குமார் போசு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
குமார் போசு
பின்னணித் தகவல்கள்
பிறப்பு4 ஏப்ரல் 1953 (1953-04-04) (அகவை 70)
பிறப்பிடம்கொல்கத்தா, மேற்கு வங்காளம், இந்தியா
இசை வடிவங்கள்இந்துஸ்தானி இசை
தொழில்(கள்)பாரம்பரிய இசைக் கலைஞர். இசையமைப்பாளர்
இசைக்கருவி(கள்)கைம்முரசு இணை

பண்டிட் குமார் போஸ் (Kumar Bose) (ஏப்ரல் 4, 1953) ஒரு இந்திய கைம்முரசு இணை மேதையும், இந்திய பாரம்பரிய இசையமைப்பாளருமாவார். [1] இவர் பனாரசு பள்ளியின் பாணியிலான கைம்முரசு இணை இசைக்கிறார். புகழ்பெற்ற பண்டிட் கிசன் மகராஜின் கீழ் தனது திறமைகளை வளர்த்துக் கொண்ட இவர், பண்டிட் ரவிசங்கருடனான தனது வாசிப்பால் முக்கியத்துவம் பெற்றார். இவரது இசை திறன்களைத் தவிர, போசு ஒரு விருது பெற்ற விளையாட்டு வீரர் ஆவார். கேரம் விளையாடத் தெரிந்த இவர், நான்கு மொழிகளை சரளமாக பேசுகிறார். நான்கு தசாப்தங்களுக்கும் மேலாக நீடித்த ஒரு வாழ்க்கையில், இவர் கைம்முரசு இணையின் முன்னணிநிபுணர்ர்களில் ஒருவராகவும், இந்தியப் பாரம்பரிய இசையுலகில் சர்வதேச அளவில் அங்கீகரிக்கப்பட்ட முகமாகவும் தன்னை நிலைநிறுத்திக் கொண்டார். 2007 ஆம் ஆண்டில் சங்கீத நாடக அகாதமி விருதைப் பெற்றார்.

குடும்பம்[தொகு]

போசு கொல்கத்தாவில் ஒரு இசைக் குடும்பத்தில் பிறந்தார். புகழ்பெற்ற கைம்முரசு இணைக் கலைஞரான இவரது தந்தை பண்டிட். விசுவநாத் போசு இவருக்கு தாளத்தின் முதல் பாடங்களைக் கற்றுக் கொடுத்தார்.

இவரது தாயார் விதுசி பாரதி போசு ஒரு சிறந்த சித்தார் கலைஞரும், உஸ்தாத் தபீர் கான் மற்றும் அலி அக்பர் கான் ஆகியோரின் சிறந்த சீடருமாவார். [2] பாரதி தனது வாழ்க்கையில் பல விருதுகளைப் பெற்றுள்ளார். இதில் அனைத்திந்திய வானொலிக் கலைஞராக அங்கீகாரமும், 1956இல் சிறந்த சித்தார் இசைக்காக குடியரசுத் தலைவர் விருது உட்பட. இவர் தனது மகனை பாரம்பரிய இசையின் அடிப்படை வடிவங்களுடன் வழிநடத்தி, தொழில்முறை கைம்முரசு இணைக் கலைஞராக உதவினார்.

போசின் சகோதரர்களும் குறிப்பிடத்தக்க இசைக்கலைஞர்களாக இருக்கின்றனர். அவர்கள் ஒரு பாரம்பரிய, முழுமையான மற்றும் தீவிரமான பயிற்சி முறையை வைத்திருக்கிறார்கள். அவரது சகோதரர் ஆச்சார்யா ஜெயந்தா போசு சர்வதேச அளவில் புகழ்பெற்றர் இசையமைப்பாளரும், பாடலாசிரியர், ஆர்மோனியக் கலைஞரும், பாடகருமாவார். அதே நேரத்தில் இவரது சகோதரர் பண்டிட். தெபோசோதி போசு ஒரு குறிப்பிடத்தக்க சரோத் கலைஞரும், இசை இயக்குனருமாவார்.

இசை வாழ்க்கை[தொகு]

போசின் முதல் ஆசிரியர் அவரது தந்தையாவார். தனது தந்தையின் அகால மரணத்திற்குப் பிறகு, [3] இவருக்கு மிகவும் மதிப்பிற்குரிய இசைக்கலைஞரான பண்டிட் கிசன் மகாராஜ் (1923-2008) கற்பித்தார்.

தனது முதல் பொது நிகழ்ச்சியை 4 வயதில் வழங்கினார். 14 வயது வாக்கில், இவர் வெளிநாட்டில் நிகழ்த்தினார். பின்னர் உலகின் ஒவ்வொரு முக்கிய இசை அரங்குகளிலும் நிகழ்த்தியுள்ளார். இண்டனிலுள்ள ஆல்பர்ட் மையம், பார்பிகன் அரஙகம், மாஸ்கோவின் கிரெம்ளின், நியூயார்க்கிலுள்ள லிங்கன் நிகழ்த்துக்கலை மையம், கார்னகி அரங்கம் போன்றவற்றிலும் மேலும், இந்தியா முழுவதும் பல்வேறு இடங்களில் நிகழ்ச்சிகளை நிகழ்த்தியுள்ளார். இரண்டாம் எலிசபெத் மகாராணி மற்றும் இளவரசர் சார்லசு ஆகியோருக்கு பண்டிட் ரவிசங்கருடன் இணைந்து நிகழ்ச்சி நடத்திய பெருமையும் இவருக்கு உண்டு. அதோடு, கனடாவின் தொராண்டோவிலுள்ள ஆகா கான் அருங்காட்சியகத்தில் 2019 ஆம் ஆண்டில் தொராண்டோவின் ராக்-மாலா இசை அமைப்புக்காக பண்டித்குமார் போசு நிகழ்த்தினார். [4]

தனிப்பட்ட வாழ்க்கை[தொகு]

குமார் போசு ஒரு பாரம்பரிய பாடகியான கபேரி என்பவரை மணந்தார். இவர்களுக்கு திரிசா என்ற ஒரு மகள் இருக்கிறார். இவரும் ஒரு பாடகராகவார்.

மேலும் காண்க[தொகு]

குறிப்புகள்[தொகு]

  1. http://www.telegraphindia.com/1080807/jsp/calcutta/story_9650055.jsp
  2. http://www.telegraphindia.com/1061103/asp/atleisure/story_6951711.asp
  3. "Archived copy". Archived from the original on 30 May 2008. பார்க்கப்பட்ட நாள் 14 July 2008.{{cite web}}: CS1 maint: archived copy as title (link)
  4. "Tabla Maestro Pandit Kumar Bose in Concert". Aga Khan Museum (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2020-11-04.

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=குமார்_போசு&oldid=3092680" இலிருந்து மீள்விக்கப்பட்டது