இப்படிக்கு என் காதல்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
இப்படிக்கு என் காதல்
இயக்கம்பி. கிசோர்
தயாரிப்புஏ. எஸ். ரவிசங்கர்
கதைஆர். ஜோதிவாணன்(உரையாடல்)
திரைக்கதைபி. கிசோர்
இசைவிமல்ராஜ்
நடிப்புரவி கல்யாண்
தனுஜா
ஒளிப்பதிவுசூரியா
படத்தொகுப்புஎம். என். ராஜா
கலையகம்ஏ. ஆர். பிலிம்ஸ்
வெளியீடு19 அக்டோபர் 2007
ஓட்டம்115 நிமிடங்கள்
நாடுஇந்தியா
மொழிதமிழ்

இப்படிக்கு என் காதல் (Ippadikku En Kadhal) என்பது 2007 ஆண்டைய இந்திய தமிழ் காதல் நாடக திரைப்படம் ஆகும் பி. கிஷோர் இயக்கிய இப்படத்தில் புதுமுகங்கள் ரவி கல்யாண், தனுஜா ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர், ஜே. லிவிங்ஸ்டன், சேது விநாயகம், அஜய் ரத்னம், கோவை செந்தில், எஸ். ராமகிருஷ்ணன், பாலசுப்பிரமணியன், சிட்டி பாபு, ரவி சாந்த், கீர்த்தனா, சபிதா ஆனந்த் ஆகியோர் துணை வேடங்களில் நடித்துள்ளனர். ஏ. எஸ். ரவிசங்கர் தயாரித்த இப்படத்திற்கு விமல்ராஜ் இசை அமைத்துள்ளார் இப்படம் 19. அக்டோபர். 2007 அன்று வெளியிடப்பட்டது.[1][2]

கதை[தொகு]

கோயம்புத்தூரைச் சேர்ந்த சேரன் (ரவி கல்யாண்), சென்னையில் ஒரு கல்லூரியில் முதலாம் ஆண்டு மாணவனாக சேருவதிலிருந்து படம் தொடங்குகிறது. சேரன் ஒரு அநாதை ஆனால் தன்கு பயிலும் ஒரு மாணவன். சேரன் புதிய நட்பால் கிடைத்த நண்பனுன் (ரவி சாந்த்) ஒரு மாணவர் விடுதியில் தங்கியுள்ளான். தொழிலதிபர் சிதம்பரத்தின் (எஸ். ராமகிருஷ்ணன்) மகள் மாதவி அவனது கல்லூரித் தோழி. மாதவி (தனுஜா) சேரனைக் காதலிக்கிறாள், ஆனால் அவளால் அவளது காதலை தெரவிக்க முடியவில்லை. ஆங்கில பேராசிரியரான வில்வநாதன் ( ஜே. லிவிங்ஸ்டன் ) ஒரு பெண்பித்தன். அவர் கல்லூரி மாணவிகளை மிரட்டி தன் இச்சையை தீர்த்துக் கொள்ளபவர். வில்வநாதனின் அடுத்த குறி வேறு யாருமல்ல மாதவி, அவர் அவளது காதலனிடமிருந்து அவளை பிரிக்க முயற்சிக்கிறார்.

சேரனை கடத்துவதற்கு வில்வநாதன் குண்டர்களை அனுப்புகிறார். குண்டர்கள் சேரனை ஒரு மருத்துவமனைக்கு கொண்டு வருகிறார்கள். அங்கு உள்ள ஒரு நேர்மையான மருத்துவரிடம் ( அஜய் ரத்னம் ) சேரனுக்கு மூளையின் செயற் திறனை மாற்றும் நரம்பு அறுவை சிகிச்சை செய்ய அவரை கட்டாயப்படுத்துகின்றனர். அடுத்த நாள், சேரன் அசைவற்ற நிலையில் தனது கல்லூரிக்கு கொண்டுவரப்படுகிறார். சேரனிடம் அசைவுகள் தென்படுவதைப் பார்த்து மாணவர்கள் ஆச்சரியம் கொள்கின்றனர். சேரன் பின்னர் வில்வநாதனின் குண்டர்களை அடித்து, மருத்துவரை அவர்களிடமிருந்து காப்பாற்றுகிறார். அவனது பிறந்தநாள் விழாவில், மாதவி சேரனை உதட்டில் முத்தமிடுகிறாள், அவன் அவளை அறைகிறான்.

கடந்த காலத்தில், சேரனின் அண்ணன் (பாலசுப்பிரமணியன்) அவனது காதலியை ( கீர்த்தனா ) திருமணம் செய்து கொள்கிறார். அதன்பிறகு எட்டு வயது சேரன், தனது விதவை தாய் ( சபிதா ஆனந்த் ), அவரது அண்ணன், அண்ணி ஆகியோருடன் வசித்து வருகிறார். ஆனால் அவரது அண்ணி தன் கணவருடன் தனித்து வாழ விரும்புகிறாள். எனவே தன் கணவரிடம் சேரனை அனாதை இல்லத்திலும், அவரது தாயை முதியோர் இல்லத்துக்கும் அனுப்புமாறு கட்டாயப்படுத்தி அதை செய்விக்கிறாள். அன்று முதல், சேரன் காதலை வெறுக்கிறான்.

