பூரி பாய்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பூரி பாய்
பாணிபில் கலை

பூரி பாய் (Bhuri Bai) ஒரு இந்திய பில் ஓவியக் கலைஞராவார். மத்தியப் பிரதேசத்திற்கும் குசராத்துக்கும் எல்லையில் அமைந்துள்ள பிடோல் என்ற கிராமத்தில் பிறந்தார். இவர், இந்தியாவின் மிகப்பெரிய பழங்குடி குழுவான பில் சமூகத்தைச் சேர்ந்தவர். மத்திய பிரதேச அரசு கலைஞர்களுக்கு வழங்கிய மிக உயர்ந்த மாநில மரியாதை உட்பட பல விருதுகளை வென்றுள்ளார். [1] 2021 ஆம் ஆண்டில் இந்தியாவின் நான்காவது மிக உயர்ந்த குடிமை விருதான பத்மசிறீ விருது இவருக்கு வழங்கப்பட்டது. [2]

பூரி பாய் வரைந்த பாரம்பரிய ஓவியம்

ஆரம்ப கால வாழ்க்கை[தொகு]

இவரது சமகால ஜங்கர் சிங் சியாமைப் போலவே, போபால் பாரத் பவனின் ஜகதீஷ் சுவாமிநாதன் இவரையும் ஊக்குவித்தார். இவர், ஓவியங்கள் தயாரிக்க அக்ரிலிக் வண்ணங்களையும் காகிதத்தையும் பயன்படுத்தத் தொடங்கினார். அதற்கு முன், இவரும், தனது சமூகத்தின் மற்ற உறுப்பினர்களைப் போலவே, தனது வீட்டின் சுவர்களில் கலையை உருவாக்கினார். பித்தோரா ஓவியங்களை தயாரிப்பதில் இவர் திறமையானவர்.

"கிராமத்தில், தாவரங்கள் மற்றும் களிமண்ணிலிருந்து வண்ணத்தை எடுக்க நாங்கள் மிகவும் கடினமாக உழைக்க வேண்டியிருந்தது. இங்கே எனக்கு பல வண்ண நிழல்களும் ஆயத்த தூரிகையும் வழங்கப்பட்டன! ” [3]

ஓவியம் தவிர, குடிசைகள் தயாரிப்பதிலும் இவர் திறமையானவராக இருந்தார். தனது தாயார் ஜாப்பு பாயிடமிருந்து இதனைக் கற்றுக்கொண்டார். தான் வசிக்கும் போபாலில் இந்திரா காந்தி ராஷ்டிரிய மானவ் சங்கராலயா அல்லது மனித அருங்காட்சியகத்தில் தனது பில் சமூகத்தின் குடிசைகளை கட்டுவதற்கு இவர் பங்களித்தார். [4] உண்மையில், இவர் முதன்முதலில் போபாலுக்கு வந்தபோது, பாரத் பவனில் கட்டுமானத் தொழிலில் ஈடுபட்டிருந்தார் - ஒரு நாளைக்கு ரூ .6 ஊதியம் பெற்று வந்தார். இங்குதான் இவர் முதலில் ஜகதீஷ் சுவாமிநாதனை சந்தித்தார். அவர் இவரது திறமையைக் கண்டறிந்து வண்ணம் தீட்ட ஊக்குவித்தார். [5] பூரி பாய் தனது சமூகக் கலைஞரான லாடோ பாயுடன் இணைந்து தனது பணியைத் தொடங்கினார். [6]

பாணியும் கருப்பொருள்களும்[தொகு]

புது தில்லி கலை அருங்காட்சியகத்தில் பித்தோரா ஓவியங்கள்

பில் கலை இந்தியாவின் பழங்குடி கலை வடிவங்களில் மிகப் பழமையானது என்று சிலர் கருதுகின்றனர். இது ஆத்திரேலியாவின் பூர்வீக கலையுடன் ஒற்றுமையைக் கொண்டுள்ளது. குறிப்பாக பல வண்ண புள்ளிகளை நிரப்பி இது வரையப்படுகிறது. [7] [8] பூரி பாய் தனது சமூகத்தின் முதல் கலைஞராக காகிதத்தில் ஓவியம் தீட்டத் தொடங்கினார். இவரது பொதுவான வண்ணமயமான ஓவியங்கள், பொதுவான புராண கருப்பொருள்கள், கிராமப்புறக் காட்சிகள் , மனித-விலங்கு தொடர்பு ஆகியவற்றைச் சித்தரிக்கின்றன. இருப்பினும் இவரது பிற்கால படைப்புகள் விமானங்கள் மற்றும் செல்லிடத் தொலைபேசிகள் போன்ற நவீன கூறுகளை இணைத்துள்ளன. [9]

விருதுகள் & மரியாதை[தொகு]

  • மத்தியப்பிரதேச அரசு வழங்கிய ஷிகர் சம்மான். [10] 1986இல் இவருக்கு வழங்கப்பட்டது.
  • அகல்யா சம்மான், 1998
  • இராணி துர்காவதி விருது, 2009
  • பத்மசிறீ விருது, 2021

மேற்கோள்கள்[தொகு]

  1. "Bhuri Bai | Paintings by Bhuri Bai | Bhuri Bai Painting - Saffronart.com". Saffronart. பார்க்கப்பட்ட நாள் 2019-03-15.
  2. "Padma Awards 2021 announced". Ministry of Home Affairs. பார்க்கப்பட்ட நாள் 26 January 2021.
  3. "Bhuri Bai of Pitol | IGNCA" (in அமெரிக்க ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2019-03-15.
  4. "Bhuri Bai Jher". Bhil Art (in அமெரிக்க ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2019-03-18.
  5. Choudhury, Rabindra Nath (2017-10-07). "Woman gets Bhil tribal art world recognition". The Asian Age. பார்க்கப்பட்ட நாள் 2019-03-18.
  6. "Lado Bai | IGNCA" (in அமெரிக்க ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2019-03-26.
  7. "Tribal tones". Deccan Herald (in ஆங்கிலம்). 2014-10-18. பார்க்கப்பட்ட நாள் 2019-03-18.
  8. Administrator, Website (2015-04-14). "Gond art and its counterparts in India and Australia: Comparing the works of Bhil, Gond and Rathwa tribal artists – Madhya Pradesh and Gujarat". Tribal Cultural Heritage in India Foundation (in பிரிட்டிஷ் ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2019-03-18.
  9. "Bhuri Bai | Sutra Gallery LLC". sutragallery (in அமெரிக்க ஆங்கிலம்). Archived from the original on 2017-08-26. பார்க்கப்பட்ட நாள் 2019-03-18.
  10. "शिखर सम्मान", विकिपीडिया (in இந்தி), 2018-02-03, பார்க்கப்பட்ட நாள் 2019-03-15
"https://ta.wikipedia.org/w/index.php?title=பூரி_பாய்&oldid=3584794" இலிருந்து மீள்விக்கப்பட்டது