விக்கிப்பீடியா:ஆலமரத்தடி/தொகுப்பு46

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

அனைத்து விக்கிகளிலும் இருக்க வேண்டிய கட்டுரைகள்[தொகு]

அனைத்து விக்கிகளிலும் இருக்க வேண்டிய கட்டுரைகளின் பட்டியலில் பின்வரும் கட்டுரைகள் மட்டுமே நம் தளத்தில் இல்லை. அவற்றையும் உருவாக்கிவிட்டால் m:List_of_Wikipedias_by_sample_of_articles/Absent_Articles#ta_.E0.AE.A4.E0.AE.AE.E0.AE.BF.E0.AE.B4.E0.AF.8D பட்டியலில் எதுவும் இருக்காது. தவிர, புத்தாண்டில் அந்தப் பக்கம் தானியங்கி வழியாக இற்றைப்படுத்தப்பட்டு, m:List_of_Wikipedias_by_sample_of_articles பட்டியலிலும் நமது மதிப்பு உயரும். -- சுந்தர் \பேச்சு 15:22, 30 திசம்பர் 2010 (UTC)[பதிலளி]

பல தடவை நான் இப்பட்டியலில் உள்ளவற்றை முழுமையாக முடிக்க முயற்சி செய்திருக்கிறேன். ஆனால், ஒவ்வொரு முறையும் இற்றைப்படுத்தும்போது புதிதாக ஏதாவது வந்துகொண்டே இருப்பதால் "0" எண்ணிக்கையை எட்டமுடியாதுள்ளது. ---மயூரநாதன் 19:07, 30 திசம்பர் 2010 (UTC)[பதிலளி]
ஓ, அப்படியா? அந்தப் பட்டியலிலுள்ள பல கட்டுரைகளை நீங்கள் தான் தொடங்கியிருக்கிறீர்கள் என்பதையும் முன்னமே கவனித்தேன், மயூரநாதன். :) -- சுந்தர் \பேச்சு 05:16, 31 திசம்பர் 2010 (UTC)[பதிலளி]
செல்வா, செல்வராசு, மணியன் ஆகியோர் எஞ்சியுள்ள கட்டுரைகளைத் தொடங்கியுள்ளது கண்டு மகிழ்கிறேன். -- சுந்தர் \பேச்சு 05:17, 31 திசம்பர் 2010 (UTC)[பதிலளி]
மாத்திரை (மொழியியல்) என்ற கட்டுரையை நான் தொடங்கட்டுமா? ஆங்கிலக் கட்டுரை Syllable ஆகும்.

அன்பு விக்கியன் --சூர்ய பிரகாசு.ச.அ. 12:21, 3 சனவரி 2011 (UTC)[பதிலளி]

Syllable என்பதற்குத் தமிழ் "அசை" என்று நினைக்கிறேன். --மயூரநாதன் 18:30, 3 சனவரி 2011 (UTC)[பதிலளி]
ம்ம்ம்...நீங்கள் கூறுவது சரிதான் மயூரநாதன். தமிழ்நாட்டுப் பாடநூல் கழக நூல்களில் அவ்வாறு உள்ளதால் ஒரு வழிமாற்றையும் உருவாக்கி விடுகிறேன். (simple!)

அன்பு விக்கியன் --சூர்ய பிரகாசு.ச.அ. 15:27, 4 சனவரி 2011 (UTC)[பதிலளி]

தூதரக கட்டுரைகள் மொழிபெயர்ப்பு தொடர்பாக[தொகு]

நாடுகளின் (,சில நகரங்களின்) பெயர்களை மொழிபெயர்க்கும் கருவியின் துணைக்கொண்டு சில கட்டுரைகளை இங்கும், இங்கும் உருவாக்கியிருக்கிறேன். இந்தக் கருவி கொண்டு இங்குள்ள 400+ கட்டுரைகளை எளிதாக மொழிபெயர்க்கலாம். வெறும் நாடுகள், நகரங்கள் மட்டுமிருப்பதால் திருத்துவதும் எளிது. இதனையும் பார்க்கவும்-- மாஹிர் 08:14, 1 சனவரி 2011 (UTC)[பதிலளி]

நல்ல பணி, மாகிர். சற்று நேரம் கிடைத்ததும் இக்கருவியைப் பயன்படுத்திப் பார்க்கிறேன். -- சுந்தர் \பேச்சு 05:33, 3 சனவரி 2011 (UTC)[பதிலளி]
மாகிர் நல்ல பணி. ஆனால் பெயர்களை எளிமையான தமிழ் முறைப்படி மாற்ற வேண்டும். --செல்வா 04:44, 5 சனவரி 2011 (UTC)[பதிலளி]

Tracing a nomadic dialect from TN to Gujarat[தொகு]

Tracing a nomadic dialect from TN to Gujarat

The Hindu on Google (and other) Translation projects[தொகு]

Using Wikipedia to change the language of the Web --சோடாபாட்டில்உரையாடுக 09:59, 5 சனவரி 2011 (UTC)[பதிலளி]

நன்றி சோடா. நான் கூறிய இருவேறு கருத்துக்களைத் தவறுதலாக இணைத்து விட்டனர். பெரிய தவறு இல்லை. த இந்து நிருபரின் கேள்விகளுக்கு நான் எழுதிய மடலில் இருந்து (குறிப்புக்காக):


>In your opinion, in this mid to get content on, to enrich their software, do
>you think the quality of Wikipedia gets sacrificed?

