சண்டிகர் திரைப்பட நகரம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

சண்டிகர் திரைப்பட நகரம் (Chandigarh film city) உருவாக்குவதற்கான திட்டம் 2007 ஆம் ஆண்டு முன்மொழியப்பட்டது. பர்சுவ்நாத் உருவாக்குநர்கள் நிறுவனம் சத்தீசு கௌசிக்கை தொழில்நுட்ப ஆலோசகராக முன்னிறுத்தி சண்டிகர் நகரில் திரைப்பட நகரத்தை உருவாக்க திட்டமிட்டது. [1][2] இதற்காக பஞ்சாப்மாநிலச் சுற்றுலாத் துறையும் பர்சுவ்நாத் உருவாக்குநர்கள் நிறுவனமும் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர். ஒப்பந்தத்தின்படி, உருவாக்குநர்கள் நிறுவனத்திற்கு 99 வருட குத்தகை காலத்திற்கு 191 கோடி ரூபாயை பஞ்சாப் அரசு செலுத்த வேண்டும். [1][2] திரைப்பட நகரத்தில் ஒரு திரைப்பட படப்பிடிப்புக்கூடம், பல்லூடகப் பூங்கா, பல்லூடகப் பொழுதுபோக்கு மையம், ஒரு பல்லூடகக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி மையம்[1][2] ஆகியவை இடம்பெற வேண்டும். திரைப்பட நகரம் பர்சுவ்நாத் திரைப்பட நகரம் என்று பெயரால் அழைக்கப்படவேண்டும். [3]

பர்சுவ்நாத் மற்றும் பஞ்சாப் மாநில அரசாங்கத்திற்கு இடையில் கருத்து மோதல்கள் தோன்றின. நீதிமன்றங்கள் மூலம் இருவரும் போட்டியிட்டனர். 2009 ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்தில் இந்த ஒப்பத்தம் இரத்து செய்யப்பட்டது. [4]

2019 ஆம் ஆண்டு டிசம்பரில் நம்பிக்கைகள் புதுப்பிக்கப்பட்டன, திரைப்பட நகரத்தை தானே நேரடியாக உருவாக்கும் திட்டங்களை பஞ்சாப் மாநில அரசு அறிவித்தது. [5]

இவற்றையும் காண்க[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. 1.0 1.1 1.2 "Chandigarh to have its own film city". www.rediff.com. Archived from the original on 2017-09-19. பார்க்கப்பட்ட நாள் 2018-12-27.
  2. 2.0 2.1 2.2 "Parsvnath to develop modern Multimedia-cum-Film City centre at Chandigarh". parsvnath (in அமெரிக்க ஆங்கிலம்). Archived from the original on 2018-01-11. பார்க்கப்பட்ட நாள் 2018-12-27.
  3. "Punjab to set up film city". The Financial Express (in அமெரிக்க ஆங்கிலம்). 2011-02-21. பார்க்கப்பட்ட நாள் 2018-12-27.
  4. Kaur, Harleen (14 December 2019). "Now Punjab Government Plans To Set Up Film City Near Chandigarh". Ghaint Punjab. https://www.ghaintpunjab.com/ghaintpunjab/Article/32351/punjab-government-film-city-near-chandigarh. பார்த்த நாள்: 11 January 2020. 
  5. "Film city near Chandigarh soon" (in en). The Pioneer. 14 December 2019. https://www.dailypioneer.com/2019/state-editions/film-city-near-chandigarh-soon.html. பார்த்த நாள்: 11 January 2020. 

புற இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=சண்டிகர்_திரைப்பட_நகரம்&oldid=3093888" இலிருந்து மீள்விக்கப்பட்டது