நிகழ்காலத்தில், சேரன் தன் தாய் மாதவியின் வீட்டில் வசித்து வருவதைக் கண்டுபிடிக்கிறான். இதற்கிடையில், வில்வநாதன் மாதவியைக் கடத்தி கல்லூரி வளாகத்தில் பாலியல் பலாத்காரம் செய்ய முடிவு செய்கிறார். கடத்தல் பற்றி அறிந்த சேரன், வில்வநாதனின் உண்மையான முகத்தை கல்லூரி முதல்வர் ( சேது விநாயகம் ), பேராசிரியர்கள் மற்றும் மாணவர்களுக்கு அம்பலப்படுத்துகிறார். தன் குட்டு வெளிபட்டுவிட்டதால் வில்வநாதன் ஒரு வகுப்பறையில் தூக்கிட்டுக்கொள்கிறார். மாதவியின் காதலை சேரன் ஏற்றுக்கொள்வதுடன் படம் முடிகிறது.

நடிகர்கள்[தொகு]

  • ரவி கல்யாண் சேரனாக
  • தனுஜா மாதவியாக
  • லிவிங்ஸ்டன் வில்வநாதனாக
  • சேது விநாயகம் கல்லூரி துணைவேந்தராக
  • அஜய் ரத்னம் மருத்துவராக
  • கோவை செந்தில் தமிழ் பேராசிரியராக
  • எஸ். ராமகிருஷ்ணன் சிதம்பரமாக
  • பாலசுப்பிரமணியன் சேரனின் அண்ணனாக
  • சிட்டி பாபு மணியாக
  • ரவி சாந்த் வேலுவாக
  • கீர்த்தனா சேரனின் அண்ணி
  • சபிதா ஆனந்த் சேரனின் தாயாக
  • சிவரஞ்சனி
  • நிரஞ்சன்
  • கோபால் கோபாலாக
  • சுந்தர்
  • ஏ. விஜயபிரகாஷ்
  • மேகா
  • மாஸ்டர் அஸ்வின் சிறுவன் சேரனாக
  • மதுரை சரோஜா தாயம்மாவாக
  • அபிநயஸ்ரீ சிறப்புத் தோற்றத்தில்
  • வண்டார் குழலி சுமிதா சிறப்புத் தோற்றம்

தயாரிப்பு[தொகு]

ஏ. ஆர். பிலிம் பதாகையின் கீழ் தயாரிக்கபட்ட இப்படிக்கு என் காதல் படத்தின் வழியாக பி. கிஷோர் இயக்குநராக அறிமுகமானார். புதுமுகம் ரவி கல்யாண் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க தேர்வு செய்யப்பட்டார். மிஸ் தமிழ்நாடு 2003 வெற்றியாளரான புதுமுகம் தனுஜா கதாநாயகியாக நடிக்க தேர்வு செய்யப்பட்டார். நடிகைகள் அபிநயஸ்ரீ மற்றும் வண்டார் குழலி ஸ்மிதா ஆகியோர் கவர்ச்சி ஆட்டமாட படத்திற்கு ஒப்பந்தம் செய்யபட்டனர்.[3][4]

இசை[தொகு]

படத்திற்கான பின்னணி இசை மற்றும் பாடல்களுக்கான இசையை இசையமைப்பாளர் விமல்ராஜ் மேற்கொண்டார். இதில் முத்து விஜயன், ஆர். ஜோதிவாணன், எம். எம். பாலசந்திரன் ஆகியோரால் எழுதப்பட்ட ஐந்து பாடல்கள் உள்ளன.[5][6]

# பாடல் நீளம்
பாடல்கள்
# பாடல்பாடகர்(கள்) நீளம்
1. "ஜூலை வெண்ணிலா"  தேவன் ஏகாம்பரம், பத்மலதா 5:39
2. "வண்ண வண்ணமாய்"  பிரசன்னா ராவ், அம்ருதா 5:31
3. "மனதுக்குள்ளே"  அனுராதா ஸ்ரீராம் 5:45
4. "கொத்தமல்லி கட்டுடா"  பாப் ஷாலினி 4:11
5. "பாலக்காடு"  சாய் சுந்தர், அம்ருதா 5:05
மொத்த நீளம்:
26:11

குறிப்புகள்[தொகு]

  1. "List of Tamil Films Released In 19 October 2007". lakshmansruthi.com. Archived from the original on 28 மே 2011. பார்க்கப்பட்ட நாள் 6 January 2020.
  2. "Movie - Ippadikku En Kadhal". tvwiz.in. பார்க்கப்பட்ட நாள் 6 January 2020.
  3. "இப்படிக்கு என் காதல்" [Ippadikku En Kadhal] (in Tamil). filmibeat.com. 5 February 2004. பார்க்கப்பட்ட நாள் 6 January 2020.{{cite web}}: CS1 maint: unrecognized language (link)
  4. "தனுஜாவை மிரட்டிய தயாரிப்பாளர்" [Producer who threatened Thanuja] (in Tamil). filmibeat.com. 5 February 2004. பார்க்கப்பட்ட நாள் 6 January 2020.{{cite web}}: CS1 maint: unrecognized language (link)
  5. "Ippadikku En Kadhal (2001) - Vimalraj". mio.to. Archived from the original on 29 அக்டோபர் 2019. பார்க்கப்பட்ட நாள் 6 January 2020.
  6. "Ippadikku En Kadhal Songs". jiosaavn.com. Archived from the original on 29 அக்டோபர் 2019. பார்க்கப்பட்ட நாள் 6 January 2020.
"https://ta.wikipedia.org/w/index.php?title=இப்படிக்கு_என்_காதல்&oldid=3705591" இலிருந்து மீள்விக்கப்பட்டது