The short answer is yes. Though the companies do have an intention of adding
more content to Wikipedia along with serving their business interests, quality
suffers. The problems are at several levels, technical, operational, and
philosophical. I'll address the philosophical part in the next question.

The translation tools have certain limitations: a) they do not lend themselves
well enough to translate wikitext -- text interspersed with wiki syntax. Because
of this, for example, we faced an issue of spurious red links to non-articles. I
wrote a patch to pywikipediabot in order to fix the mess the tools created
(cf. http://sourceforge.net/tracker/?func=detail&aid=3017517&group_id=93107&atid=603140) 
b) due to their business requirement of enriching their "translation memory", a
machine learning technique, they've built the tools to do more aligned
translations i.e. line-by-line. This creates a highly mechanical and unnatural
translation unsuitable for the consumption of native speakers.

At the operational level, the issues are:
1. the kind of freelance translators that they hired seem to have experienced
only in localisation of software or sometimes do not have any professional
translation experience
2. the company measures output in terms of number of articles and words added to
the corpus, with zero interest to the quality of translation
3. the third-party companies that get the contracts are incentivised only to
dump articles and not use community feedback to improve the articles or future
translations as would normally happen with volunteer editors

>Do you think it somewhat compromises on the community wisdom part of Wikipedia?

Yes. The process followed here is uncharacteristic of the way content gets added
to Wikiprojects. A typical article would be created as a stub by a volunteer,
then they would place a request for help in its talk page. Others will chip in
to improve the article and offer suggestions at the talkpage. The original
author and others will expand, copyedit, wikify, classify, enhance with pictures
and videos, and rewrite parts of the article. Whereas with contract work, the
translators dump the text and not even look back at how it has come up. They
didn't take talkpage feedback until we complained enough with the companies and
worked out a process for feedback and rating.


All said, there is still a chance to make it work by resolving the issues and
keeping wiki project requirements for quality and process as inviolable.
Ravishankar Ayyakkannu, a Tamil Wikipedian,
with inputs from other Tamil Wikipedians including me, has done a presentation
about this issue during Wikimania 2010. You can read the abstract
at http://wikimania2010.wikimedia.org/wiki/Submissions/A_Review_of_Google_Translation_project_in_Tamil_Wikipedia:_Role_of_voluntarism,_free_and_organically_evolved_community_in_ensuring_quality_of_Wikipedia and
approach him for more details. Both of us were the initial co-ordinators for
the project and USer:Sodabottle is the primary contact
now. They can give more information.
Arjuna Rao of Telugu Wikipedia has also interacted with
the Google team and he'll surely add more. Hari Prasad Nadig 
of Kannada Wikipedia has started dealing with this, I think.

DISCLAIMER:
1. Most of these, though deriving from community views, should be deemed
personal.
2. The above opinions entailed the Google translation project
(http://wikimania2010.wikimedia.org/wiki/Submissions/Google_translation) alone.
Microsoft Research's Wikibhasha is yet to be employed. I have noticed a few
improvements in their software. More details
at: http://www.mail-archive.com/wikimediaindia-l@lists.wikimedia.org/msg00963.html

3. The intentions of all involved are bona fide, just that the priorities are
not in alignment.

[...]
Bangla Wikipedians had issues with the project and it has
been stopped there at present, I believe.
See an update on that
at http://lists.wikimedia.org/pipermail/wikimediaindia-l/2010-December/001381.html Ragib
Hasan and Belayet  Hossain are the
contacts there.

For Google's side of the story, you can contact Dimple Batra 
and Michael Galvez.

-- சுந்தர் \பேச்சு 08:01, 6 சனவரி 2011 (UTC)[பதிலளி]

துடுப்பாட்ட உலகக்கிண்ணம்[தொகு]

2011 உலக்கிண்ணத் துடுப்பாட்டப் போட்டிகள் பெப்ரவரி 19 இல் ஆரம்பமாகவிருப்பதால், அதனையொட்டி பெப்ரவரி இரண்டாம் வாரத்தில் இருந்து 1975 முதல் 2011 வரை இடம்பெற்ற போட்டிகள் பற்றிய கட்டுரைகளை ஒரு நாளுக்கு அல்லது இரண்டு நாட்களுக்கு ஒன்று வீதம் முதற்பக்கக் கட்டுரைகளாக வெளியிடலாம். எனவே இக்கட்டுரைகளை மேம்படுத்தி உதவுமாறு போட்டிகளில் ஆர்வமுள்ளோரைக் கேட்டுக் கொள்கிறேன்.--Kanags \உரையாடுக 22:43, 7 சனவரி 2011 (UTC)[பதிலளி]

