நயா சார் தீவு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
நயா சார் தீவு
நயா சார் தீவு is located in மேற்கு வங்காளம்
நயா சார் தீவு
புவியியல்
அமைவிடம்வங்காள விரிகுடா
தீவுக்கூட்டம்சுந்தரவனக்காடுகள்
நிர்வாகம்
இந்தியா
மக்கள்
மக்கள்தொகை2500

நயா சார் தீவு (Nayachar) இந்தியாவின் மேற்கு வங்காள மாநிலத்தின் கிழக்கு மிட்னாபூர் மாவட்டத்தில், வங்காள விரிகுடாவில் அமைந்த தீவுப்பகுதியாகும். இத்தீவு சுந்தரவனக்காடுகளின் ஒரு பகுதியாகும். இத்தீவு மீன் பிடி தொழிலாளர்களின் குடியிருப்புகள் கொண்டது. முன்னர் மேற்கு வங்காளத்தை ஆட்சி செய்த இந்தியப் பொதுவுடமைக் கட்சி (மார்க்சிஸ்ட்) தலைமையிலான இடதுசாரி கட்சிகளின் அரசாங்கம், இத்தீவில் சலீம் நிறுவ்னத்தினர் வேதியியல் தொழிற்சாலையை நிறுவ திட்டமிட்டது.[1] இதற்கு பொதுமக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். 2011-இல் ஆட்சிக்கு வந்த அகில இந்திய திரிணாமுல் காங்கிரசு, நயா சார் தீவில் வேதியியல் தொழிற்சாலை அமைக்கும் திட்டத்தை கைவிட்டது. [2]

ஹல்டியாவிற்கும், நந்திகிராமுக்கும் இடைப்பட்ட பகுதியில் அமைந்த நயா சார் தீவுப்பகுதியை ஒரு சூழலியல் சுற்றுலாத்தலமாக மாற்றுவதற்கு மேற்கு வங்காள அரசு திட்டம் தீட்டியுள்ள்து.[3]


Cities and towns in Haldia subdivision of Purba Medinipur district
M: municipal city/ town, CT: census town, R: rural/ urban centre, S: port
Owing to space constraints in the small map, the actual locations in a larger map may vary slightly

மேற்கோள்கள்[தொகு]

  1. "Salim SEZs, 6 others given green signal". Calcutta, India: The Telegraph, 7 October 2006. 2006-10-07. http://www.telegraphindia.com/1061007/asp/frontpage/story_6837797.asp. 
  2. "Nayachar project scrapped". பார்க்கப்பட்ட நாள் 2011-09-15.
  3. Eco-tourism plans for Nayachar island

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=நயா_சார்_தீவு&oldid=3781064" இலிருந்து மீள்விக்கப்பட்டது