இலட்சுமண சேனா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
இலட்சுமண சேனா
வங்காலத்தின் மன்னன்
ஆட்சிக்காலம்1178–1206
முன்னையவர்பல்லால சேனா
பின்னையவர்விசுவரூப சேனா
துணைவர்தந்த்ரா தேவி
குழந்தைகளின்
பெயர்கள்
விசுவரூப சேனா
கேசவ சேனா
மரபுசேனா
தந்தைபல்லால சேனா
தாய்இரமாதேவி

இலட்சுமண சேனா (Lakshmana Sena) ( ஆட்சி: 1178-1206), நவீன மொழிகளில் இலட்சுமண் சென் என்றும் அழைக்கப்படுகிறார். இவரது முன்னோடி இவரது தந்தை பல்லால சேனா என்பவராவான். [1] இலட்சுமண சேனா இந்திய துணைக் கண்டத்தில் இடைக்கால வங்காளப் பிராந்தியத்தின் சேனா வம்சத்தைச் சேர்ந்த நான்காவது மன்னராவார். இவரது ஆட்சி 28 ஆண்டுகள் நீடித்தது. மேலும், இந்திய துணைக் கண்டத்தின் கிழக்குப் பகுதிகளுக்கு, குறிப்பாக வங்காளம், காமரூப் (தற்போதைய அசாம்), கலிங்கம் (தற்போதைய ஒடிசா), வாரணாசி, தில்லி, பீகார் போன்ற பகுதிகளுக்கு விரிவுபடுத்தினார். முகம்மது பின் பக்தியார் கில்ஜியின் துருக்கியப் படையெடுப்பால் இவரது ஆட்சி முடிந்தது.[2]

இவரது தந்தை பல்லால சேனாவுக்குப் பிறகு இவர் பதவிக்கு வந்தார். இவரது ஆட்சியின் வரலாறு இதுவரை கண்டுபிடிக்கப்பட்ட இவரது காலத்தின் எழுத்துக்களில் இருந்து புனரமைக்கப்படவேண்டும். உமாபதி தார், ஷரன் மற்றும் தபக்த்-இ-நசிரி ஆகியப் புத்தகங்களைத் தவிர, இவரைப் பற்றிய தகவல்கள் வேறு எதிலும் இல்லை. இவர் ஜெயச்சந்திர மன்னரை தோற்கடித்தார். இவரது இராச்சியத்தின் தலைநகரம் பிக்ராம்பூரில் இருந்தது. இவர் இலக்கியத்தில் ஆர்வம் கொண்டிருந்தார். மேலும் தனது தந்தையால் எழுதப்பட்டு முழுமையடையாமல் இருந்த அட்புத சாகர் என்ற ஒரு புத்தகத்தின் மீதிப் பகுதியை எழுதினார்.[3]

குறிப்புகள்[தொகு]

  1. "পাতা:বঙ্গের বাহিরে বাঙ্গালী (উত্তর ভারত) - জ্ঞানেন্দ্রমোহন দাস.pdf/২৭ - উইকিসংকলন একটি মুক্ত পাঠাগার". bn.wikisource.org (in Bengali). பார்க்கப்பட்ட நாள் 2021-07-21.
  2. Sen, Sailendra. A Textbook of Medieval Indian History. 
  3. Misra, Chitta Ranjan. "Laksmanasena". வங்காளப்பீடியா. Asiatic Society of Bangladesh. பார்க்கப்பட்ட நாள் 6 August 2015.
"https://ta.wikipedia.org/w/index.php?title=இலட்சுமண_சேனா&oldid=3404128" இலிருந்து மீள்விக்கப்பட்டது