ஒண்டிப்புதூர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

ஒண்டிப்புதூர் என்பது (ஆங்கிலம் : Ondipudur) இந்தியாவின் மாநிலங்களில் தமிழகத்தில் உள்ள கோயம்புத்தூர் மாநகரின் கிழக்கு வாசலாக கருதப்படும் ஓர் மாநகப் பகுதியாகும். இது கோயம்புத்தூர் மாவட்டத்தின் சிங்காநல்லூர் வட்டத்தில் அமைந்துள்ளது. இது கோவை மக்களவை தொகுதிக்கும் சிங்காநல்லூர் சட்டமன்ற தொகுதிக்கும் உட்பட்டதாகும். கோவை மாநகராட்சியின் கிழக்கு மண்டலத்தில் அமைந்துள்ளது.[1][2][3]

ஒண்டிப்புதூர்
மாநகரப் பகுதி
Country இந்தியா
மாநிலம்தமிழ்நாடு
மாவட்டம்Coimbatore
Languages
 • Officialதமிழ்
நேர வலயம்இ.சீ.நே. (ஒசநே+5:30)
பின்கோடு641001,641008
Telephone code+91-422
வாகனப் பதிவுTN-37
Coastline0 கிலோமீட்டர்கள் (0 mi)

மக்கள் தொகை[தொகு]

2011 மக்கள் தொகை கணக்கெடுப்பு படி இந்த மாநகரப் பகுதியில் 40,000 அதிகமானோர் வசிக்கின்றனர். மேலும் வெளிமாவட்ட மக்கள் பரவலாக காணப்படுகின்றனர். இவற்றுள் 53% பேர் ஆண்களும் 47% பேர் பெண்களும் ஆவர்.

போக்குவரத்து[தொகு]

கோவை மாநகரின் கிழக்கு வாயிலாக இருப்பதால் கிழக்கு, தென் மாவட்டங்களுக்கு அதிகளவில் பேருந்துகள் இயக்கப்படுகிறது. குறிப்பாகமதுரை, திருநெல்வேலி, தூத்துக்குடி, சிவகங்கை, தேனி, விருதுநகர், கிழக்கு மாவட்டங்களான திருச்சிராப்பள்ளி, கரூர், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், கும்பகோணம் ஆகிய பகுதிகளுக்கு நேரடி பேருந்து போக்குவரத்து சேவை உள்ளது. இது தவிற அருகாமையில் உள்ள திருப்பூர், பல்லடம், காங்கேயம், தாராபுரம், வெள்ளகோயில், கொடுமுடி ஆகிய பகுதிகளுக்கும் பேருந்துகள் இயக்கப்படுகிறது. இது தவிற அருகாமை சிற்றூர்களுக்கு நகரப் பேருந்துகள் இயக்கப்படுகின்றன. மேலும் ஒண்டிப்புதூர் போக்குவரத்து சேவையை மாநகர் போக்குவரத்து கழகம் - கோவை வழங்குகிறது.

மேற்கோள்கள்[தொகு]

  1. Madhavan, Karthik (13 July 2012). "Clean Saroja Mill Canal, say residents of Coimbatore". தி இந்து (Coimbatore). http://www.thehindu.com/news/cities/Coimbatore/article3634682.ece. 
  2. "Dusty service roads below Ondipudur flyover".
  3. "Space availability a challenge for metro rail project planners". https://www.thehindu.com/news/cities/Coimbatore/space-availability-a-challenge-for-metro-rail-project-planners/article30777877.ece. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஒண்டிப்புதூர்&oldid=3920284" இலிருந்து மீள்விக்கப்பட்டது