மு. க. வெல்லோடி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
மு. க. வெல்லோடி
ஐக்கிய இராச்சியத்துக்கான இந்தியத் தூதர்
பதவியில்
ஏப்ரல் 1947 – ஆகத்து 1947
முன்னையவர்சாமுவேல் ரங்கநாதன்
பின்னவர்வே. கி. கிருஷ்ண மேனன்
ஐதராபாத் இராச்சியத்தின் முதலமைச்சர்
பதவியில்
26 சனவரி 1950 – 6 மார்ச் 1952
சுவிட்சர்லாந்துக்கான இந்தியத் துணைத் தூதர்
பதவியில்
20 சூன் 1958 – 5 சனவரி 1962
முன்னையவர்மோகன் சின்கா மேத்தா
பின்னவர்முகமது அப்துல் ரௌப்
இந்திய அமைச்சரவைச் செயலாளர்
பதவியில்
1 ஆகத்து 1957 - 4 சூன் 1958
முன்னையவர்ஒய். என். சுக்தாங்கர்
பின்னவர்விஷ்ணு சஹாய்
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு1896
கோட்டக்கல், சென்னை மாகாணம், பிரித்தானியாவின் இந்தியப் பேரரசு (தற்போதைய மலப்புறம் மாவட்டம், கேரளம்)
இறப்பு1987 (அகவை 90–91)
சென்னை, தமிழ்நாடு, இந்தியா
துணைவர்குஞ்ஞிகாவு கோகிலம்மா

முல்லத்து கதிங்கி வெல்லோடி (Mullath Kadingi Vellodi) (இந்தியக் குடிமைப் பணி) (1896-1987) ஐதராபாத் இராச்சியத்தில் முதலமைச்சராக இருந்தார். [1] [2] ஐதராபாத் நிசாமால் ஆளப்பட்ட ஐதராபாத் மாநிலத்தின் வீழ்ச்சிக்குப் பின்னர் இந்திய அரசாங்கத்தால் இவர் நியமிக்கப்பட்டார்.

இந்தியக் குடிமைப் பணியில் உறுப்பினராக இருந்த இவர், ஜவுளி ஆணையராகவும், பிரித்தானியப் பேரரசு காலத்தில் தொழில்கள் மற்றும் பொது விநியோகத் துறையில் அலுவலக இணை செயலாளராகவும் இருந்தார். இவர் பேரரசியின் 1944 பிறந்தநாள் மரியாதை பட்டியலில் இந்திய சாம்ராஜ்யத்தின் தோழராக (சிஐஇ) நியமிக்கப்பட்டார். இவர் இந்திய அரசாங்கத்தில் மூத்த அரசு ஊழியராக இருந்தார். இவர் 1957 முதல் 1958 வரை திட்டக் குழுவின் அமைச்சரவைச் செயலாளராகவும் இருந்தார். [3]

ஆரம்ப கால வாழ்க்கை[தொகு]

வேல்லோடி கோழிக்கோடு நாட்டில் கே. சி. மனவேதன் ராஜாவின் நான்காவது மகன் ஆவார். சென்னை, மாநிலக் கல்லூரியில் கல்வி பயின்ற இவர் 1921 திசம்பரில் இந்தியக் குடிமைப்பணியில் சேர்ந்தார். 1921-1944 வரை இவர் பல்வேறு பதவிகளை வகித்தார். 1944 ஆம் ஆண்டில் இவர் ஜவுளி ஆணையராகவும், கைத்தொழில் மற்றும் பொது விநியோகத் துறையில் அலுவலக இணை செயலாளராகவும் 1945 வரை நியமிக்கப்பட்டார்.

1947 ஏப்ரல்-ஆகஸ்ட் முதல் லண்டனில் இந்தியாவின் துணைத் தூதராக செயல்பட்டு, அங்குள்ள சுதந்திர கொண்டாட்டங்களை மேற்பார்வையிட்டார். இறக்குமதி மற்றும் ஏற்றுமதி கட்டுப்பாட்டாளர் பதவியை ஏற்க 1947இல் மீண்டும் தில்லிக்கு திரும்பினார்.

முதல்வர் (1950-52)[தொகு]

ஐதராபாத் மாநிலத்தின் முதல்வராக நியமிக்கப்பட்ட இவர், சென்னை மாநிலம் மற்றும் பம்பாய் மாநிலத்தைச் மாநிலத்தை நிர்வகித்தார்.

இராஜதந்திரி[தொகு]

ஏப்ரல்-ஆகஸ்ட் 1947 முதல் லண்டனுக்கு இந்திய உயர் ஸ்தானிகராக செயல்பட்டு வந்தார். 1958 சூன் 20 முதல் 1961 திசம்பர் 6 வரை இவர் சுவிட்சர்லாந்தின் பேர்னுக்கான இந்தியத் தூதராக இருந்தார்.

குடும்பம்[தொகு]

டி. எம்.குஞ்ஞிகாவு கோவிலம்மா என்பவரை மணந்தார். இவர்களுக்கு கமலா, வாசுதேவன் என்ற இரண்டு குழந்தைகள் இருந்தனர்.

மேலும் காண்க[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=மு._க._வெல்லோடி&oldid=3888712" இலிருந்து மீள்விக்கப்பட்டது