கேம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கேம்
இயக்கம்ஜான் அமிர்தராஜ்
தயாரிப்புஎஸ். சுந்தராண்டி
இசைஎஸ். பி. வெங்கடேஷ்
நடிப்புகார்த்திக்
வினோத் குமார்
மனோஜ் கே. ஜெயன்
இராதா
ஒளிப்பதிவுடி. தாமோதரன்
படத்தொகுப்புகிருஷ்ணா
கலையகம்சிறீமாசாணி அம்மன் பிக்சர்ஸ்
வெளியீடுநவம்பர் 4, 2002 (2002-11-04)
நாடுஇந்தியா
மொழிதமிழ்

கேம் (Game) என்பது 2002 ஆம் ஆண்டு வெளியான இந்திய தமிழ் நாடகத் திரைப்படம் ஆகும். ஜான் அமிர்தராஜ் இயக்கிய இப்படத்தில் கார்த்திக் மற்றும் வினோத் குமார் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்தனர். சிறீமாசணி அம்மன் பிக்சர்ஸ் தயாரித்த இப்படத்திற்கு எஸ். பி. வெங்கடேஷ் இசை அமைத்துள்ளார். இப்படம் பல தாமதங்களுக்குப் பிறகு 2002 நவம்பர் 4 இல் எதிர்மறையான விமர்சனங்களுடன் வெளியிடப்பட்டது.[1]

நடிகர்கள்[தொகு]

தயாரிப்பு[தொகு]

ஜான் அமிர்தராஜ் 1990 களின் பிற்பகுதியில் கார்த்திக்குடன் கூட்டாளி என்ற படத்தைத்தில் இணைந்து பணியாற்றத் தொடங்கினார். அதில் திவ்யா தத்தாவும் நடித்திருந்தார். ஆனால் படத்தயாரிப்பில் ஏற்பட்ட தாமதங்களால், படத்தின் செலவினங்களில் விளைவை ஏற்படுத்தியது. தாமதங்களால் நடிகர்களும் பாதிக்கப்பட்டனர்.[2] படத்திற்காக, கார்த்திக் 100 மகிழுந்து விளக்குகள் கொண்ட ஒரு பாடல் காட்சியில் பங்கேற்றார், அனுராதா ஸ்ரீராம் பாடிய அப்பாடலுக்கு இராணி ஆடினார். படம் மெதுவாக தயாரிக்கபட்டு பின்னர் அதன் பெயர் கேம் என்று மாற்றப்பட்டது. பின்னர் 2002 இல் தாமதமாக வெளியானது.[3]

இசை[தொகு]

படத்திற்கு எஸ். பி. வெங்கடேஷ் இசையமைத்தார்.[4]

குறிப்புகள்[தொகு]

  1. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2012-11-10. பார்க்கப்பட்ட நாள் 2022-01-09.
  2. "1997-98 Kodambakkam babies Page". Archived from the original on 3 March 2016. பார்க்கப்பட்ட நாள் 26 March 2014.
  3. "tamil movie site". Archived from the original on 2016-03-04. பார்க்கப்பட்ட நாள் 2021-02-12.
  4. https://apps.apple.com/ca/album/game-original-motion-picture-soundtrack/id1371490854
"https://ta.wikipedia.org/w/index.php?title=கேம்&oldid=3659893" இலிருந்து மீள்விக்கப்பட்டது