ஆனோடைன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

ஆனோடைன் (Anodyne) என்பது மூளை அல்லது நரம்பு மண்டலத்தின் உணர்திறனைக் குறைப்பதன் மூலம் வலியைக் குறைக்கப் பயன்படும் ஒரு மருந்தாகும். [1] இந்த சொல் 20 ஆம் நூற்றாண்டுக்கு முன்னர் மருத்துவத்தில் ஒரு பொதுப் பெயராகப் பயன்படுத்தப்பட்டது. [2][1][3] ஆனால் இத்தகைய மருந்துகள் இப்போது பெரும்பாலும் வலி நீக்கும் மருந்துகள் அல்லது வலி நீக்கிகள் என அழைக்கப்படுகின்றன.

பெயர்க்காரணம்[தொகு]

கிரேக்க மொழியில் இல்லாத என்ற பொருளைக் குறிக்கும் ஆன் என்ற சொல்லையும் வலி என்ற பொருளைக் குறிக்கும் ஓடைன் என்ற சொல்லையும் இணைத்து ஆனோடைன் என்ற பெயர் வருவிக்கப்பட்டுள்ளது. [1]

பயன்[தொகு]

சொற்பிறப்பியலை அடிப்படையாகக் கொண்டு பொருள் கொண்டால் இந்த சொல் வலியைக் குறைக்கும் எந்தவொரு பொருளையும் குறிக்கும். ஆனால் இந்த சொல்லின் பொருள் மருத்துவர்களால் மிகவும் கட்டுப்படுத்தப்படுகிறது. [1]

உட்கொண்ட போதைப்பொருள், தூக்க மருந்துகள் மற்றும் ஓப்பியம் வழிப்பெறுதிகள் போன்றவையும் வலிநீக்கிகளில் அடங்கும். [4] ஓப்பியம், என்பேன் என்ற செடியின் இலைகள், எம்லாக் எனப்படும் செடியின் இலைகள், புகையிலை, நைட்சேடு செடியின் இலை குளோரோஃபார்ம் போன்றவை 19 ஆம் நூற்றாண்டில் முதன்மையான அனோடைன்களாகப் பயன்படுத்தப்பட்டன. [1]

அனோடைன் பால்சம், முரட்டு வெண்சவர்க்காரம், கற்பூரம், குங்குமப்பூ, மற்றும் மது ஆகியவற்றால் ஆன சில கூட்டு மருந்துகளும் இந்த பெயரால் அழைக்கப்பட்டன. இவை தீவிர வலியைத் தணிக்க மட்டுமல்லாமல், வலியுண்டாக்கும் சிக்கலான பொருள்களை வெளியேற்ற உதவுவதற்காகவும் பரிந்துரைக்கப்பட்டன. இலக்கிய பயன்பாட்டில் ஆனோடைன் என்ற சொல் வலி என்ற மருத்துவ பொருளிலிருந்து விடுபட்டு இனிமையானது அல்லது நிதானமானது என்ற பொருளைக் குறித்தது. சர்ச்சைகளற்ற அல்லது சாதுரியமாக ஏற்றுக்கொள்ளக்கூடிய அல்லது குற்றம் அல்லது விவாதத்தை ஏற்படுத்த வாய்ப்பில்லாத எதையும் தெரிவிக்க இச்சொல் பயன்பட்டது. [5]

மேற்கோள்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஆனோடைன்&oldid=3092563" இலிருந்து மீள்விக்கப்பட்டது