யசுவந்த் அம்பேத்கர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
யசுவந்த் அம்பேத்கர்
யசுவந்த் அம்பேத்கர்
இந்திய பௌத்தச் சங்கத்தின் இரண்டாவது தலைவர்[1]
பதவியில்
27 சூன் 1957 (1957-06-27) – 17 செப்டம்பர் 1977 (1977-09-17)
முன்னையவர்அம்பேத்கர்
பின்னவர்மீரா அம்பேத்கர்
மகாராட்டிர சட்டமன்ற உறுப்பினர்
பதவியில்
1960 (1960)–1966 (1966)
ஜனதா இதழின் ஆசிரியர்
பதவியில்
1942 (1942)–1956 (1956)
பிரபுத்த பாரத் இதழின் ஆசிரியர்
பதவியில்
1956 (1956)–1977 (1977)
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு(1912-12-12)12 திசம்பர் 1912
மும்பை, மும்பை மாகாணம்]], பிரித்தானிய இந்தியாவின் மாகாணங்களும், ஆட்சிப் பகுதிகளும் (தற்போதைய மும்பை, மகாராட்டிரம், இந்தியா)
இறப்பு17 செப்டம்பர் 1977(1977-09-17) (அகவை 64)
மும்பை, மகாராட்டிரம், இந்தியா
இளைப்பாறுமிடம்சைத்திய பூமி
தேசியம்இந்தியர்
அரசியல் கட்சிஇந்தியக் குடியரசுக் கட்சி
துணைவர்மீரா அம்பேத்கர்
பிள்ளைகள்4 (பிரகாசு யசுவந்த் அம்பேத்கர், ஆனந்த்ராஜ் அம்பேத்கர்)
பெற்றோர்(கள்)
வாழிடம்(s)இராசகிருகம், மும்பை, மகாராட்டிரம்
தொழில்செய்தித்தாள் ஆசிரியர், அரசியல்வாதி, பௌத்த ஆர்வலர், சமூக சேவகர்
புனைப்பெயர்பையாசாகேப் அம்பேத்கர்

யசுவந்த் பீம்ராவ் அம்பேத்கர் (Yashwant Bhimrao Ambedkar) (12 திம்பர் 1912 - 17 செப்டம்பர் 1977). மேலும் பையாசாகேப் அம்பேத்கர் எனவும் அழைக்கப்பட்ட இவர் ஒரு இந்திய சமூக-சமய ஆர்வலரும், செய்தித்தாள் ஆசிரியரும், மனித உரிமை ஆர்வலரும், அரசியல்வாதியும், தலித் பௌத்த இயக்கத்தின் ஆர்வலருமாவார். இந்திய சட்ட அறிஞரும், முற்போக்குவாதியும், இந்திய அரசியலமைப்பின் தந்தையும், இந்திய சமுதாய மறுமலர்ச்சியாளருமான அம்பேத்கருக்கும், இரமாபாய் அம்பேத்கருக்கும் பிறந்த முதல் குழந்தையாவார். [2] யசுவந்த் தனது தந்தையின் மறைவுக்குப் பிறகு தனது வாழ்க்கையை பௌத்ததிற்காக அர்ப்பணித்தார். மேலும் சமூக சமத்துவத்திற்கான தனது தந்தையின் போராட்டத்தை வேகமாக்கினார். இவர் அம்பேத்கரை பின்பற்றும் சமூகத்தை ஒற்றுமையாக வைத்திருக்க முயன்றார். மேலும் தலித் பௌத்த இயக்கத்தில் தீவிரமாக பங்கேற்றார்.

இவரது தந்தை 1956 இல் காலமான பிறகு, அவர் இந்திய பௌத்த சங்கத்தின் இரண்டாவது தலைவரானார். மேலும் தனது தந்தையின் போராட்டத்தைத் தொடர்ந்தார். 1968 இல், இவர் அகில இந்திய பௌத்த மாநாட்டை ஏற்பாடு செய்தார். இவரது மரணத்திற்குப் பிறகு, இவரது மனைவி மீரா இந்திய பௌத்த சங்கத்தின் தலைவரானார். இவருக்கு பிரகாசு யசுவந்த் அம்பேத்கர் உட்பட நான்கு குழந்தைகள் இருந்தனர்.

