விக்கிப்பீடியா:முதற்பக்கக் கட்டுரைகள்/2021

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
மார்ச்

முகலாயப் பேரரசு உச்ச நிலையில் இருக்கும்பொழுது, அக்காலத்தில் பாரதம் என்று அழைக்கப்பட்ட இந்தியா, ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான் மற்றும் வங்காள தேசம் போன்ற நாடுகளின் பெரும் பகுதிகளை உள்ளடக்கிய பேரரசாக இருந்தது. கி. பி. 1526 தொடக்கம் முதல் 1712 வரையான காலப்பகுதியில் இந்த அரசு நிலைபெற்றிருந்தது. துருக்கிய-பாரசீக / துருக்கிய-மங்கோலிய தைமூரியத் தலைவனான பாபர், 1526 ஆம் ஆண்டில் கடைசி டில்லி சுல்தானான, இப்ராஹிம் லோடி என்பவரை, முதலாவது பானிபட் போரில் தோற்கடித்து முகலாய அரசைத் தோற்றுவித்தார். மேலும்...


பண்டைய இந்தியக் கல்வெட்டுக்கள் இந்தியத் துணைக்கண்டத்தில் முதன் முதலாக கிடைத்த கலவெட்டுக்கள், கிமு மூவாயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய சிந்து வெளியில் கிடைத்த கல்வெட்டுக் குறிப்புகள் ஆகும். ஆனால் இக்கல்வெட்டுக் குறிப்புகள் இதுவரை யாராலும் முழுமையாக படித்து அறியப்படவில்லை. வட இந்தியாவில், கிமு மூன்றாம் நூற்றாண்டில் பிராமி எழுத்தில் பிராகிருத மொழியில் எழுதப்பட்ட அசோகரின் கல்வெட்டுகளும், தமிழ்நாட்டில் தமிழி எழுத்தில், தமிழ் மொழியில் எழுதப்பட்ட மாங்குளம் கல்வெட்டுகள் முதலில் அறியப்பட்டதாகும். மேலும்...

ஆகத்து

தைமூர் துருக்கிய-மங்கோலியப் படையெடுப்பாளர் ஆவார். இவர் தைமூரியப் பேரரசைத் தோற்றுவித்தார். தைமூரியப் பேரரசின் பகுதிகள் தற்போதைய ஆப்கானித்தான், ஈரான் மற்றும் நடு ஆசியா ஆகிய பகுதிகளில் உள்ளன. தைமூரிய அரசமரபையும் இவர் தோற்றுவித்தார். தோற்கடிக்கப்படாத படைத்தலைவரான இவர், வரலாற்றில் முக்கியமான இராணுவத் தலைவர்கள் மற்றும் தந்திரோபாயவாதிகளில் ஒருவராகப் பெரும்பாலானவர்களால் கருதப்படுகிறார். மேலும்...


விஜயநகரப் பேரரசு தென் இந்தியாவின் தற்கால கர்நாடகா, ஆந்திரப் பிரதேசம், தமிழ்நாடு மற்றும் கேரளாவின் பெரும்பாலான பகுதிகளைக் கொண்ட ஒரு பேரரசு ஆகும். தென்னிந்தியாவில் தில்லி சுல்தான்களின் ஆட்சி விரிவாக்கத்தை தடுக்கவே வித்யாரண்யர் வழிகாட்டுதலின்படி, விஜயநகரப் பேரரசு 1336 ஆம் ஆண்டில் முதலாம் ஹரிஹரர் மற்றும் முதலாம் புக்கராயர் ஆகியோரால் நிறுவப்பட்டது. இதன் தலைநகரமான விஜயநகரத்தின் பெயரினால் இப்பேரரசின் பெயர் உருவானது. மேலும்...

செப்டம்பர்

எமிலி டிக்கின்சன் (1830 – 1886) ஒரு அமெரிக்கப் பெண் கவிஞர் ஆவார். ஆங்கிலக் கவிதையுலகின் குறிப்பிடத்தக்க படைப்பாளிகளுள் ஒருவராகக் கருதப்படுபவர். ஐக்கிய அமெரிக்காவின் மாசசூசெட்ஸ் மாநிலத்தைச் சேர்ந்த இவர் தனிமையைப் பெரிதும் விரும்பியவர். வெள்ளை நிற ஆடைகளை மட்டும் அணிதல், விருந்தினருடன் பேசுவதில் தயக்கம் காட்டுதல், அறையை விட்டு வெளியே வராதிருத்தல் போன்ற பழக்க வழக்கங்களால் விந்தையான பெண்ணாக அறியப்பட்டார். டிக்கின்சன் ஆயிரத்து எண்ணூறு கவிதைகளை எழுதினாலும் அவரது வாழ்நாளில் அவற்றுள் வெகு சிலவே அச்சில் வெளியாகின. மேலும்...


