இரகிபாய் சோமா பாப்பர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
இரகிபாய் சோமா பாப்பர்
2019இல் இரகிபாய் சோமா பாப்பர்
பிறப்பு1964 (அகவை 59–60)
அகமது நகர் மாவட்டம்
தேசியம்இந்தியர்
மற்ற பெயர்கள்விதைத் தாய்
கல்விஇல்லை
பணிவிவசாயி, வேளாண்மை, இயற்கை பாதுகாவலர்
அறியப்படுவதுதனித்துவமான பயிர்வகைகளை பாதுகாத்தல்
விருதுகள்

இரகிபாய் சோமா போபரே (Rahibai Soma Popere) 1964 இல் பிறந்த இவர், ஒரு இந்திய விவசாயியும், இயற்கைப் பாதுகாவலருமாவார். இவர் மற்ற விவசாயிகளுக்கு பூர்வீக வகை பயிர்களுக்குத் திரும்ப உதவுகிறார். சுய உதவி குழுக்களுக்கு அவரை பயிரிட உதவுகிறார். பிபிசியின் "2018இல் 100 பெண்கள்" என்ற பட்டியலில் இடம்பெற்ற மூன்று இந்தியர்களில் இவரும் ஒருவர்.[2] விஞ்ஞானி ரகுநாத் மசேல்கர் இவருக்கு "விதைத் தாய்" என்ற பெயரைக் கொடுத்தார்.[3] மேலும், 2020இல் இந்திய அரசு இவருக்கு பத்மசிறீ விருது வழங்கியது.[4]

ஆரம்ப கால வாழ்க்கை[தொகு]

பாப்ரே, மகாராட்டிர மாநிலத்தில் அகமதுநகர் மாவட்டத்தில் அகோல் தொகுதியில் அமைந்துள்ள கோம்பல்னே கிராமத்தைச் சேர்ந்தவர். [5] இவருக்கு முறையான கல்வி இல்லை. இவர் கல்வியறிவற்றவர். இவர் தனது வாழ்நாள் முழுவதும் பண்ணைகளில் பணிபுரிந்தார். மேலும், பயிர் பன்முகத்தன்மை குறித்த அசாதாரண புரிதலைக் கொண்டுள்ளார்.

இந்தியக் குடியரசுத் த்லைவர் ராம் நாத் கோவிந்த் 2018 ஆம் ஆண்டில் நாரி சக்தி புரஸ்காரை இவருக்கு வழங்கினார்

தொழில்[தொகு]

பாப்ரே பெண்கள் தலைமையிலான வேளாண்-பல்லுயிரியலில் கவனம் செலுத்துகிறார். ஏறக்குறைய ஐம்பது ஏக்கர் தனித்துவமான விளைநிலங்களை இவர் பாதுகாத்துள்ளார். அங்கு இவர் 17 வெவ்வேறு பயிர்களை வளர்க்கிறார். இவர் 2017 ஆம் ஆண்டில் பாரதிய வேளாண் தொழில் அபிவிருத்தி ஆராய்ச்சி அறக்கட்டளையால் பார்வையிடப்பட்டார். அறக்கட்டளை இவர் பராமரித்து வரும் தோட்டங்களில் ஒரு குடும்பத்தின் உணவுத் தேவைகளை பூர்த்தி செய்ய போதுமான விளைபொருள்கள் இருப்பதைக் கண்டது.

அருகிலுள்ள கிராமங்களில் உள்ள சுய உதவிக்குழுக்கள் மற்றும் குடும்பங்களுக்காக தொடர்ச்சியான அவரை ஒன்றை இவர் உருவாக்கினார். அறிவியல் மற்றும் தொழில் ஆராய்ச்சி மன்றத்தின் முன்னாள் இயக்குநர் இரகுநாத் மசேல்கர் இவரை 'விதைத் தாய்' என்று வர்ணித்தார். கல்சுபாய் பிராந்தியத்தில் விதை பாதுகாப்புக்கான குழு என்ற சுய உதவிக்குழுவின் செயலில் உறுப்பினராக உள்ளார். பண்ணைகளில் தண்ணீரை பாய்ச்ச்சி அறுவடை செய்ய இவர் தனது சொந்த முறைகளை உருவாக்கியுள்ளார். தரிசு நிலத்தை விளைநிலமாக மாற்ற அறிவியல் ரீதியாக பயன்படுத்துகிறார். விதைகளைத் தேர்ந்தெடுப்பதற்கும், வளமான மண்ணை வைத்திருப்பதற்கும், பூச்சிகளை நிர்வகிப்பதற்கும் இவர் விவசாயிகளுக்கும் மாணவர்களுக்கும் பயிற்சி அளிக்கிறார். இவர் நான்கு போக நெல் சாகுபடியில் திறமையானவர். கிராமப்புற பகுதிகளின் மாற்றங்களுக்கான மகாராட்டிரா தொழில்நுட்பக் கழகத்தின் (மித்ரா) ஆதரவுடன் தனது நிலத்தில் கோழிகளை வளர்க்கவும் கற்றுக்கொண்டார்.


குறிப்புகள்[தொகு]

  1. "President confers Nari Shakti awards on 44 women". The Tribune. 9 March 2019. https://www.tribuneindia.com/news/nation/president-confers-nari-shakti-awards-on-44-women/739961.html. பார்த்த நாள்: 12 March 2019. 
  2. "BBC 100 Women 2018: Who is on the list?". BBC News. 19 November 2018. https://www.bbc.com/news/world-46225037. 
  3. Deo, Ashlesha (8 September 2017). "Maharashtra seed mother pioneers conservation of native varieties". Village Square. Akole, Maharashtra. பார்க்கப்பட்ட நாள் 6 March 2019.
  4. "Full list of 2020 Padma awardees". 26 January 2020. https://www.thehindu.com/news/national/full-list-of-2020-padma-awardees/article30656841.ece. பார்த்த நாள்: 26 January 2020. 
  5. Deo, Ashlesha (8 September 2017). "Maharashtra seed mother pioneers conservation of native varieties". Village Square. Akole, Maharashtra. பார்க்கப்பட்ட நாள் 6 March 2019.Deo, Ashlesha (8 September 2017). "Maharashtra seed mother pioneers conservation of native varieties". Village Square. Akole, Maharashtra. Retrieved 6 March 2019.
"https://ta.wikipedia.org/w/index.php?title=இரகிபாய்_சோமா_பாப்பர்&oldid=3091863" இலிருந்து மீள்விக்கப்பட்டது