டார்டஸ் ஆளுநரகம்

ஆள்கூறுகள்: 35°N 36°E / 35°N 36°E / 35; 36
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
டார்டஸ் ஆளுநரகம்
مُحافظة طرطوس
ஆளுநரகம்
சிரியாவில் அஸ் - டார்டஸ் ஆளுநரகத்தின் அமைவிடம்
சிரியாவில் அஸ் - டார்டஸ் ஆளுநரகத்தின் அமைவிடம்
ஆள்கூறுகள் (டார்டஸ்): 35°N 36°E / 35°N 36°E / 35; 36
நாடு சிரியா
தலைநகரம்டார்டஸ்
மாவட்டங்கள்5
அரசு
 • ஆளுநர்சஃப்வான் அபு சாதி[சான்று தேவை]
பரப்பளவு
 • மொத்தம்1,892 km2 (731 sq mi)
 Estimates range between 1,890 km² and 1,892 km²
மக்கள்தொகை (2011)
 • மொத்தம்797,000
 • அடர்த்தி420/km2 (1,100/sq mi)
நேர வலயம்கி.ஐ.நே. (ஒசநே+2)
 • கோடை (பசேநே)கி.ஐ.கோ. (ஒசநே+3)
ஐ.எஸ்.ஓ 3166 குறியீடுSY-TA
மொழிகள்அரபு

டார்டஸ் கவர்னரேட் (Tartus Governorate, அரபு மொழி: مُحافظة طرطوس‎) என்பது சிரியாவின் 14 ஆளுநரகங்களில் ஒன்றாகும். இது மேற்கு சிரியாவில் அமைந்துள்ளது. இதன் எல்லைகளாக வடக்கே அல்லாதகியா ஆளுநரகம், கிழக்கில் ஹோம்ஸ் மற்றும் ஹமா ஆளுநரகங்கள், தெற்கே லெபனான், மேற்கில் மத்தியதரைக் கடல் ஆகியவை உள்ளன. சிரியாவில் அலவைடுகளை (சியா இசுலாமின் உட்பிரிவினர்) பெரும்பான்மையைக் கொண்ட சில ஆளுநரகங்களில் இதுவும் ஒன்றாகும். இப்பிராந்தியத்தின் பரப்பளவை 1,890 கி.மீ² [1] அல்லது 1,892 கி.மீ², [2] என தரவுகள் குறிப்பிடுகின்றன. இதன் தலைநகரம் டார்டஸ் நகரம் ஆகும் .

வரலாறு[தொகு]

இந்த ஆளுநரகமானது வரலாற்று ரீதியாக அலவைட் மாநிலத்தின் ஒரு பகுதியாக 1920-1936 காலக்கட்டத்தில் இருந்தது. [3]

இது முன்னர் லடாகியா ஆளுநரகத்தின் ஒரு பகுதியாக இருந்தது, ஆனால் இது 1972 ஆம் ஆண்டு முதல் தனியாக பிரிக்கப்பட்டது. [1]

சிரிய உள்நாட்டுப் போரின்போது இப்பகுதி ஒப்பீட்டளவில் அமைதியானதாக இருந்தது. இது பொதுவாக அசாத் சார்பு பிராந்தியமாக இருந்து, அரசாங்கத்தின் கட்டுப்பாட்டில் இருந்தது. எவ்வாறாயினும், 2013 ஆம் ஆண்டில் சுன்னி முஸ்லிம்களுக்கு எதிரான படுகொலைகள் பேடா மற்றும் பனியாஸில் நிகழ்ந்தன, [4] [5] மேலும் இசுலாமிய அரசு பொறுப்பேற்ற தற்கொலை குண்டுவெடிப்பு 2016 மே மாதத்தில் டார்டஸில் நிகழ்ந்தது. [6] டார்டஸ் ஒரு பெரிய உருசிய கடற்படை தளமாக உள்ளது . 

தொல்லியல் தளங்கள்[தொகு]

  • அல்-காஃப் கோட்டையகம் - இஸ்மாயிலி கோட்டையகம்
  • அலிகா கோட்டையகம் - இஸ்மாயிலி கோட்டையகம்
  • அம்ரித் - ஃபீனீசியன் நகரம்
  • சாஸ்டல் ரூஜ் (கல்அத் யஹ்மூர்) - சிலுவைப்போர் கோட்டையகம்
  • ஹோஸ்ன் சுலைமான் கிராமம்
  • மார்கட் - சிலுவைப்போர் கோட்டையகம்
  • டெல் காஸல் - வெண்கல கால தளம் (ஒருவேளை பண்டைய நகரமான சுமூர்)

நிலவியல்[தொகு]

