இருப்பிட மேலாளர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

இருப்பிட மேலாளர் (Location manager) என்பவர் திரைப்படக்குழுவில் பணிபுரியும் உறுப்பினர் ஆவார். இவரின் பணி திரைப்படத்திற்கு தேவையான இடங்களைக் கண்டுபிடித்து ஒப்பந்தம் செய்தால், தீ அணைப்பு, காவல் மற்றும் பிற அரசாங்க அனுமதிகளையும் பெறுதல் மற்றும் தயாரிப்புக்கான பணிகளை முடிக்க தயாரிப்பு தளவாடங்களை ஒருங்கிணைத்தல் போன்றவை ஆகும். படப்பிடிப்பின் போது ஏற்படும் பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் பொறுப்பு இவருடையதே.[1]

வரலாற்று ரீதியாக இருப்பிட மேலாளரின் கடமைகள் உதவி இயக்குநரின் பொறுப்பாகும். திரையுலகம் வளர்ந்தவுடன் திரைப்படம் உருவாக்க அதிக மேற்பார்வை தேவைப்பட்ட காரணத்தால் 1970 ஆம் ஆண்டுகளில் இருந்து இந்த பணிக்கு தனி ஒரு குழு அல்லது நபர் நியமிக்கப்பட்டார்கள்.

மேற்கோள்கள்[தொகு]

  1. "Location manager job profile". www.prospects.ac.uk.
"https://ta.wikipedia.org/w/index.php?title=இருப்பிட_மேலாளர்&oldid=3097409" இலிருந்து மீள்விக்கப்பட்டது