சமீர் மன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சமீர் மன்
தனிநபர் தகவல்
பிறந்த பெயர்சமீர் மன் நசீமா மன்சில்
Shameer Mon Naseema Manzile
தேசியம்இந்தியர்
பிறப்பு20 அக்டோபர் 1983 (1983-10-20) (அகவை 40)
விளையாட்டு
நாடு இந்தியா
விளையாட்டுதடகளம்

சமீர் மன் நசீமா மன்சில் (Shameer Mon Naseema Manzile) இந்தியாவைச் சேர்ந்த ஒரு தடகள வீர்ராவார். 1983 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 20 ஆம் தேதி இவர் பிறந்தார். கேரளாவைச் சேர்ந்த இவர் 4 × 100 மீட்டர் தொடர் ஓட்டப்பந்தயத்தில் இந்தியாவின் சார்பாக பன்னாட்டுப் போட்டிகளில் இவர் பங்கேற்றுள்ளார்.

சமீர் மன்னை உள்ளடக்கிய அணி 4 × 100 மீட்டர் தொடர் ஓட்டப் பந்தயத்தில் இந்திய தேசிய சாதனையை படைத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கதாகும். 2010 ஆம் ஆண்டு புதுதில்லியில் நடைபெற்ற 19 ஆவது பொதுநலவாய விளையாட்டுப் போட்டிகளில் இந்தியாவின் சார்பாக பங்கேற்ற 4 x 100 மீட்டர் தொடரோட்ட அணி வெண்கலப் பதக்கம் வென்றது. இந்த அணியில் சமீரும் ஓர் உறுப்பினராக இருந்தார். இறுதிப் போட்டியில் வெற்றி பெற்ற இந்திய அணி இப்போட்டியில் தேசிய சாதனையையும் படைத்தது. [1]

2010 ஆம் ஆண்டு நடைபெற்ற ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் 4 × 100 மீட்டர் தொடரோட்டப் போட்டியில் இந்திய அணி நான்காவது இடத்தை பிடித்தது. சமீர் இந்த அணியில் மூன்றாவது ஓட்டக்கார்ராக ஓடினார். [2] ஆனால் ஊக்க மருந்து சோதனையில் இவரது அணியில் இடம்பெற்றிருந்த சத்யா தோல்வியுற்ற காரணத்தால் அணியின் முடிவு இரத்து செய்யப்பட்டது. [3]

மேற்கோள்கள்[தொகு]

புற இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=சமீர்_மன்&oldid=3318555" இலிருந்து மீள்விக்கப்பட்டது