அபிசேக் பானர்ஜி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
அபிசேக் பானர்ஜி
அபிசேக் பானர்ஜி
இந்திய நாடாளுமன்ற மக்களவை உறுப்பினர்
பதவியில் உள்ளார்
பதவியில்
2014
முன்னையவர்சமோந்திர நாத் மித்ரா
தொகுதிடையமண்ட் துறைமுக மக்களவைத் தொகுதி, தெற்கு 24 பர்கனா மாவட்டம்
இளைஞர் அணி தலைவர், அகில இந்திய திரிணாமுல் காங்கிரசு
பதவியில் உள்ளார்
பதவியில்
2011
மாணவர் அணி தலைவர், அகில இந்திய திரிணாமுல் காங்கிரசு
பதவியில் உள்ளார்
பதவியில்
2011
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு7 November 1987 (1987-11-07) (வயது 36)
கொல்கத்தா, மேற்கு வங்காளம், இந்தியா
உறவினர்கள்மம்தா பானர்ஜி (அத்தை)
முன்னாள் கல்லூரிஇந்தியத் திட்டமிடல் மற்றும் மேலாண்மைக் கழகம்
தொழில்சமூக ஆர்வலர், அரசியல்வாதி

அபிசேக் பானர்ஜி (Abhishek Banerjee)[1] (பிறப்பு: 7 நவம்பர் 1987) இந்தியாவின் மேற்கு வங்க மாநில அகில இந்திய திரிணாமுல் காங்கிரசு கட்சி அரசியல்வாதி ஆவார். அபிசேக் பானர்ஜி அகில இந்திய திரிணாமுல் காங்கிரசு கட்சியின் தலைவரும், மேற்கு வங்க முதலமைச்சரான மம்தா பானர்ஜியின் அண்ணன் மகன் ஆவார்.

இந்தியத் திட்டமிடல் மற்றும் மேலாண்மைக் கழகத்தில் பட்டம் பெற்ற அபிசேக் பானர்ஜி, 2014 இந்தியப் பொதுத் தேர்தலில், தெற்கு 24 பர்கனா மாவட்டத்தில் உள்ள டையமண்ட் துறைமுக மக்களவைத் தொகுதிலிருந்து, இந்திய நாடாளுமன்ற மக்களவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டார்.[2]2019 இந்தியப் பொதுத்தேர்தலில் இவர் மீண்டும் டையமண்ட் துறைமுகம் தொகுதியிலிருந்து மீண்டும் மக்களவை உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[3]

மேலும் இவர் 2011 முதல் அகில இந்திய திரிணாமுல் காங்கிரசு கட்சியின் மாணவர் மற்றும் இளைஞர் அணித் தலைவராக உள்ளார்.[4]மேலும் அபிசேக் பானர்ஜி 2019 முதல் அகில இந்திய திரிணாமுல் காங்கிரசு கட்சி நிலைக்குழ உறுப்பினராக உள்ளார்.[5][5]

வழக்குகள்[தொகு]

மேற்கு வங்காள ஆசிரியர்கள் நியமன முறைகே வழக்கில் அபிசேக் பானர்ஜிக்கு அமலாக்க இயக்குனரகம் 4 அக்டோபர் 2023 அன்று புதிய அழைப்பானை அனுப்பியது.[6]

மேற்கோள்கள்[தொகு]

  1. "Prince of Trinamool". இந்தியா டுடே. September 12, 2020. https://www.indiatoday.in/magazine/states/story/20200921-prince-of-trinamool-1720876-2020-09-12. 
  2. "Elections.in - India's First Elections Website".
  3. "Elections.in - India's First Elections Website".
  4. PTI (17 October 2014). "Mamata Banerjee sets stage for nephew Abhishek for bigger role in Trinamool Congress". dnaindia.com. Daily News and Analysis. பார்க்கப்பட்ட நாள் 14 April 2020. Entrusting Trinamool Congress MP and nephew Abhishek Banerjee with more responsibilities, Trinamool Congress supremo Mamata Banerjee today merged the 'Trinamool Congress Yuva' with the party's youth wing.
  5. 5.0 5.1 "Parliament of India - Lok Sabha Official Website".
  6. ED issues summons to TMC leader Abhishek Banerjee, family members in school recruitment scam
"https://ta.wikipedia.org/w/index.php?title=அபிசேக்_பானர்ஜி&oldid=3814300" இலிருந்து மீள்விக்கப்பட்டது