இவர் 1942 முதல் "ஜனதா" என்றச் செய்தித்தாளின் ஆசிரியராக இருந்தார். [3] [4]

தனிப்பட்ட வாழ்க்கை[தொகு]

பாபாசாகேப் அம்பேத்கர் தனது மகன் யசுவந்த் (இடது) மற்றும் மருமகன் முகுந்த் (வலது)

இவர் 1912 சனவரி 12 அன்று பம்பாயில் பிறந்தார். ஏப்ரல் 19, 1953 இல், இவர் மீரா என்பவரை பௌத்த முறையில் திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு பிரகாசு அம்பேத்கர், இராமே, பீம்ராவ் மற்றும் ஆனந்தராஜ் ஆகிய நான்கு குழந்தைகள் உள்ளனர். இவரது ஒரே மகள் இரமா ஆனந்த் டெல்டும்ப்டேவை மணந்தார்.

மதப் பணிகள்[தொகு]

அக்டோபர் 14, 1956 இல், இவர் நவயான பௌத்த மதத்திற்கு மாறினார். [5] அவரது தந்தை அம்பேத்கர் இறந்த பிறகு, திசம்பர் 6, 1956 அன்று, இவர் இந்திய பௌத்த சங்கத்தின் இரண்டாவது தலைவரானார். இவர் இறக்கும் வரை (1956-1977) இப்பதவியில் இருந்தார். [6] [7] [8] 1958 இல், தாய்லாந்தின் பேங்காக்கில் நடந்த உலக பௌத்த மாநாட்டில் இந்தியாவைப் பிரதிநிதித்துவப்படுத்தினார். [9]

இவர் பல புத்தக் கோவில்களையும் அம்பேத்கரின் நினைவுச்சின்னங்களையும் கட்டினார். [10] [11] ஆகத்து 2, 1958 அன்று, புனேவில் உள்ள பீம்நகரில், அம்பேத்கரின் முழு அளவிலான வெண்கல சிலையை எழுப்பினார். [12] அம்பேத்கரின் கல்லறையான சைத்திய பூமி நினைவுப் பணி இவரது முயற்சியால் நிறைவடைந்தது. [13] 1972இல் இலங்கையில் நடந்த உலக பௌத்த மாநாட்டில் இந்தியாவை பிரதிநிதித்துவப்படுத்தினார். [14]

அரசியல் பணி[தொகு]

யசுவந்த் அம்பேத்கர் தனது தந்தை அம்பேத்கர் நிறுவிய தாழ்த்தப்பட்டோர் கூட்டமைப்பின் வேர்களைக் கொண்ட இந்தியக் குடியரசுக் கட்சியின் இணை நிறுவனர் ஆவார் செப்டம்பர் 30, 1956 அன்று, அம்பேத்கர் "பட்டியல் சாதி கூட்டமைப்பை" கலைத்துவிட்டு "இந்திய குடியரசுக் கட்சி"யை நிறுவுவதாக அறிவித்தார். ஆனால் கட்சி உருவாவதற்கு முன்பு அவர் திசம்பர் 6, 1956 அன்று இறந்தார். அதன் பிறகு, அவரது ஆதரவாளர்களும் ஆர்வலர்களும் இந்த கட்சியை உருவாக்க திட்டமிட்டனர். கட்சியை நிறுவுவதற்காக 1957 அக்டோபர் 1 ஆம் தேதி நாக்பூரில் தலைவர் பதவிக்கான கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் ந.சிவராஜ், யசுவந்த் அம்பேத்கர், பி.டி.போரலே, ஏ.ஜி.பவார், தத்தா கட்டி, டி.ஏ.ரூபாவதே ஆகியோர் கலந்து கொண்டனர். இந்திய குடியரசுக் கட்சி 3 அக்டோபர் 1957 இல் உருவாக்கப்பட்டது. ந.சிவராஜ் கட்சியின் முதல் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார். [15]

இவர் 1960 முதல் 1966 வரை மகாராட்டிரா சட்டமன்ற உறுப்பினராகவும் இருந்தார். [16]

1964 இல் இந்தியக் குடியரசுக் கட்சியின் தலைவர் ந. சிவராஜ் மும்பை மாநிலத் தலைவராக இவரைத் தேர்ந்தெடுத்தார். [17] கட்சி1959 இல் நிலமற்ற மக்களுக்காக போராட்டத்தைத் தொடங்கியது. [18]