துடுப்பாட்டம் தொடர்புடைய கட்டுரைகளை ஆரம்பித்தும் மேம்படுத்தியும் வருகிறேன். உலகக்கிண்ணம் தொடர்பான பகுதிகளுக்கு முன்னுரிமை வழங்க எண்ணுகிறேன். --சிவகோசரன் 16:17, 9 சனவரி 2011 (UTC)[பதிலளி]
நானும் துடுப்பாட்டம் தொடர்புடைய கட்டுரைகளை துவங்கியும் மேம்படுத்தியும் வருகிறேன். இந்தப் பொருளில் வேண்டிய எண்ணிக்கையில் கட்டுரைகள் இருப்பதால் விக்கித் திட்டம்:துடுப்பாட்டம் எனத் துவங்கலாமா ? இந்த காலத்தில் சேரும் புதிய பயனர்களும் பங்களிக்கக்கூடிய வகையில் சில உதவி நிரல்களை உருவாக்க முடியுமா ? காட்டாக ஒவ்வொரு ஆட்டமுடிவில் இற்றைப்படுத்தல் போன்றன.--மணியன் 06:42, 20 சனவரி 2011 (UTC)[பதிலளி]
உலகக் கிண்ணம் என்பதற்கு பதிலாக உலகக் கோப்பை என்று கட்டுரைகளுக்கு தலைப்பு வைக்கவேண்டும். ஏனெனில் பல பேருக்கு உலகக் கோப்பை என்ற சொல்லே நினைவிருக்கும். உலகக்கிண்ணம் என்று தலைப்பு இருந்தால் கூகுள் போன்ற தேடுபொறிகளில் தேடும்போது விக்கிப்பீடியாவின் தளம் தெரியாது.--117.193.153.203 13:25, 24 சனவரி 2011 (UTC)[பதிலளி]
இதற்காக தலைப்பை மாற்றத் தேவையில்லை. கட்டுரையினுள் அடைப்புக்குறிகளுக்கும் மாற்று பெயரையும் குடுத்துவ்விட்டால் போதும். தேடுபொறிகளில் சிக்கி விடும். பின் ஒரு பக்க வழிமாற்று/redirect கொடுத்து விடலாம். cup என்பதற்கு கிண்ணம் என்றே அனைத்து ஆட்டக் கட்டுரைகளிலும் கையாண்டுள்ளோம். எனவே தலைப்பினை மாற்றாமல் அடைப்புகளுள் மாற்று பெயர் கொடுக்கலாம்.--சோடாபாட்டில்உரையாடுக 13:38, 24 சனவரி 2011 (UTC)[பதிலளி]

Alberta First Nation fights to save its language from oblivion[தொகு]

Alberta First Nation fights to save its language from oblivion

--Natkeeran 16:45, 8 சனவரி 2011 (UTC)[பதிலளி]

விக்கிமானியா[தொகு]

http://wikimania2011.wikimedia.org/wiki/Main_Page இங்கே தமிழில் நல்வரவு இடுதல் தேவையா? --சி. செந்தி 18:59, 10 சனவரி 2011 (UTC)[பதிலளி]

விக்கியூடக வலைப்பூவிலிருந்து -- தெற்கு உலகத்தின் மேற்கோள்கள்[தொகு]

இதில் விக்கியூடக ஆய்வாளர் ஆச்சல் மேற்கொள்ள இருக்கும் ஆய்வில் தமிழ் விக்கியும் இடம்பெறுகிறது என நினைக்கிறேன்.

Achal will be conducting field research in rural South Africa and India with Wikipedians and non-Wikipedians across three languages to explore ways to compensate for the gap in published/printed sources in many local languages. ...... Achal : "Even if every single person in the south with Internet access wanted to become an active editor on Wikipedia, there is still a problem that we are going to run up against. It’s a problem that bedevils everyone working in local languages in Asia and Africa, and it’s something we have no control over: the lack of published scholarly resources in these languages ...... Despite the problems, Tamil Wikipedia has about 25,000 articles, Malayalam Wikipedia has about 15,000, and Northern Sotho Wikipedia has about 600"

ஸ்ரீகாந்த் 17:52, 13 சனவரி 2011 (UTC)[பதிலளி]

