இ. வி. கணேஷ் பாபு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

இ. வி. கணேஷ் பாபு (E. V. Ganesh Babu) என்பவர் ஒரு இந்திய திரைப்பட நடிகர், கவிஞர், இயக்குநர் ஆவார். இவர் முதன்மையாக தமிழ் படங்களில் கவனம் செலுத்துகிறார்.

வாழ்க்கை[தொகு]

கணேஷ் பாபு தமிழ்நாட்டின், தஞ்சாவூர் மாவட்டம் வரகூர் என்ற சிற்றூரில் விவசாய குடும்பத்தில் பிறந்தவர். தமிழில் இளங்கலை பட்டம் பெற்றவர். இளம் வயதில் நாடகங்களில் ஆர்வம் கொண்டவராக இருந்தார். திரைப்படத் துறைக்கு வரும் முன்பு பல நாடங்களை எழுதி, இயக்கி, நடித்துள்ளார். 1996 இல் மு. கருணாநிதியின் எழுத்தில், கவிஞர் இளையபாரதியின் இயக்கத்தில் எடுக்கபட்டு தூர்தர்சனில் ஒளிபரப்பபட்ட தென்பாண்டி சிங்கம் தொலைக்காட்சித் தொடரில் உதவி இயக்குநராக பணிபுரிந்தார். 2000 ஆம் ஆண்டு வெளியான பாரதி படத்தின் பாரதியின் மருமகனாக நடித்து திரைப்பட நடிகராக அறிமுகமானார். பின்னர் ஒருத்தி, பிரண்ட்ஸ், புதிய கீதை, பகவதி. சிவகாசி போன்ற திரைப்படங்களில் இவர் நடித்துள்ளார்.[1]

நடிகராக[தொகு]

இயக்குநராக[தொகு]

குறிப்புகள்[தொகு]

  1. மரங்களுக்குள்ளே ஒரு மரபணுக் கூட்டம்! - இ.வி. கணேஷ் பாபு நேர்காணல், ஆர். சி. ஜெயந்தன், இந்து தமிழ் (நாளிதழ்), 2021 சனவரி 22
  2. https://www.filmibeat.com/celebs/evganeshbabu/biography.html
  3. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2021-01-31. பார்க்கப்பட்ட நாள் 2021-01-24.

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=இ._வி._கணேஷ்_பாபு&oldid=3543309" இலிருந்து மீள்விக்கப்பட்டது