டார்டஸ் சிரியாவின் மத்தியதரைக் கடலோரப் பகுதியின் ஏறக்குறைய பாதி பகுதியைக் கொண்டுள்ளது; கடலில் ஐந்து சிறிய தீவுகள் உள்ளன, அவற்றில் மிகப்பெரியது அர்வாட் ஆகும் . [7] சிரிய கடலோர மலைத்தொடரின் (நுசாயிரியா மலைகள்) ஒரு பகுதியை உள்ளடக்கியதாக உள்நாட்டு நிலப்பரப்பானது மலைப்பாங்கானதாக உள்ளது. [8] இங்கு பாயும் நஹ்ர் அல்-கபீர் ஆறு தெற்கே லெபனானுக்கு எல்லையாக உள்ளளது. [9]

குடியேற்றங்கள்[தொகு]

ஆளுநரகத்தின் முக்கிய வாழிடங்களாக பிராந்திய தலைநகரமான டார்டசுக்கு அடுத்து அல்-ஹமீடியா, அல் கத்மஸ், அல்-சவ்தா, அய்ன் ஆஷ் ஷம்ஸ், பனியாஸ், குசாய்பா சஃபிதா ஆகியவை பிற முக்கிய குடியிருப்புகளாக உள்ளன.

மாவட்டங்கள்[தொகு]

ஆளுநரகம் ஐந்து மாவட்டங்களாக ( மனாதிக் ) பிரிக்கப்பட்டுள்ளது. மாவட்டங்கள் மேலும் 27 துணை மாவட்டங்களாக ( நவாஹி ) பிரிக்கப்பட்டுள்ளன:[சான்று தேவை]

மக்கள் வகைப்பாடு[தொகு]

2004 ஆண்டைய சிரிய மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி ஆளுநரகத்தின் மக்கள் தொகை 701,400 ஆகும். [1] 2011 ஆண்டைய யு.என்.ஓ.சி.எச்.ஏ மதிப்பீடு 797.000 ஆக உள்ளது என்றாலும் இந்த கணக்கானது போர் தொடங்கியபிறகு மாறியுள்ளது. [10]

ஆளுநரகத்தின் பெரும்பான்மையினராக 72% அலவைட்டுகள், 7% சுன்னி முஸ்லீம், 8% இஸ்மாயிலி, 13% கிறிஸ்தவர்கள் உள்ளனர் எனப்படுகின்றனர். [11] இருப்பினும் டாக்டர் மைக்கேல் இசாடியின் அண்மைய கணக்கெடுப்பின்படி கிறிஸ்தவர்கள் ஆளுநரகத்தில் 11.8% உள்ளனர். [12] 1897 ஆம் ஆண்டின் கிரேக்க-துருக்கியப் போரிலிருந்து தப்பிச் சென்ற அகதிகளின் சந்ததியினரான அல்-ஹமீடியாவில் குவிந்துள்ள ஒரு சொற்ப அளவிலான கிரெட்டன் கிரேக்க சமூகம் உள்ளது. [13]

காட்சியகம்[தொகு]

குறிப்புகள்[தொகு]

  1. 1.0 1.1 1.2 "Syria Provinces". www.statoids.com.
  2. "Syria: Governorates, Major Cities & Localities - Population Statistics, Maps, Charts, Weather and Web Information". www.citypopulation.de.
  3. Longrigg, Stephen Hemsley. "Syria and Lebanon Under French Mandate." London: Oxford University Press, 1958.
  4. Peter Beaumont. "The Guardian, 4 May 2013". Guardian. பார்க்கப்பட்ட நாள் 2014-01-06.
  5. Nebehay, Stephanie (2013-09-11). "Syrian forces responsible for Banias massacres: U.N. report". News.yahoo.com. பார்க்கப்பட்ட நாள் 2014-01-06.
  6. "Syria bombings claimed by ISIS kill 148 at hospital, bus station". 23 May 2016. பார்க்கப்பட்ட நாள் 26 May 2016.
  7. "Arwad, Fortress at Sea". Aramco World. பார்க்கப்பட்ட நாள் 3 November 2018.
  8. Federal Research Division, Library of Congress (2005) "Country Profile: Syria" page 5
  9. United Nations Economic and Social Commission for Western Asia et al., "Nahr el Kabir Basin", Inventory of Shared Water Resources in Western Asia 8 PDF
  10. Syrian Arab Republic - Governorates profile (PDF), UNOCHA, June 2014, பார்க்கப்பட்ட நாள் 20 March 2020
  11. Hussain Ibrahim Qutrib (2016), "Useful Syria" and Demographic Changes in Syria (PDF), King Faisal Center for Research and Islamic Studies, பார்க்கப்பட்ட நாள் 20 March 2020
  12. http://gulf2000.columbia.edu/images/maps/Christians_Middle_East_2014_lg.png
  13. Greek-Speaking Enclaves of Lebanon and Syria by Roula Tsokalidou. Proceedings II Simposio Internacional Bilingüismo. Retrieved 4 December 2006
"https://ta.wikipedia.org/w/index.php?title=டார்டஸ்_ஆளுநரகம்&oldid=3712935" இலிருந்து மீள்விக்கப்பட்டது