தமிழ்/மலையாளத்தின் நிலையை ஆச்சால் சரிவர உணரவில்லை என நினைக்கிறேன். கொஞ்சம் பொதுப்படையாக சொல்லியிருக்கிறார். எல்லா உலகத் தெற்கு மொழிகளையும் ஒரே நிலையில் வைத்து பார்க்கிறார் போல் உள்ளது. அவர் சொல்லும் "concerning subjects that are specific to a particular people or place" என்பது தென் இந்திய மொழிகளுக்கு ஒத்து வராது. அதுவும் இந்தியாவிலேயே அதிகமான செய்தித்தாள்களும் புத்தகங்களும் வெளியாகும் மலையாளத்தை எப்படி இதில் சேர்த்தார் என்று தெரியவில்லை.
அங்கே நான் இட்ட மறுமொழி -
Actually for languages like Tamil and Malayalam, these resources exist offline for humanities subjects - the shortage is in hard sciences. For local subjects there is a surplus of published sources (The examples cited - Tamil and Malayalam have thriving print and newspaper industries). The problem lies in bringing the content online. There is no equivalent of Gbooks/Jstor for these languages and the newspapers and magazines are behind paywalls. I believe the thrust should be on convincing the governments and universities to share their archives online.

There are some projects like http://117.240.228.70/ and http://dspace.vidyanidhi.org.in:8080/, but a lot more have to be done.--சோடாபாட்டில்உரையாடுக 18:14, 13 சனவரி 2011 (UTC)[பதிலளி]

Noolaham Project (Tamil) has considerable publications on all subjects. There exist a 19 Volume Science Encyclopedia in Tamil. But, Tamil does lack resources on hard science compared to most European languages.--−முன்நிற்கும் கருத்து 216.123.169.252 (பேச்சுபங்களிப்புகள்) என்ற பயனர் ஒப்பமிடாமல் பதிந்தது.

பலருக்கு விக்கிப்பீடியா இன்னும் சிக்கல் நிறைந்ததாக உள்ளது[தொகு]

Jimmy Wales says Wikipedia too complicated for many, பிபிசி, சனவரி 14, 2011.--Kanags \உரையாடுக 03:49, 14 சனவரி 2011 (UTC)[பதிலளி]

விக்கிசெய்தியில்: n:பலருக்கு விக்கிப்பீடியா இன்னும் சிக்கல் நிறைந்ததாக உள்ளது, ஜிம்மி வேல்ஸ் கூறுகிறார்.--Kanags \உரையாடுக 05:02, 14 சனவரி 2011 (UTC)[பதிலளி]

மணல்தொட்டி விளையாட்டு[தொகு]

மணல் தொட்டியில் ஏதாவது பயிற்சி செய்துப்பார்க்க முனைந்து, முன்தோற்றம் காட்டு பொத்தானை சொடுக்கினால் கீழ்கண்ட ஸ்பாம் செய்தி தொடர்ந்து வருகிறது. என்ன காரணம்?

{சுப்ஹானல்லாஹு வபிஹம்திஹி சுப்ஹானல்லாஹில் அலீம். என்று100முறை சொன்னால் அல்லாஹ் கடல் அளவு பாவங்களை மன்னிக்கின்றான்.}

மற்றவர்களுக்கு இவ்வாறு நிகழ்கிறதா? --HK Arun 05:00, 14 சனவரி 2011 (UTC)[பதிலளி]

அப்படி ஏதும் உள்ளதாகத் தெரியவில்லை.--Kanags \உரையாடுக 05:02, 14 சனவரி 2011 (UTC)[பதிலளி]
விக்கிப்பீடியா:மணல்தொட்டி/box-footer இங்கே அந்த செய்தி இருந்தது. footer இல் யாரோ ஐபி இதனை சேர்த்திருந்தார். இப்போது நீக்கி விட்டேன்.--சோடாபாட்டில்உரையாடுக 05:05, 14 சனவரி 2011 (UTC)[பதிலளி]

விக்கிப்பீடியா பத்தாம் ஆண்டு நிகழ்வு[தொகு]

கேக் வெட்டுதல்

சென்னை விக்கியர்கள் சார்பில் விக்கி பத்தாம் ஆண்டு விழா நல்லமுறையில் நடந்தேறியது. சென்னைத் தொழில்நுட்ப நிறுவனத்தில் நடைபெற்ற நிகழ்வில் ஆங்கிலவிக்கிப்பீடியா சார்பில் பேசிய ரவிசந்தர் அங்கு கட்டுரைகளைத் தரப்படுத்தும் முறைமையை விளக்கினார். . மலையாள விக்கிப்பீடியர்களும் கலந்துகொண்டனர். தமிழ் விக்கி, செய்தி, விக்சனரி பற்றி நான் அறிமுகம் கொடுத்தேன்.

புத்தகவெளியீடு

தமிழ் விக்கியர் தேனி சுப்பிரமணி எழுதிய தமிழ் விக்கிப்பீடியா என்கிற புத்தகம் வெளியீடு செய்யப்பட்டது. அவ்விழாவில் கிழக்குப் பதிப்பக உரிமையாளர் திரு. பத்ரி சேசாத்திரி நூலை வெளியிட்டு சிறப்பித்தார். விக்கிப்பீடியாவின் பயன்கள் குறித்து நல்லபல கருத்துக்களை எடுத்துச் சொன்னார். முதல் பிரதியை இதழியலாளர் சுகதேவ் பெற்றுக்கொண்டார்.இரண்டாம் பிரதியை டாக்டர்.கவிஞர். இமாம் கவுஸ் மொய்தீன் அவர்கள் பெற்றுக் கொண்டார்கள்.

