பிரணிதா தலுக்தார்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பிரணிதா தலுக்தார்
அசாம் சட்டமன்றம்
பதவியில்
1967–1978
முன்னையவர்அக்‌ஷய் குமார் தாஸ்
பின்னவர்ஹேமன் தாஸ்
தொகுதிசர்போக்
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு1935
இறப்பு20 ஏப்ரல் 2019 (வயது 83-84)
அரசியல் கட்சிஇந்திய தேசிய காங்கிரசு

பிரணிதா தலுக்தார் இந்தியாவைச் சேர்ந்த ஆசிரியரும், சமூக சேவகரும், இந்திய தேசிய காங்கிரசு கட்சியைச் சேர்ந்த அரசியல்வாதியும் ஆவார். அசாமின் சர்போக்கிலிருந்து இந்திய தேசிய காங்கிரசு வேட்பாளராக அசாம் சட்டமன்ற உறுப்பினராக இரண்டு முறை தேர்ந்தெடுக்கப்பட்டார்.

சுயசரிதை[தொகு]

பிரணிதா 1935இல் பிறந்தார். இவரது கணவர் கணேசியாம் தலுக்தார் பர்னாகர் கல்லூரியை நிறுவினார். மேலும், அசாம் சட்டமன்ற உறுப்பினராகவும் இருந்தார். [1] இவர், சொராலி மேல்நிலைப்பள்ளியின் தலைமை ஆசிரியராகவும், பர்னாகர் கல்லூரி, பார்பேட்டா சோராலி கல்லூரி ஆகியவற்றின் ஆசிரியராகவும் இருந்தார். [2]

சட்டமன்ற உறுப்பினர்[தொகு]

1967 ல் சர்போக்கிலிருந்து அசாம் சட்டமன்ற உறுப்பினராக பிரணிதா தேர்ந்தெடுக்கப்பட்டார் [3] 1972இல் சர்போக்கிலிருந்து மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டார் [4]

விருது[தொகு]

தலுக்தார் பெண்களின் வளர்ச்சிக்காகப் பணிகளை செய்தார். இவர் மத்திய பெண்கள் மற்றும் குழந்தைகள் நல சங்கத்தின் தலைவராக இருந்தார். <[2] மகளிர் அதிகாரமளிப்பதில் இவர் செய்த பங்களிப்புக்காக 2013ஆம் ஆண்டில் நாரி சக்தி விருது பெற்றார். [5][6][7]

இறப்பு[தொகு]

தலுக்தார் 20 ஏப்ரல் 2019 அன்று இறந்தார்.[2]

மேற்கோள்கள்[தொகு]

  1. "সৰভোগৰ প্রাক্তন বিধায়িকা প্ৰণীতা তালুকদাৰৰ দেহাৱসান". NE Now (in அஸ்ஸாமீஸ்). 21 April 2019. Archived from the original on 31 அக்டோபர் 2019. பார்க்கப்பட்ட நாள் 31 October 2019.
  2. 2.0 2.1 2.2 "সৰভোগৰ প্রাক্তন বিধায়িকা প্ৰণীতা তালুকদাৰৰ দেহাৱসান". NE Now (in அஸ்ஸாமீஸ்). 21 April 2019. Archived from the original on 31 அக்டோபர் 2019. பார்க்கப்பட்ட நாள் 31 October 2019.
  3. "Assam Legislative Assembly - MLA 1967-72". Assam Legislative Assembly. பார்க்கப்பட்ட நாள் 31 October 2019.
  4. "Assam Legislative Assembly - MLA 1972-78". Assam Legislative Assembly. பார்க்கப்பட்ட நாள் 31 October 2019.
  5. "Pranab Mukherjee bestows Rani Laxmi Bai award on Delhi gangrape victim". The Indian Express. 8 March 2013. பார்க்கப்பட்ட நாள் 31 October 2019.
  6. "Rani Lakshmibai award for Delhi braveheart". The Hindu. 8 March 2013. பார்க்கப்பட்ட நாள் 31 October 2019.
  7. "President gives Stree Shakti awards on International Women's Day". News18. 9 March 2013. பார்க்கப்பட்ட நாள் 31 October 2019.
"https://ta.wikipedia.org/w/index.php?title=பிரணிதா_தலுக்தார்&oldid=3563454" இலிருந்து மீள்விக்கப்பட்டது