விஜய் கிருஷ்ணராஜ்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
விஜய் கிருஷ்ணராஜ்
மற்ற பெயர்கள்கிருஷ்ணராஜ்
பணிஇந்திய நடிகர், திரைப்பட படைப்பாளி, கதை எழுத்தாளர், தொலைக்காட்சி நடிகர்
செயற்பாட்டுக்
காலம்
1979 – தற்போது வரை
குறிப்பிடத்தக்க படைப்புகள்ரோசாப்பூ ரவிக்கைக்காரி, கல்தூண் (திரைப்படம்), ராணுவ வீரன் (திரைப்படம்), ராஜாத்தி ரோஜாக்கிளி, மதுரை வீரன் எங்க சாமி, அண்ணன் என்னடா தம்பி என்னடா
தொலைக்காட்சிபொம்மலாட்டம், பாரிஜாதம், லட்சுமி வந்தாச்சு, பாண்டவர் இல்லலம், றெக்கை கட்டி பறக்குது மனசு, கைராசி குடும்பம்

விஜய் கிருஷ்ணராஜ் (Vijay Krishnaraj) என்று அழைக்கப்படும் ஆர் கிருஷ்ணன் ஒரு இந்திய நடிகர், எழுத்தாளர், இயக்குனர் ஆவார். இவர் தமிழ் மற்றும் தெலுங்கு திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி துறையில் பணியாற்றி வருகிறார். 1979 ஆம் ஆண்டில் ரோசாப்பூ ரவிக்கைக்காரி படத்தின் கதை மற்றும் உரையாடல் எழுத்தாளராக தமிழ் திரைத்துறையில் அறிமுகமானார். எஸ். தேவராஜன் இயக்கிய தமிழ் திரைப்படமான ராஜாத்தி ரோஜாக்கிளியில் சுலக்சனாவுடன் நடிகராக அறிமுகமானார். அதன்பிறகு 100 க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார்.[1][2]

திரைப்பட வாழ்க்கை[தொகு]

இவர் தமிழ்நாட்டில் நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோட்டில் பிறந்தார். ரோசாப்பூ ரவிக்கைக்காரி படத்தில் கதை எழுத்தாளராக தனது தொழில் வாழ்க்கையைத் தொடங்கினார். இவரது கதை, வசனத்தில் எடுக்கபட்ட குறிப்பிடத்தக்க திரைப்படங்களாக ரோசாப்பூ ரவிக்கைக்காரி, கல்தூண், ராணுவ வீரன் போன்றவை ஆகும். பின்னர், 1985 ஆம் ஆண்டில் ராஜாத்தி ரோஜாக்கிளி படத்தில் துணை வேடத்தில் நடித்தார். மூத்த தெலுங்கு திரைப்பட இயக்குனர் ராகவேந்திர ராவின் ஆறு படங்களுக்கு திரைக்கதை எழுதியுள்ளார். இவர் நடித்து நன்கு அறியப்பட்ட திரைப்படங்களாக ஆவதும் பெண்ணாலே அழிவதும் பெண்ணாலே , காலையும் நீயே மாலையும் நீயே, பூந்தோட்ட காவல்காரன், சந்தனக் காற்று, வான்மதி, வாய்மையே வெல்லும் போன்ற பல படங்களில் இவர் நடித்துள்ளார் என்றாலும் அண்ணன் என்னடா தம்பி என்னடா படத்தில் நடிதமைக்காக இவரது நடிப்பு பாராட்டபட்டது .[3][4]

தொலைக்காட்சி வாழ்க்கை[தொகு]

2000 களின் முற்பகுதியில் படிப்படியாக இவர் தமிழ் தொலைக்காட்சி தொடர்களில் நடிக்கத் தொடங்கினார். தற்போது, இவர் பல தமிழ் தொடர்களில் நடித்து வருகிறார். இவரது குறிப்பிடத்தக்க தமிழ் தொலைக்காட்சித் தொடர்களளின் பட்டியல் கீழே:[5]

திரைப்படவியல்[தொகு]