சிம்மி வேல்சு இசுகைப்பு மூலம் உரையாற்றுதல்

இவ்விழாவின் முத்தாய்ப்பாய் சிம்மிவேல்சு தொலைபேசி வாயிலாக எங்களைத் தொடர்புகொண்டு பின்னர் ஸ்கைப்பின் வீடியோ அரட்டை மூலம் வாழ்த்து தெரிவித்தார். இது விழாவில் கலந்து கொண்டவர்கள், ஒருங்கிணைப்பாளர்களுக்கு மகிழ்ச்சியைக் கொடுத்தது. புத்தகவெளியீடு மற்றும் சிம்மி வேல்சு உரை - வீடியோ

பயனர் மாஹிர் உரையாற்றுதல்

இந்நிகழ்வின் ஏற்பாட்டை மணியன் செய்திருந்தார்கள். வந்திருந்த அனைவருக்கும் விக்கி டி-சட்டை வழங்கப்பட்டது பரிதிமதி நிகழ்வைத் தொகுத்து வழங்கினார்கள். அண்ணா பல்கலை மாணவர் சூர்ய பிரகாசு மிகவும் ஆர்வமாய் கலந்து கொண்டார். செங்கைப்பொதுவன் அய்யா அவர்கள் விக்கி நிருவாகிகளின் சேவையை குறிப்பாக சிறிதரனைப் வெகுவாகப் பாராட்டிப் பேசினார். கலந்துகொண்டவர்களுக்கும் கல்லூரி நிறுவனத்திற்கும் நன்றி கூறி விழா இனிதே நிறைவடைந்தது.

இவ்விழாவிற்கு இடவசதியும், சிம்மி வேல்சுடன் ஸ்கைப் வழி உரையாடலுக்கும் ஏற்பாடு செய்த சிறிகாந்திற்கு(லாஜிக்விக்கி) மனமார்ந்த நன்றி. -- மாஹிர் 16:51, 15 சனவரி 2011 (UTC)[பதிலளி]

இன்னும் ஓரிருவர் கலந்துகொண்டிருந்தனர் அவர்களது பெயர் எனக்குத் தெரியவில்லை. தெரிந்தவர்கள் அறியத்தரவும். மேலும் புகைப்படம் எடுத்தவர்கள் பதிவேற்றுங்களேன். -- மாஹிர் 16:56, 15 சனவரி 2011 (UTC)[பதிலளி]
விழா நிகழ்வுகளைப் பகிர்ந்தமைக்கு நன்றிகளும் வாழ்த்துகளும்.--Kanags \உரையாடுக 00:34, 16 சனவரி 2011 (UTC)[பதிலளி]
கலந்து கொண்டவர்கள் பட்டியல் பரிதிமதியிடம் உள்ளது. அதிலிருந்து முக்கியமானவர்களை அல்லது விக்கிப்பீடியர்கள் அனைவரையும் அவர் இங்கு பதிவு செய்யலாம்.--தேனி.எம்.சுப்பிரமணி. 03:53, 16 சனவரி 2011 (UTC)[பதிலளி]
இன்னும் ஓரிரு தினங்களில் செய்கிறேன்.--பரிதிமதி 03:26, 17 சனவரி 2011 (UTC)[பதிலளி]
மிக்க மகிழ்ச்சி !! நிகழ்ச்சியை சிறப்பாக ஒருங்கிணைத்தமைக்கு மணியன்,மாஹிர்,பரிதிமதி,தேனியார்,ரவிசந்தர் மற்றும் பலருக்கு மனமார்ந்த நன்றிகள்.சிறப்புரை ஆற்றிய பத்ரி சேஷாத்ரி அவர்களுக்கு மிக்க நன்றி (பதிவு செய்து யூட்யூவில் பதிவேற்றியமைக்கு கூடுதல் நன்றிகள்) நிகழ்ச்சிக்கு வந்த அனைவருக்கும் நன்றி. கலந்து கொண்டவர்கள் பட்டியலில் மின்னஞ்சல் இருப்பின் அவர்களை சென்னை விக்கியர்கள் மடற்குழுவிற்கு அழைக்கலாம். ஸ்ரீகாந்த் 07:17, 16 சனவரி 2011 (UTC)[பதிலளி]

விழா நிகழ்விகளையும், படங்களையும் பகிர்ந்து கொண்டமைக்கு நன்றிகள். விழா சிறப்பாக நடக்க தமது பங்களிப்பை வழங்கிய அனிவருக்கும் வாழ்த்துக்கள்.--கலை 12:16, 16 சனவரி 2011 (UTC)[பதிலளி]