புளோரன்சு நைட்டிங்கேல் (1820 - 1910) நவீன தாதியியல் முறையை உருவாக்கிய ஆங்கிலேயத் தாதி ஆவார். போரில் காயம்பட்ட வீரர்களுக்கு ஓய்வின்றி மருந்திட்டவர். தாதிகளுக்கான பயிற்சி பள்ளியையும் இவரே முதலில் துவங்கினார். "விளக்கேந்திய சீமாட்டி" என்று அழைக்கப்பட்டார். இவர் ஒரு எழுத்தாளரும், புள்ளியியலாளாரும் ஆவார். இவர் பிரித்தானியச் செல்வச் செழிப்பான உயர்குடிக் குடும்பமொன்றில் இத்தாலி, புளோரன்சு நகரில் பிறந்தார். இவர் பிறந்த இடத்தின் பெயரைத்தழுவி இவருக்குப் பெயரிட்டார்கள். மேலும்...

அக்டோபர்

பண்டைய எகிப்தியர்களின் இறுதிச் சடங்குகள் மரணத்திற்கு பிறகும் உடல் மற்றும் உயிரின் அழியாமையை உறுதிப்படுத்த மந்திரங்களுடன் சடங்குகள் செய்வதுடன், இறந்தவர்களில் உடலைப் பதப்படுத்தி, சவப்பெட்டியில் வைத்து, மம்மியின் மூடி மீது மந்திர எழுத்துக்களை பொறிப்பதுடன், இறந்தவர்கள் பயன்படுத்திய பொருட்கள், இறந்தவர்களுக்கான உணவு வகைகளுடன் கல்லறைக் கோயியிலில் வைத்தனர். மேலும்...


நார்மெர் கற்பலகை பண்டைய எகிப்தின் துவக்க அரசு மரபு காலத்தின் முதல் வம்ச மன்னர் நார்மெர் நிறுவிய கல்வெட்டு பலகை ஆகும். அழகிய இக்கற்பலகையின் காலம் ஏறத்தாழ கிமு 3200 – 3000 ஆகும். 64 செமீ நீளம், 42 செமீ அகலம் கொண்ட இந்த அழகிய வண்டல் கல் தட்டு, எகிப்தின் தொல்லியல் வரலாற்றில் கண்டெடுக்கப்பட்ட அரிய வகையான கல்வெட்டு தொல்பொருள் என எகிப்தியவியல் அறிஞர்கள் கூறுகின்றனர். மேலும்...

நவம்பர்

தங்க நாடோடிக் கூட்டம் என்பது மங்கோலியாவில் தோன்றி பின் துருக்கிய மயமாக்கப்பட்ட 13 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த ஒரு கானேடாகும். இது கிப்சாக் கானேடு என்றும் சூச்சியின் உளூஸ் என்றும் அழைக்கப்படுகிறது. இந்நாடு 1255 இல் படு கானின் மறைவுக்குப் பின் 1359 வரை தழைத்தோங்கியது. இதன் இராணுவமானது இசுலாமைத் தழுவிய உசுபெக் கானின் (1312–1341) காலத்தில் வலிமையுடன் விளங்கியது. மேலும்...


பாபிலோன் தற்கால ஈராக் நாட்டின் கீழ் மெசொப்பொத்தேமியாவில் பாயும் யூப்ரடீஸ் ஆற்றின் இடது மற்றும் வலது கரையில், தற்கால ஈராக் நாட்டின் தலைநகரான பாக்தாத்திற்கு தெற்கே 100 கிலோ மீட்டர் தெற்கே, கி.மு. 1800 முதல் கி.மு. 6 ஆம் நூற்றாண்டு முடிய செழித்திருந்த பண்டைய நகரம் ஆகும். கி.மு. 19 ஆம் நூற்றாண்டில், முதல் பாபிலோனியாவின் முதல் வம்சத்தவர்களின் நகர அரசாக பாபிலோன் நகரம் விளங்கியது. மேலும்...