பிப்லாந்திரி

ஆள்கூறுகள்: 25°06′40″N 73°47′20″E / 25.11111°N 73.78889°E / 25.11111; 73.78889
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பிப்லாந்திரி
கிராமம்
பிப்லாந்திரி is located in இராசத்தான்
பிப்லாந்திரி
பிப்லாந்திரி
இந்திய நாட்டின் இராஜஸ்தான் மாநிலத்தின் இராஜ்சமந்து மாவட்டத்தில் பிப்பிலாந்திரி கிராமத்தின் அமைவிடம்
பிப்லாந்திரி is located in இந்தியா
பிப்லாந்திரி
பிப்லாந்திரி
பிப்லாந்திரி (இந்தியா)
ஆள்கூறுகள்: 25°06′40″N 73°47′20″E / 25.11111°N 73.78889°E / 25.11111; 73.78889
நாடு இந்தியா
மாநிலம்இராஜஸ்தான்
மாவட்டம்ராஜ்சமந்து
மொழிகள்
 • அலுவல் மொழிஇந்தி
நேர வலயம்இந்திய சீர் நேரம் (ஒசநே+5:30)
அஞ்சல் சுட்டு எண்313324
ஐ.எஸ்.ஓ 3166 குறியீடுRJ-IN
அருகமைந்த நகரம்ராஜ்சமந்து
இணையதளம்www.piplantri.com

பிப்பிலாந்திரி (Piplantri) இந்தியாவின் இராஜஸ்தான் மாநிலத்தின் ராஜ்சமந்து மாவட்டத்தில் அமைந்த சுற்றுச்சூழலியல் கிராமம் ஆகும். [1] பிப்பிலாந்திரி கிராமத்தினர் கிராமத்திலும், கிராமத்தைச் சுற்றிலும் காட்டை வளர்த்து, பராமரிக்கின்றனர்.

சிறப்புகள்[தொகு]

பெண் குழந்தைகள் பாதுகாப்புத் திட்டத்தின் கீழ், பிப்பிலாந்திரி கிராமத்தில் ஒரு பெண் குழந்தை பிறக்கும் போது 111 மரக்கன்றுகள் நடுவது வழக்கம். இப்பெண் குழந்தைகள் பருவமடையும் போது, இம்மரங்கள் தரும் பழங்கள் அல்லது மரக்கட்டைகளை விற்பனை செய்வதன் மூலம், பெண்களின் திருமணம் போன்ற செலவினங்கள் ஈடுகட்டப்படும்.[2][3]இவ்வழக்கத்தால் இக்கிராமத்தில் சிசேம், மா, நெல்லிக்காய், வேம்பு உள்ளிட்ட 3 இலட்சம் மரங்கள் வளர்கிறது. மேலும் பிப்பிலாந்திரி கிராமத்தில் யாராவது இறப்பின், அவரது நினைவாக 11 மரக்கன்றுகள் நடப்படுகிறது.

2006-ஆம் ஆண்டு முதல் இக்கிராமத்தில் பெண் குழந்தைகள் பிறக்கும் போது, கிராமத்தினர் சார்பில் ரூபாய் 21,000 வசூலிக்கப்பட்டும், பெண் குழந்தை வீட்டாரிடம் ரூபாய் 10,000 வசூலித்தும், பெண் குழந்தையின் பேரில் வங்கியில் 20 ஆண்டுக்கு நிரந்தர வைப்பு நிதியில் இட்டு வைக்கின்றனர். பெண் குழந்தைக்கு 18 வயது நிறைந்த பிறகே நடக்கும் திருமணத்திற்கு வைப்பு நிதியில் சேமித்த பணத்தை வட்டியுடன் செலவழிக்க பயன்படுத்தப்படுகிறது. [4]

பிப்பிலாந்திரி கிராமத்தின் காட்டைச் சுற்றிலும் 2.5 மில்லியன் அளவிற்கான சோற்றுக்கற்றாழை செடிகளை வளர்த்துள்ளனர். இந்த மூலிகை சத்து நிறைந்த சோற்றுக்கற்றாழை சாறுகள் பாட்டிலில் அடைத்து விற்பனை செய்வதன் மூலம் பெருமளவு ரூபாய் கிராமத்தினருக்கு வருவாய் கிடைக்கிறது.[5]

மேற்கோள்கள்[தொகு]

  1. "A village that plants 111 trees for every girl born in Rajasthan". The Hindu. http://www.thehindu.com/news/national/other-states/a-village-that-plants-111-trees-for-every-girl-born-in-rajasthan/article4606735.ece. 
  2. "Piplantri villagers plant 111 trees to celebrate a girl child's birth". ibnlive.in.com. Cable News Network LP, LLLP. A Time Warner Company. Archived from the original on 2013-07-18. பார்க்கப்பட்ட நாள் 26 March 2015.
  3. This village in India plants 111 trees every time a girl is born - CNN Video, பார்க்கப்பட்ட நாள் 2020-08-05
  4. "Celebrating girl child: Here's what India can learn from a Rajasthani village, Piplantri". www.firstpost.com. Firstpost. பார்க்கப்பட்ட நாள் 26 March 2015.
  5. "Indian Village Plants Future for Young Girls". time.com. Time Inc. பார்க்கப்பட்ட நாள் 26 March 2015.

ஊடககளில் பிப்பிலாந்திரி கிராமம்[தொகு]

[1] [2][3][4][5][6][7][8]

  1. "ndian-village-plants-111-trees-every-time-a-girl-child-is-born". http://www.odditycentral.com/travel/indian-village-plants-111-trees-every-time-a-girl-child-is-born.html. 
  2. "Piplantri - Rajasthan - India". http://www.thecultureist.com/2013/04/17/piplantri-rajasthan-india-when-a-baby-girl-is-born-111-fruit-trees-are-planted/. 
  3. "This-amazing-village-in-india-plants-111-trees-every-time-a-little-girl-is-born". http://organichealth.co/this-amazing-village-in-india-plants-111-trees-every-time-a-little-girl-is-born/. [தொடர்பிழந்த இணைப்பு]
  4. "A-village-in-india-plants-111-trees-for-every-girl-child-born". http://indiapulse.sulekha.com/local-pulse/a-village-in-india-plants-111-trees-for-every-girl-child-born_post_3952. 
  5. "There-is-a-village-in-india-that-plants-111-trees-every-time-a-girl-is". higherperspectives. 24 March 2015. http://www.higherperspectives.com/there-is-a-village-in-india-that-plants-111-trees-every-time-a-girl-is-1406159287.html. 
  6. "Village in India Fights Daughter Deficit, Plants 111 Trees Whenever a Girl is Born". GOOD NEWS NETWORK. 15 April 2015. https://stream.org/village-india-plants-111-trees-whenever-girl-born/. 
  7. "For every girl born, Indian village plants 111 trees". Happy Telegram. 26 November 2013. https://happytelegram.wordpress.com/2013/11/26/for-every-girl-born-indian-village-plants-111-trees/. 
  8. "Indian village plants 111 trees for every girl born". By Efrosini Costa. 26 March 2015. https://www.mindfood.com/article/indian-village-plants-111-trees-for-every-girl-born/. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=பிப்லாந்திரி&oldid=3563377" இலிருந்து மீள்விக்கப்பட்டது