விழாவைச் சிறப்பாக நடத்திய அனைவருக்கும் பாராட்டுகள். கூடுதல் படங்களை விக்கி காமன்சு அல்லது பிளிக்கரில் ஏற்றினால் நன்றாக இருக்கும். நன்றி--இரவி 02:46, 22 சனவரி 2011 (UTC)[பதிலளி]
கொமன்சில் கூடுதல் படங்கள் உள்ளன.--Kanags \உரையாடுக 02:53, 22 சனவரி 2011 (UTC)[பதிலளி]

சுவிசு வானொலியில் புன்னியாமீனின் பேட்டி[தொகு]

சுவிட்சர்லாந்து அரச வானொலியான சுயிஸ் வானொலி தமிழ் நிகழ்ச்சியான கனல்-கே வானொலியில் புன்னியாமீன் அவர்களின் நேர்காணல் ஒன்று ஒலிப்பதிவாகியுள்ளதாக அவர் அறியத்தந்துள்ளார். இன்று ஞாயிற்றுக்கிழமை சுயிஸ் நேரப்படி இரவு எட்டு மணிக்கு ஒலிபரப்பாகவுள்ளது. விக்கிப்பீடியாவின் பத்தாண்டு நிறைவு தொடர்பாகவும், தமிழ் விக்கிப்பீடியா தொடர்பாகவும் சுமார் 1 மணி நேரம் ஒலிபரப்பாகவுள்ள மேற்படி பேட்டி முழுமையாக விக்கிப்பீடியா பற்றியதே என்றும் அறியத் தந்துள்ளார். இணையத்திலும் இதனைக் கேட்க முடியும் என நினைக்கிறேன். வாழ்த்துக்கள் புன்னியாமீன்.--Kanags \உரையாடுக 00:34, 16 சனவரி 2011 (UTC)[பதிலளி]

இது குறித்து புன்னியாமீன் அவர்கள் விக்கிப்பீடியர்களுக்கு அனுப்பியிருந்த மின்னஞ்சலில் இருந்து:

சுவிசு வானொலியில் புன்னியாமீன் அவர்களின் நேர்காணல் முழுவதும் [1] என்ற தளத்தில் கேட்கலாம். மிக அருமையான பேட்டி. பல விடயங்களை புன்னியாமீன் தொட்டுச் சென்றார். அஜீவன் மிகத்திறமையாக நேர்காணலை நடத்தியிருந்தார். இருவருக்கும் எனது வாழ்த்துக்கள்.--Kanags \உரையாடுக 04:43, 17 சனவரி 2011 (UTC)[பதிலளி]

அருமையான நேர்காணல். அஜீவன் இணையதளங்களில் மட்டறுத்தலால் கசப்பான அனுபவம் பெற்றிருக்கிறார் போலும், ”கருத்துகளை எதிர்த்தல்” என்பதைக் குறிப்பாகப் பிடித்துக் கொண்டார். புன்னியாமீன் மிக நன்றாக சமாளித்து அழகாக விக்கிப்பீடியா மீதே நேர்காணல் செல்லும்படி பார்த்துக் கொண்டார். :-). புதிய பயனர்களுடன் நாம் பேசுவது எவ்வளவு முக்கியமானது என்பதை புன்னியாமீனின் அனுபவங்களில் இருந்து உணர்ந்து கொண்டேன். இது துப்புரவுப் பணியில் ஈடுபடும் அனைவரும் கருத்தில் கொள்ள வேண்டியது. மாற்றினால், ஏன் மாற்றுகிறேன் என்பதை இனி ஒவ்வொரு முறையும் விளக்க முயலுகிறேன்.
விடுபட்டவையாக எனக்கு தோன்றியன-
1) தகவல் vs கருத்து என்பதை இன்னும் கொஞ்சம் அழுத்தி இருக்கலாம். தமிழ் இணையச் சூழலினால் இந்த வேறுபாடு சற்று மங்கியே உள்ளது. பலரும் கருத்துகளுக்கும் தகவல்களுக்கும் வேறுபாடு இல்லை என்றே பாவிக்கின்றனர். நான் விக்கிப்பீடியா பற்றி புதியவர்களிடம் பேசும் போது இதனை ஒரு நான்கைந்து முறை அழுத்தி சொல்லிவிடுகிறேன். (views differ, news doesn't என்று முன்பு விளம்பரப் பலகையில் கண்ட வாக்கியத்தை பயன்படுத்துகிறேன் :-))
2) அஜீவன் ஒரு பயனரது பங்களிப்பு அழிக்க/மாற்றப்படும் போது அவரது ஒரிஜினல் பிரதி அவரிடமே இல்லாமல் போவதால் தொலைந்து போகிறது என்பது போல சொன்னார். விக்கியில் மாற்றங்கள் செய்யப்பட்டாலும், பயனரின் ஒவ்வொரு ஆக்கமும், வரலாற்றுப்பக்கத்தில் சேமிக்கப்படுகின்றன. பிற்காலத்தில் பயனர் அதனை மீட்டெடுத்து பிற இடங்களில் பயன்படுத்திக் கொள்ளலாம். மேலும் கலைக்களஞ்சிய நடைக்கு ஒவ்வாதது என்று ஏதேனும் கட்டுரை முழுவதும் அழிக்கப்பட்டால், நிருவாகிகளிடம் வேண்டினால், கட்டுரையினை மீட்டெடுத்து அப்பயனருக்கு அளிப்பர்.