நடிகராக

ஆண்டு படம் பாத்திரம் குறிப்பு
1985 ராஜாத்தி ரோஜாக்கிளி சீனு தேவர்
1986 தாய்க்கு ஒரு தாலாட்டு பக்கிரி
1988 காலையும் நீயே மாலையும் நீயே
1988 பூந்தோட்ட காவல்காரன்
1989 நினைவு சின்னம்
1990 வாழ்க்கைச் சக்கரம்
1990 புலன் விசாரணை
1990 சந்தனக் காற்று
1990 வேலை கிடைச்சுடுச்சு
1990 மதுரை வீரன் எங்க சாமி
1992 அண்ணன் என்னடா தம்பி என்னடா
1993 மதுரை மீனாட்சி
1993 ஏழை ஜாதி
1994 வண்டிச்சோலை சின்ராசு
1994 மகுடிக்காரன்
1995 செல்லக்கண்ணு
1996 வான்மதி
1996 ஆவதும் பெண்ணாலே அழிவதும் பெண்ணாலே
1997 ரெட்டை ஜடை வயசு
1997 கல்யாண வைபோகம்
1997 வாய்மையே வெல்லும்
1997 ரட்சகன்
1998 பகவத் சிங்
2000 நினைவெல்லாம் நீ
2000 வல்லரசு
2000 தை பொறந்தாச்சு
2001 எங்களுக்கும் காலம் வரும்
2002 கேம்
2003 திருமலை
2004 குத்து
2006 கோவை பிரதர்ஸ்
2006 இலக்கணம்
2007 பிறப்பு
2007 பெரியார்
2008 பட்டைய கெளப்பு
2008 தித்திக்கும் இளமை
2008 கோடைக்கானல்
2008 வைத்தீஸ்வரன்
2018 ஓநாய்கள் ஜாக்கிரதை அஞ்சலியின் தந்தை
2019 அழியாத கோலங்கள் 2 அரசியல்வாதி

கதை மற்றும் உரையாடல் எழுத்தாளராக

ஆண்டு படம் நடிகர்கள் குறிப்புகள்
1979 ரோசாப்பூ ரவிக்கைக்காரி சிவகுமார், தீபா கிருஷ்ணா என்று பெயர் போட்டப்பட்டது
1980 ஒரு வெள்ளாடு வேங்கையாகிறது சிவகுமார், சரிதா
1981 கல்தூண் சிவாஜி கணேசன், கே. ஆர். விஜயா
1981 ராணுவ வீரன் இரசினிகாந்து, ஸ்ரீதேவி
1982 நெஞ்சங்கள் சிவாஜி கணேசன், லட்சுமி, மஞ்சுளா
1982 ஊரும் உறவும் சிவாஜி கணேசன், கே. ஆர். விஜயா
1985 ராஜாத்தி ரோஜாக்கிளி ராஜேஷ், நளினி
1986 தாய்க்கு ஒரு தாலாட்டு சிவாஜி கணேசன், பாண்டியன்

இயக்குநராக

ஆண்டு படம் நடிகர்கள் குறிப்புகள்
1982 கண்ணோடு கண் ரவிக்குமார், சுலக்சனா இயக்குநராக அறிமுகமானார்
1984 சிம்ம சொப்பனம் சிவாஜி கணேசன், கே. ஆர். விஜயா, பிரபு, ராதா
1985 திறமை சத்யராஜ், ரேவதி
1987 வாழ்க வளர்க ராதாரவி
1992 அண்ணன் என்னடா தம்பி என்னடா
1994 தாட்பூட் தஞ்சாவூர்
பின்னணி குரல் கலைஞராக
ஆண்டு படம் நடிகர் குறிப்புகள்
2003 பாறை விஜயன்

குறிப்புகள்[தொகு]

  1. "Vijay Krishnaraj [Story,Dialogue Writer,Actor,Director]". Antru Kanda Mugam (in ஆங்கிலம்). 2016-07-29. பார்க்கப்பட்ட நாள் 2020-02-23.
  2. "Kannodu Kan (1982) - Review, Star Cast, News, Photos". Cinestaan. பார்க்கப்பட்ட நாள் 2020-02-23.
  3. "Tamil Tv Actor Vijay Krishnaraj Biography, News, Photos, Videos". nettv4u (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2020-02-23.
  4. "Vijay Krishnaraj". Onenov (in அமெரிக்க ஆங்கிலம்). 2018-07-06. Archived from the original on 2019-11-28. பார்க்கப்பட்ட நாள் 2020-02-23.
  5. Sakthi (2019-05-06). "நடிகர் விஜய் கிருஷ்ணராஜ் அவர்கள் யார் தெரியுமா வெளிவந்த உண்மை தகவல்". NewsTiG (in அமெரிக்க ஆங்கிலம்). Archived from the original on 2020-02-23. பார்க்கப்பட்ட நாள் 2020-02-23.

வெளி இணைப்புகள்[தொகு]

ஐ.எம்.டி.பி இணையத்தளத்தில் விஜய் கிருஷ்ணராஜ்

"https://ta.wikipedia.org/w/index.php?title=விஜய்_கிருஷ்ணராஜ்&oldid=3852718" இலிருந்து மீள்விக்கப்பட்டது