வேம்பதி சின்ன சத்யம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
வேம்பதி சின்ன சத்யம்
பிறப்புவேம்பதி சின்ன சத்யம்
(1929-10-15)15 அக்டோபர் 1929
குச்சிபுடி, ஆந்திரப் பிரதேசம்
இறப்பு29 சூலை 2012(2012-07-29) (அகவை 82)
சென்னை, தமிழ்நாடு
பணிபாரம்பரிய இந்திய நடனக் கலைஞர்
விருதுகள்பத்ம பூசண்: 1998
சங்கீத நாடக அகாதமி கூட்டாளர், 1967
வலைத்தளம்
http://www.kuchipudi.com

வேம்பதி சின்ன சத்யம் (Vempati Chinna Satyam) (15 அக்டோபர் 1929 - 29 சூலை 2012) ஒரு இந்திய நடனக் கலைஞரும், குச்சிப்புடி நடன வடிவத்தின் குருவுமாவார்.

சின்ன சத்யம் ஆந்திராவின் குச்சிப்புடி என்ற இடத்தில் பிறந்தார். இவருக்கு வேதாந்தம் இலட்சுமி நாராயண சாத்திரி என்பவர் கற்பித்தார். பின்னர் இவர் சிறீ ததேபள்ளி பேரையா சாத்திரியிடமிருந்து கற்றுக்கொண்டதன் மூலம் தனது கலையைச் செம்மைப்படுத்தினார். பின்னர் இவரது மூத்த சகோதரர் வேம்பதி பெத்த சத்யம் அவர்களால் வெளிப்பாடுகளில் பயிற்சி பெற்றார். இந்த பாணியிலான நடனத்தின் நுணுக்கங்களை இவர் கற்றுக்கொண்டதால், குச்சிப்புடி நடன வடிவத்தை உலகம் முழுவதும் பிரபலப்படுத்துவதில் இவர் வெற்றி பெற்றார். இவர் 29 சூலை 2012 அன்று தனது 83 வயதில் முதுமை தொடர்பான பிரச்சினைகளால் இறந்தார்.

நடனம்[தொகு]

சின்ன சத்யம் குச்சிப்புடியை பதப்படுத்தி, முறைப்படுத்தினார். இது இன்னும் பாரம்பரிய அடிப்படையை அளித்தது. இவர் கலை வடிவத்தை செம்மைப்படுத்தினார். அதை நாட்டிய சாத்திரத்தின் தரத்திற்கு நெருக்கமாக கொண்டு வந்து அதற்கு ஒரு புதிய முன்னோக்கைக் கொடுத்து, புதிய கூறுகளை அறிமுகப்படுத்தினார். [1]

குச்சிப்புடி கலை அகாதமி[தொகு]

சின்ன சத்யம் 1963 இல் சென்னையில் குச்சிப்புடி கலை அகாதமியைத் தொடங்கினார். 180க்கும் மேற்பட்ட தனி உருப்படிகளும், 15 நடன நாடகங்களும் இசையமைத்து நடனமாடினார். இந்த தனி உருப்படிகள் மற்றும் நாடகங்கள் இந்தியாவிலும் வெளிநாட்டிலும் அரங்கேற்றப்பட்டுள்ளன. இவர் சிறீ கிருட்டிண பாரிஜாதம் என்ற தனது முதல் நடன நாடகத்தை அதே காலகட்டத்தில் இயற்றினார். அதைத் தொடர்ந்து மற்றொரு வெற்றியான சீர சாகரா மதனம் என்பதில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தார். இதில்சிவபெருமானின் சித்தரிப்பும், இவரது நடன அமைப்பும் நல்ல வரவேற்பைப் பெற்றது.

விருதுகளும் கௌரவங்களும்[தொகு]

"மும்பையின் சங்கீத் பீடம்", "திருமலை திருப்பதி தேவஸ்தானத்தின் ஆஸ்தான நாடியாச்சார்யா", சென்னை, மியூசிக் அகாடமியின் டி.டி.கே நினைவு விருது, "வால்டேரின் நாட்டிய கலாசாகரா", "இராஜா-இலட்சுமி விருது", ஆந்திரப் பல்கலைக்கழகத்திடமிருந்து "கலாப்பிரபூர்ணா", "குண்டூரின் நாட்டிய கலா பூசண்", "ஐதராபாத்தின் பாரத கலாப்பிரபூர்ணா", சிறீ வெங்கடேசுவரா பல்கலைக்கழகத்தின் கௌரவ முனைவர், "பிட்ஸ்பர்க்கின் ஆஸ்தானா நாட்டியாச்சார்யா", புது தில்லியின் சங்கீத நாடக அகாதமியிலிருந்து தேசிய விருது உட்பட போன்ற பல தலைப்புகள் மற்றும் விருதுகளை இவர் பெற்றுள்ளார். இந்தியாவின் பல மாநில அரசுகளிடமிருந்து பல விருதுகளை பெற்றுள்ளார். மத்தியப் பிரதேச அரசிடமிருந்து காளிதாஸ் புரஸ்கார் விருதையும், தமிழக அரசிடமிருந்து கலைமாமணி விருதையும் பெற்றுள்ளார். ஆந்திர பல்கலைக்கழகத்திடமிருந்து முனைவர் பட்டம் பெற்றார். இவருக்கு இந்திய அரசு பத்ம பூசண் விருதும் வழங்கியது. [2]

குறிப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=வேம்பதி_சின்ன_சத்யம்&oldid=3712805" இலிருந்து மீள்விக்கப்பட்டது