--சோடாபாட்டில்உரையாடுக 06:31, 17 சனவரி 2011 (UTC)[பதிலளி]


தங்கள் கருத்துக்களுக்கு நன்றி. இந்த நேர்காணல் சற்றும் எதிர்பாராத நேரத்தில் மேற்கொள்ளப்பட்டது. என்னுடைய வலைப்பூவில் இடம் பெற்ற கட்டுரையைப் படித்த அ. ஜீவன் விக்கிப்பீடியாவின் பத்தாவது ஆண்டு நிறைவடையும் நேரத்தில் விக்கிப்பீடியா பற்றி ஒரு நேர்காணலை தரமுடியுமா என 'சுவிஸ் கனல்கா' வானொலி நிலையக் கலையகத்தில் இருந்த படியே என்னோடு தொலைப்பேசியில் கேட்டுக்கொண்டார். . நிலையக் கலையகத்தில் இரண்டு மணிநேரத்துக்குள் ஒலிப்பதிவை மேற்கொள்ளவேண்டிய நிலை அவருக்கு. எனவே எனக்கு ஆயத்தப்படுத்திக்கொள்ளக்கூடிய அவகாசம் இருக்கவில்லை. போதாக்குறைக்கு மழை காரணமாக எமது பிரதேசத்தில் மின்சாரமும் இருக்கவில்லை. விக்கிப்பீடியா பற்றி என்னால் திரட்டப்பட்டிருந்த சகல குறிப்புகளும் கணனிக்குள் முடங்கிக்கிடந்தன. மனதில் அச்சநிலை ஏற்பட்டாலும், இந்த சந்தர்ப்பத்தை விட்டுக்கொடுக்க மனம் இடந்தரவில்லை. எனவே தைரியத்தை வரவழைத்துக் கொண்டு நேர்காணலுக்கு ஆயத்தமானேன். மனதிலிருந்த விடயத்தை வைத்துக்கொண்டே முகம் கொடுத்தேன். இதனால் கூறவேண்டிய பல விடயங்களைக் கூறிக்கொள்ள முடியவில்லை. இந்த நேர்காணலையும், என்னால் எழுதப்பட்ட கட்டுரைகளையும் (மேலும் தொகுத்து) புத்தகமாக்கும் எண்ணமுண்டு. அச்சந்தர்ப்பத்தில் விடுபட்ட அனைத்து விடயங்களையும் உள்வாங்கும் அதே நேரத்தில் புத்தகம் அச்சாகும் முன் நிர்வாகிகள் சிலருக்கு மூலப்பிரதியை வழங்கி திருத்தமிட்டபின் அச்சிடலாம் என திட்டமிட்டுள்ளேன். எனவே எனது நேர்காணலிலும் சரி, கட்டுரைகளிலும் சரி குறைபாடுகள் இருப்பின் சுட்டிக்காட்டுங்கள். அவற்றை கவனத்தில் எடுத்துக்கொள்வேன். இதனைக் கருத்திற் கொண்டு தங்களது மேலான கருத்துக்களையும், குறிப்புகளையும் அன்புடன் எதிர்ப்பார்க்கின்றேன்.

--P.M.Puniyameen 12:25, 17 சனவரி 2011 (UTC)[பதிலளி]

ஞாயிறு தினக்குரலில் விக்கிப்பீடியா பற்றி விரிவான கட்டுரை[தொகு]

இலங்கையில் முன்னணி தேசிய பத்திரிகைகளில் ஒன்றான ஞாயிறு தினக்குரலில் இன்றைய தினம் (2011.01.16) விக்கிப்பீடியா பற்றி என்னால் எழுதப்பட்ட விரிவான கட்டுரை 17ம்பக்கத்தில் முழுமையாக (முழுப்பக்கத்திலும்) இடம்பெற்றுள்ளது. இலங்கையைச் சேர்ந்த பயனர்கள் இன்றைய தினம் ஞாயிறு தினக்குரல் பத்திரிகையொன்றை வாங்கி வைத்துக் கொண்டால் எதிர்காலத்தில் இலங்கையில் நடத்தக்கூடிய விக்கி பட்டறைகளுக்கு உதவியாக இருக்குமென கருதுகின்றேன்.

