அவானி சதுர்வேதி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
அவானி சதுர்வேதி
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு27 அக்டோபர் 1993
ரேவா, மத்தியப் பிரதேசம், இந்தியா
கல்விபனஸ்தாலி பல்கலைக்கழகம், ராஜஸ்தான், இந்தியா (B.Tech)
வேலைபோர் விமானி
Military service
பற்றிணைப்பு இந்தியா
கிளை/சேவை இந்திய வான்படை
தரம் விமான லெப்டினன்ட்
(இடமிருந்து வலம்) மோகனா சிங், அவானி சதுர்வேதி மற்றும் பாவனா காந்த்

விமான லெப்டினன்ட் அவானி சதுர்வேதி (Avani Chaturvedi) (பிறப்பு: நவம்பர் 27, 1993) மத்திய பிரதேசத்தின் ரேவா மாவட்டத்தைச் சேர்ந்த இந்திய விமானி ஆவார். மோகனா சிங் மற்றும் பாவனா காந்த் ஆகியோருடன் இவர் முதல் பெண் போர் விமானியாக அறிவிக்கப்பட்டார்.[1][2] இந்த மூவரும் சூன் 2016 இல் இந்திய விமானப்படையின் போர் படைக்குள் சேர்க்கப்பட்டனர். அப்போதைய பாதுகாப்பு மந்திரி மனோகர் பாரிக்கர் அவர்களால் 2016 ஆம் ஆண்டு சூன் 18 ஆம் தேதி தேசத்திற்கு சேவை செய்ய முறையாக நியமிக்கப்பட்டார்.[3]

ஆரம்பகால வாழ்க்கையும், கல்வியும்[தொகு]

அவானி 1993 அக்டோபர் 27 அன்று பிறந்தார். இவரது தந்தை, தினகர் சதுர்வேதி, மத்தியப் பிரதேச அரசின் நீர்வளத் துறையில் கண்காணிப்பாளராகவும், இவரது தாயார் ஒரு இல்லத்தரசியுமாவார். மத்தியப் பிரதேசத்தின்ஷட்டோல் மாவட்டத்திலுள்ள தியோலண்ட் என்ற சிறிய நகரத்திலிருந்து பள்ளிப் படிப்பை முடித்தார்.[4] 2014 ஆம் ஆண்டில் ராஜஸ்தானின் பனஸ்தாலி பல்கலைக்கழகத்தில் தொழில்நுட்பத்தில் இளங்கலை முடித்த இவர், விமானப்படைக்கான பொதுவான சேர்க்கை சோதனையில் தேர்ச்சி பெற்றார்.

சதுர்வேதி சதுரங்கம், மேசைப்பந்தாட்டம் விளையாடுவதும், ஓவியங்கள் வரைவதும் இவரது விருப்பமாகும்.

இந்திய இராணுவத்தில் அதிகாரியாக இருக்கும் அவானியின் மூத்த சகோதரர், இந்திய விமானப்படையில் சேர ஊக்கமளித்தார். தனது கல்லூரி பனஸ்தாலி பல்கலைக்கழகத்தின் பறக்கும் சங்கத்தில் சில மணிநேர பறக்கும் அனுபவமும் இவருக்கு இருந்தது, இது இந்திய வான்படையில் சேர மேலும் ஊக்கமளித்தது.[5]

தொழில்[தொகு]

அவானி சதுர்வேதி ஐதராபாத், இந்திய வான்படை கல்விக்கழகத்தில் பயிற்சி பெறவும், 25 வயதில் தேர்வு செய்யப்பட்டார். அங்கு ஒரு வருடம் பயிற்சி முடித்த பின்னர், சூன் 2016 இல் போர் விமானியாக ஆனார். அடுத்த ஆண்டு கர்நாடகாவைச் சேர்ந்த பீதரில் மூன்றாம் நிலை பயிற்சியை முடித்தவுடன், சுகோய் எஸ்.யு -30 எம்.கே.ஐ மற்றும் எச்ஏஎல் தேஜாஸ் போன்ற போர் விமானங்களில் பறக்க ஆரம்பித்தார்.[6][7]

2018 ஆம் ஆண்டில், சதுர்வேதி மிக் -21 விமானத்தில் தனியாக பறந்த முதல் இந்திய பெண் விமானி ஆனார். 2018 ஆம் ஆண்டில் அவானி விமான லெப்டினன்ட் பதவிக்கு உயர்த்தப்பட்டார்.[8]

சதுர்வேதி ராஜஸ்தானின் சூரத்கரில் உள்ள இந்திய விமானப்படை எண் 23 படைப்பிரிவு "பாந்தர்ஸ்" ஸில் நியமிக்கப்பட்டுள்ளார்.[9]

விருதுகளும், அங்கீகாரமும்[தொகு]

2018 ஆம் ஆண்டில், பனஸ்தாலி வித்யாபீடத்திலிருந்து முனைவர் பட்டம் பெற்றார் .

மார்ச் 9, 2020 அன்று, சதுர்வேதிக்கு நாரி சக்தி விருது கௌரவத்தை இந்தியக் குடியரசுத் தலைவர் ராம் நாத் கோவிந்த் வழங்கினார் [10]

மேலும் காண்க[தொகு]

குறிப்புகள்[தொகு]

  1. "Avani, Bhawana, Mohana become IAF's first women fighter pilots - Times of India". The Times of India. http://timesofindia.indiatimes.com/india/Avani-Bhawana-Mohana-become-IAFs-first-women-fighter-pilots/articleshow/52805137.cms. 
  2. "First batch of three female fighter pilots commissioned". The Hindu. http://www.thehindu.com/news/national/First-batch-of-three-female-fighter-pilots-commissioned/article14429868.ece. 
  3. "IAF pilots test F-21 simulator". The Economic Times. https://economictimes.indiatimes.com/news/defence/iaf-pilots-with-indias-first-female-fighter-pilot-test-f-21-simulator/articleshow/70254376.cms?from=mdr. 
  4. "MP girl Avani Chaturvedi to be one amongst India's first three women fighter pilots". english.pradesh18.com. பார்க்கப்பட்ட நாள் 2016-12-09.
  5. Team, Editorial (2018-02-23). "Interesting Facts about Avani Chaturvedi, First Female Pilot To Fly Mig-21" (in en-US). SSBToSuccess. http://www.ssbtosuccess.com/flying-officer-avani-chaturvedi/. 
  6. "The first Indian woman to fly a fighter jet". https://www.bbc.com/news/world-asia-india-43151117. 
  7. "For IAF's first women fighter pilots Mohana Singh, Bhawana Kanth & Avani Chaturvedi, sky is no limit". http://economictimes.indiatimes.com/news/defence/for-iafs-first-women-fighter-pilots-mohana-singh-bhawana-kanth-avani-chaturvedi-sky-is-no-limit/articleshow/52816373.cms. 
  8. "In a first, woman fighter pilot undertakes solo flight in MiG-21" (in en-US). The Indian Express. 2018-02-22. http://indianexpress.com/article/india/in-a-first-woman-fighter-pilot-undertakes-solo-flight-in-mig-21-5073511/. 
  9. "Bhawana Kanth Is India's First Woman Pilot to Qualify for Combat Missions". NDTV. பார்க்கப்பட்ட நாள் 23 May 2019.
  10. "Flying MiG-21 Bison matter of pride: Flt Lt Bhawana Kanth". Livemint (in ஆங்கிலம்). 2020-03-09. பார்க்கப்பட்ட நாள் 2020-04-10.

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=அவானி_சதுர்வேதி&oldid=3932264" இலிருந்து மீள்விக்கப்பட்டது