இறப்பு[தொகு]

இவர் 1977 செப்டம்பர் 17 அன்று இறந்தார். இவரது இறுதி சடங்கில் பத்து இலட்சத்துக்கும் அதிகமான மக்கள் கலந்து கொண்டனர். மும்பையில் தாதர் கல்லறையில் (சைத்யபூமி தூபிக்கு அடுத்ததாக) பௌத்த முறையில் தகனம் செய்யப்பட்டார். [19]

இவரைப் பற்றிய புத்தகங்கள்[தொகு]

  • "Suryaputra Yashwantrao Ambedkar" (The son of sun: Yashwant Ambedkar) — writer: Phulchandra Khobragade; Sanket Prakashan, Nagpur, 2014
  • "Loknete Bhaiyasaheb Ambedkar" (The people's leader: Bhaiyasaheb Ambedkar) — writer: Prakash Janjal, Ramai Prakashan, 2019

மேலும் காண்க[தொகு]

குறிப்புகள்[தொகு]

  1. https://indianexpress.com/article/india/india-others/battle-to-head-ambedkars-society-nears-end-in-hc-2/
  2. "Dr Babasaheb Ambedkar Family Tree | Prakash Yashwant Ambedkar, Fourth generation of Ambedkar". BRAMBEDKAR.IN (in மராத்தி). 2020-05-04. பார்க்கப்பட்ட நாள் 2020-08-09.
  3. Khobragade, Fulchand (2014) (in mr). Suryaputra Yashwantrao Ambedkar. Nagpur: Sanket Prakashan. பக். 10. 
  4. Namishray, Mohandas. "Dr. Ambedkar & Press".[தொடர்பிழந்த இணைப்பு]
  5. Khobragade, Fulchand (2014) (in mr). Suryaputra Yashwantrao Ambedkar. Nagpur: Sanket Prakashan. பக். 14. 
  6. Karunyakara, Lella (2002). Modernisation of Buddhism: Contributions of Ambedkar and Dalai Lama XIV. 
  7. Mason-John, Valerie (2008). Broken Voices: 'untouchable' Women Speak Out. 
  8. Khobragade, Fulchand (2014) (in mr). Suryaputra Yashwantrao Ambedkar. Nagpur: Sanket Prakashan. பக். 19–23. 
  9. Khobragade, Fulchand (2014) (in mr). Suryaputra Yashwantrao Ambedkar. Nagpur: Sanket Prakashan. பக். 26. 
  10. Khobragade, Fulchand (2014) (in mr). Suryaputra Yashwantrao Ambedkar. Nagpur: Sanket Prakashan. பக். 35, 49. 
  11. Kuortti, Joel (2003). Joothan: A Dalit's Life. 
  12. Khobragade, Fulchand (2014) (in mr). Suryaputra Yashwantrao Ambedkar. Nagpur: Sanket Prakashan. பக். 37. 
  13. Khobragade, Fulchand (2014) (in mr). Suryaputra Yashwantrao Ambedkar. Nagpur: Sanket Prakashan. பக். 49. 
  14. Khobragade, Fulchand (2014) (in mr). Suryaputra Yashwantrao Ambedkar. Nagpur: Sanket Prakashan. பக். 52. 
  15. Khobragade, Fulchand (2014) (in mr). Suryaputra Yashwantrao Ambedkar. Nagpur: Sanket Prakashan. பக். 20, 21. 
  16. Khobragade, Fulchand (2014) (in mr). Suryaputra Yashwantrao Ambedkar. Nagpur: Sanket Prakashan. பக். 41. 
  17. Khobragade, Fulchand (2014) (in mr). Suryaputra Yashwantrao Ambedkar. Nagpur: Sanket Prakashan. பக். 42. 
  18. Khobragade, Fulchand (2014) (in mr). Suryaputra Yashwantrao Ambedkar. Nagpur: Sanket Prakashan. பக். 43. 
  19. Khobragade, Fulchand (2014) (in mr). Suryaputra Yashwantrao Ambedkar. Nagpur: Sanket Prakashan. பக். 56. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=யசுவந்த்_அம்பேத்கர்&oldid=3643664" இலிருந்து மீள்விக்கப்பட்டது