பின் வந்த போசளர்களுக்கும் இடையேயான தொடர்பு என்று கூறப்படுகிறது.

சுற்றுலா[தொகு]

இலக்குண்டியில் உள்ள சமணக் கோவிலில் நான்முகனான பிரம்மன் உருவம், 11 ஆம் நூற்றாண்டு
இலக்குண்டியில் உள்ள மாணிக்கேசுவரர் கோவிலில் உள்ள படிக்கிணறு (மஸ்கின் பான்வி)

இலக்குண்டி சாளுக்கிய பாணி கோயில்களுக்கும், படிக்கிணறுகள் மற்றும் வரலாற்று கல்வெட்டுகளுக்கும் பெயர் பெற்றது. [6]

மேலும் காண்க[தொகு]

கட்டிடக்கலைக் குறிப்புகள்[தொகு]

Gallery[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. "Kalyani Chalukyan temples". பார்க்கப்பட்ட நாள் 2008-08-20.
  2. "A great tourist place i karanataka, Lakkundi". Archived from the original on 2011-07-16. பார்க்கப்பட்ட நாள் 2008-08-11.
  3. "CHAPTER 9. THE CALUKYAS AND THE KALACURYAS OF KALYANI. HISTORY–ANCIENT PERIOD, Chalukya" (PDF). பார்க்கப்பட்ட நாள் 2009-03-10.
  4. "Chapter XIV, Karnataka, The Tourist Paradise". Archived from the original on 2009-03-04. பார்க்கப்பட்ட நாள் 2009-03-03.
  5. "The Chalukyas of Kalyani, Part 2". Archived from the original on 2008-12-01. பார்க்கப்பட்ட நாள் 2009-03-03.
  6. "Handbook of Karnataka, Lakkundi". Archived from the original (PDF) on 2012-02-16. பார்க்கப்பட்ட நாள் 2008-08-20.

11. LAKKUNDIY BRAMAJINALAY : VASTU-SHILP-SHASAN (2014, Dr. Appanna N. Hanje, Vidyashre Prakashan, ALAGAWADI-591317 12. LAKKUNDIY BASADIGALU (2015), Dr. Appanna N. Hanje, Vidyashre Prakashan, ALAGAWADI-591317 13. SAMAVASARAN (Research Articles-2015), Dr. Appanna N. Hanje, Vidyashre Prakashan, ALAGAWADI-591317

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=இலக்குண்டி&oldid=3544376" இலிருந்து மீள்விக்கப்பட்டது