கோபிகா குகை கல்வெட்டுக்கள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கோபிகா குகை கல்வெட்டுக்கள்
சாக்த சமயம் தொடர்பான சமஸ்கிருத மொழி கல்வெட்டுக்கள்
செய்பொருள்குகைப் பாறை
எழுத்துகுப்தர்கள் காலத்திய சமஸ்கிருத எழுத்துமுறை
காலம்/பண்பாடுமௌகரி வம்சம் (குப்தர்கள் காலம்)
கண்டுபிடிப்புGaya district, Bihar
இடம்நாகார்ஜுனி மலை, பராபர் குகைகள்
தற்போதைய இடம்கோபிகா குகை [1]

கோபிகா குகைக் கல்வெட்டு (Gopika Cave Inscription), இதனை மௌகரி மன்னர் இரண்டாம் அனந்தவர்மனின் நாகார்ஜுனி மலைக்குகை கல்வெட்டு என்றும் அழைப்பர். இக்கல்வெட்டு இந்தியாவின் பிகார் மாநிலத்தின் கயா மாவட்டத்தில் உள்ள பராபர் குகைகள் அருகே கோபிகா குகையில் கிபி 1788-இல் கண்டுபிடிக்கப்பட்டது.[2][3]கிபி 5 அல்லது 6-ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த சமஸ்கிருத மொழியில் எழுதப்பட்ட இந்த குகைகல்வெட்டு, சக்தி வழிபாட்டாளர்களின் துர்கை தெய்வத்தைப் போற்றி எழுதப்பட்ட கல்வெட்டாகும்.[4][5] 18-ஆம் நூற்றாண்டில் கோபிகா குகையை ஆய்வு செய்த தொல்லியல் அறிஞர்களுக்கு, கோபிகா குகையில் மௌகரி வ்மசத்தின் இரண்டாம் அனந்தவர்மன் நிறுவிய துர்கையின் கோயிலை கண்டுபிடிக்க முடியவில்லை. [4][6]

கிமு மூன்றாம் நூற்றாண்டின் துவக்கத்தில், நாகார்ஜுனி மலையில் அருகே அமைந்த பராபர் குகைகள், லோம ரிஷி குகை மற்றும் கோபிகா குகைகளை பேரரசர் அசோகர் ஆசிவகத் துறவிகள் தங்கி தியானம் செய்ய கொடையாக வழங்கினார். இவைகள் கயைக்கு வடக்கே 16 மைல் தொலைவில் உள்ளது.[1]

விளக்கம்[தொகு]

இடதுபுறத்தில் பாதி கல்வெட்டு
கோபிகா குகை நுழைவாயிலின் வலது புறத்தில் கருங்கல் பாறையில் கல்வெட்டு

கோபிகா குகையின் நுழைவு நடைப்பாதையின் உள்ளே பாறைச் சுவரில் கல்வெட்டு செதுக்கப்பட்டுள்ளது. இக்கல்வெட்டு 5 அடி நீளமும், 2 அடி அகலத்தில் குப்தர் கால சமஸ்கிருத எழுத்துமுறையில் மந்திர வடிவில் 10 வரிகள் கொண்டது. சமஸ்கிருத மொழியின் ஆரம்ப இந்தியக் கல்வெட்டுகளில் இதுவும் ஒன்றாகும். [7] கல்வெட்டு பாதுகாப்பாக இருப்பினும், இவ்விடத்தில் இருந்த துர்கை கோயிலை பராமரிப்பதற்கு மன்னரால் தானமாக வழங்கப்பட்ட கிராமங்களின் பெயர்கள் காணவில்லை. மேலும் கல்வெட்டின் இறுதியான பத்தாவரி வரி வேண்டுமென்றே சேதப்படுத்தப்பட்டுள்ளது.[8]

கோபிகா குகையின் பிந்தைய கால பிராமி எழுத்து கல்வெட்டை தேவநாகரி எழுத்தில் வரிக்கு வரி, 1785-இல் சார்லஸ் வில்கின்ஸ் என்பரால் மொழிபெயர்ப்பு செய்யப்பட்டது.[9]

மேற்கோள்கள்[தொகு]

  1. 1.0 1.1 Sir Alexander Cunningham (1871). Four Reports Made During the Years, 1862-63-64-65. Government Central Press. பக். 43–52. https://archive.org/details/fourreportsmade01cunngoog. " இந்தக் கட்டுரை பொது உரிமையில் உள்ள மூலத்திலிருந்து உரையைக் கொண்டுள்ளது." 
  2. "I have thought it necessary to send a copy of part of the Gya inscription, which has been translated, together with the modern character written beneath it, as given by Dr. WILKINS" in Prinsep, James (1834) (in en). The Journal of the Asiatic Society of Bengal. Ed. by James Prinsep. Bapt. Miss. Press. பக். 111. https://books.google.com/books?id=IV9CxKZ0Nq4C&pg=PA111. 
  3. Wilkins, Charles (1788). Asiatic Researches. London : Printed for J. Sewell [etc.]. பக். 276-281. https://archive.org/details/asiaticresearche01asia_0. 
  4. 4.0 4.1 DR Bhandarkar, BC Chhabra & GS Gai 1981, ப. 226-228.
  5. Salomon, Richard (1998) (in English). Indian Epigraphy. பக். 206-207. https://archive.org/details/RichardSalomonIndianEpigraphyAGuideToTheBookZa.org. 
  6. Hans Bakker (2014). The World of the Skandapurāṇa. BRILL Academic. பக். 43–44 with footnotes. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-90-04-27714-4. https://books.google.com/books?id=6p2XCgAAQBAJ&pg=PA43. 
  7. DR Bhandarkar, BC Chhabra & GS Gai 1981, ப. 226-227.
  8. DR Bhandarkar, BC Chhabra & GS Gai 1981, ப. 226.
  9. Wilkins, Charles (1788). Asiatic Researches. London : Printed for J. Sewell [etc.]. பக். 278-281. https://archive.org/details/asiaticresearche01asia_0. 

ஆதார நூல்கள்[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]