பச்சை-விளக்கு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

பச்சை-விளக்கு (Green-light) என்பது ஒரு திட்டத்துக்கு முன்னேற அனுமதி வழங்குவதாகும். இந்தச் சொல் பச்சை போக்குவரத்து சைகை விளக்கு சமிக்ஞை குறியான "மேலே செல்லுங்கள்" என்பதைக் குறிக்கின்றது.[1]

இது திரைப்படம் மற்றும் தொலைக்காட்சித் தொழில் சூழலில் பச்சை விளக்கு என்பது அதன் தயாரிப்பு நிதியை முறையாக அங்கீகரிப்பதும், நிதியுதவியில் ஈடுபடுவதும் ஆகும். இந்த திட்டம் மேம்பாட்டு கட்டத்திலிருந்து முன் தயாரிப்பு மற்றும் முதன்மை புகைப்படம் எடுத்தல் வரை முன்னேற அனுமதிக்கிறது. ஒரு பச்சை விளக்கு வழங்கும் அதிகாரம் பொதுவாக ஒரு திட்டத்தில் உள்ளவர்களுக்கு அல்லது ஒரு நிறுவனத்திற்கு நிதி மேலாண்மை செய்பவருக்கும் ஒதுக்கப்பட்டுள்ளது. இதை அடிப்படையாகக் கொண்டு 'புராஜெக்ட் கிரீன்லைட்' என்ற உண்மைநிலை நிகழ்ச்சி ஒளிபரப்பானது.[2]

ஐக்கிய அமெரிக்காவில் உள்ள மிகப் பெரிய முக்கிய ஐந்து படப்பிடிப்புவளாகம் மற்றும் சிறிய முக்கிய வளாகங்களில் பச்சை-விளக்கு பொதுவாக படப்பிடிப்பு வளாகத்தின் உயர் மட்ட நிர்வாகிகளின் குழுக்களால் பயன்படுத்தப்படுகிறது.[3] இருப்பினும் வாளாகத் தலைவர், துணைத் தலைவர் அல்லது தலைமை நிர்வாகி ஆகியோர் பொதுவாக இறுதி தீர்ப்பை அழைப்பவர்கள்.

பல நூறு மில்லியன் யு.எஸ். டாலர்களை உள்ளடக்கிய மிகப் பெரிய திரைப்பட ஆக்கச்செலவு திட்டங்களுக்கு, ஸ்டுடியோவின் கூட்டு நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி அல்லது தலைமை இயக்க அதிகாரி ஆகியோர் இறுதி பச்சை-ஒளி அதிகாரத்தைக் கொண்டிருக்கலாம்.

மேற்கோள்கள்[தொகு]

  1. "Green light (dictionary definition)". Encyclopedia.com. 2020-05-02. பார்க்கப்பட்ட நாள் 2020-05-11.
  2. "Project Greenlight". HBO. Archived from the original on December 18, 2008. பார்க்கப்பட்ட நாள் January 17, 2009.
  3. Lang, Brent; Shaw, Lucas (2013-11-19). "Who Has Greenlight Power in Hollywood? A Studio-by-Studio Guide". TheWrap. https://www.thewrap.com/hollywood-greenlighting-power/. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=பச்சை-விளக்கு&oldid=3396077" இலிருந்து மீள்விக்கப்பட்டது