ஞாயிறு தினக்குரலில் இணைய இணைப்பு தொடுப்பு முகவரி கீழே தரப்பட்டுள்ளது.

http://epaper.thinakkural.com/

2011.01.16 பத்திரிகையில் 17ம்பக்கத்தில் உள்ளது. முகப்புப் பக்கத்தில் உள்ளே உள்ள ஆக்கங்களின் முன்னோட்டத்தில் விக்கிப்பீடியா படத்துடன் இக்கட்டுரை இடம்பெற்றுள்ளது. --P.M.Puniyameen 11:26, 16 சனவரி 2011 (UTC)[பதிலளி]

புன்னியாமீனின் கட்டுரையை epaper.thinakkural.com தளத்தில் நேரடியாகப் பார்வையிடலாம். மேற்படி தளத்தில் 16 January, 2011 என்ற நாளைத் தெரிவு செய்து பக்கம் 17 ஐத் திருப்பலாம். நன்றி புன்னியாமீன்.--Kanags \உரையாடுக 12:22, 16 சனவரி 2011 (UTC)[பதிலளி]
நன்றி புன்னியாமீன். மிகச்சிறந்த கட்டுரை. விக்கி பற்றிய வரலாற்றினை சுருக்கமாகவும் தெளிவாகவும் பதிந்துள்ளீர்கள். ஆயினும் பத்தியின் இறுதியில் இலங்கையின் முதல் தமிழ் விக்கிப்பீடியா அறிமுகப்பட்டறை சஞ்சீவி சிவகுமார் அவர்களால் ”தென்கிழக்கு பல்கலைக்கழகத்தில்” இடம்பெற்றதாக கூறியிருந்தீர்கள். உண்மையில் அது ”கிழக்குப் பல்கலைக்கழகத்திலேயே” இடம்பெற்றது. (அப்பட்டறையில் நானும் கலந்து கொண்டு பயனடைந்தேன்). எனவே முடியுமானால் தயவுசெய்து திருத்தம் செய்க. --வினோத் 06:10, 17 சனவரி 2011 (UTC)[பதிலளி]

வினோத் - இத்தவறை புத்தகமாக்கும் போது நிவர்த்தித்துக் கொள்வேன். நன்றி. --P.M.Puniyameen 12:28, 17 சனவரி 2011 (UTC)[பதிலளி]

இக் கட்டுரை மூலம் நல்லதொரு அறிமுகம் விக்கியினை பற்றி வழங்கப்பட்டுள்ளது இலங்கையின் முண்ணனி தமிழ்நாளிதழ் ஒன்றில் முழுபக்கதில் இக்கட்டுரை பிரசுரிக்கபட்டிருந்தது தமிழ்விக்கியின் வளர்ச்சியின் செல்நெறியினை காட்டுகின்றது என்பது என் கருத்து.--கலாநிதி 15:06, 17 சனவரி 2011 (UTC)

விக்கிப்பீடியா வெளியுறவு தொடர்பாளர்கள்[தொகு]

கடந்த ஆண்டு 18 பெப்ரவரி 2010 அன்று விக்கிப்பீடியா வெளியுறவு தொடர்பாளர்களுக்கான சேர்ந்தெடுப்பு வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. அதன் பின்பு ஒரு குழு தேர்வு செய்யப்பட்டது. அதற்கான விக்கிப்பீடியா:வெளியுறவு தொடர்பாளர்கள் கூடலகம் எனும் பக்கம் ஒன்றும் உருவாக்கப்பட்டது. அதில் அவர்களுக்கான பொறுப்புக் காலம் திசம்பர் 31, 2010 வரை எனக் குறிப்பிடப்பட்டிருந்தது. தற்போது அது முடிவடைந்து விட்டதால் புதிய குழு ஒன்றைத் தேர்வு செய்ய சேர்ந்தெடுப்பு ஒன்றை நடத்தலாமே... --தேனி.எம்.சுப்பிரமணி. 17:47, 20 சனவரி 2011 (UTC)[பதிலளி]

இவர்கள் அனைவருமே தொடர்ந்து செயல்படுவதால், இந்த பொறுப்புக் காலத்தை இன்னும் ஓர் ஆண்டுக்கு நீட்டிக்கலாம் என் முன்மொழிகிறேன். சென்ற ஆண்டில் புதிதாக இணைந்து முனைப்புடன் செயல்படத் தொடங்கியுள்ளவர்கள் சிலரையும் இப்பட்டியலில் இணைக்கலாம். குறிப்பாக, இலங்கைக்கான தொடர்பாளர்களை அறிவிக்க வேண்டும். --இரவி 03:48, 21 சனவரி 2011 (UTC)[பதிலளி]

Bilingual children have an edge, research shows[தொகு]

நல்ல இணைப்புகள் நன்றி.--சோடாபாட்டில்உரையாடுக 18:13, 20 சனவரி 2011 (UTC)[பதிலளி]

Are there any Punjabi’s in the house?[தொகு]

--Natkeeran 20:54, 23 சனவரி 2011 (UTC)[பதிலளி]