காத்தலோன் பிராந்தியம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

கட்லான் மாகாணம் அல்லது கட்லான் பிராந்தியம் ( Khatlon Region. தாஜிக் மொழி : Вилояти Хатлон, Viloyati Xatlon), என்பது தஜிகிஸ்தானின் நான்கு மாகாணங்களில் (தாஜிக் மொழி : вилоят, viloyat) ஒன்றாகும் இது நான்கு முதல் நிலை நிர்வாக பிராந்தியங்களில் அதிக மக்கள் தொகை கொண்ட பிராந்தியம் ஆகும். இது நாட்டின் தென்மேற்கில், வடக்கில் ஹிசர் (கிசார்) மலைத்தொடருக்கும் தெற்கில் பஞ்ச் நதிக்கும் இடையில் தென்கிழக்கில் ஆப்கானிஸ்தானையும், மேற்கில் உஸ்பெகிஸ்தானையும் எல்லைகளாக கொண்டுள்ளது. சோவியத் காலங்களில் காட்லான் பிராந்தியமானது குர்கன்-டியூப் (குர்கொண்டெப்பா) ஒப்லாஸ்ட் (மேற்கு காட்லான்) என்று இரண்டாக பிரிக்கப்பட்டது. இவை   - கோஃபர்னிஹோன் மற்றும் வக்ஷ் நதி பள்ளத்தாக்கு பகுதிகளாகவும்   மற்றும் குலோப் ஒப்லாஸ்ட் (கிழக்கு காட்லான்)   - கைசில்சு மற்றும் யக்ஸு நதி பள்ளத்தாக்குகு என பிரிக்கப்பட்டிருந்தது. இரு பிராந்தியங்களும் 1992 நவம்பரில் இன்றைய காட்லான் மாகாணத்தில் (அல்லது விலோயாட் ) இணைக்கப்பட்டன. பிராந்தியத்தின் தலைநகரமாக குர்கொன்டெப்பா நகரம் உள்ளது. இந்த நகரமானது முன்பு குர்கன்-டியூப் என்று அழைக்கப்பட்டது.[1]

காட்லான் பிராந்தியம் 24,800 சதுர கிலோமீட்டர் பரப்பளவைக் கொண்டுள்ளது. மேலும் இது 24 மாவட்டங்களைக் கொண்டுள்ளது. இந்த மாவட்டங்களானது மேற்கு காட்லானில் 14 மற்றும் கிழக்கு கட்லானில் 10 என உள்ளன. 2008 ஆம் ஆண்டில் காட்லோனின் மொத்த மக்கள் தொகை 2,579,300 ஆக இருந்தது,[2] 2000 மக்கள் தொகை கணக்கெடுப்பில் 2,149,500 ஆக இருந்தது. கட்லோனில் உள்ள மக்கள் முக்கியமாக வேளாண்மையில் ஈடுபட்டுள்ளனர்.

வரலாறு[தொகு]

சோவியத் காலத்தில், தஜிகிஸ்தானின் இரண்டு முக்கிய பருத்தி விளையும் பகுதிகளில் ஒன்றாக கட்லான் இருந்தது. மற்றொன்று சுக்தில் (லெனினாபாத்) ஆகும். 1930 களின் முற்பகுதியில், தஜிகிஸ்தானில் ஒட்டுமொத்தமாக பருத்தி சாகுபடி அளவை அதிகரிப்பதற்காக, விவசாயத்தின் கூட்டுப் பண்ணைத் திட்டம் தீவிரமாக செயல்படுத்தப்பட்டது, குறிப்பாக குடியரசின் தெற்குப் பகுதிக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டது. இந்த செயல்முறையில் விவசாயிகளுக்கு எதிரான மீறல்கள், நீர்ப்பாசன வலையமைப்பில் கணிசமான விரிவாக்கம் மற்றும் உஸ்பெகிஸ்தானில் மலை மக்கள் உள்ளிட்ட மக்களை அவர்களின் பாரம்பரிய பகுதிகளில் இருந்து வெளியேற்றி சமவெளி பகுதிகளுக்கு வலுக்கட்டாயமாக மீளக்குடியமர்த்தல் போன்றவை செய்யப்பட்டன.[3]

இந்தக் கொள்கை முடிவுகளால் சலாவா ஒப்லாஸ்டின் இன அமைப்பில் இரு பிரிவுகள் உண்டானது. இதில் ஒன்றான தாஜிக் மக்கள் தங்களை கர்மிஸ் ( மலைகளிலிருந்து மீளக்குடியமர்த்தப்பட்டவர்கள்) என்றும், அடுத்து குலோபிஸ் என்று அடையாளப்படுத்திக் கொள்ளும் இனக் குழுவினர் என்ற நிலை காணப்படுகிறது . இந்த இரண்டு குழுக்கள் ஒருபோதும் ஒன்று சேரவில்லை, தஜிகிஸ்தானில் உள்நாட்டுப் போரின்போது ஒருவருக்கொருவர் சண்டையிட்டன. இதனால் தஜிகிஸ்தானில் காட்லான் ஒப்லாஸ்ட் மிகப்பெரிய சேதத்தை சந்தித்தது.

உள்நாட்டுப் போருக்கு வழிவகுத்த மோதல்கள் உண்மையில் இன்னும் தீர்க்கப்படாததால், இப்பகுதியில் பதட்டங்கள் இன்னும் உள்ளன. கிழக்கு பகுதியான குலோப்  பகுதியானது ஜனாதிபதி மற்றும் அவரது குலத்தினரின் தாயகமாக உள்ளது. இதனால் அப்பகுதியானது நிறைய அரசியல் செல்வாக்கு கொண்டுள்ளது. சோவியத் காலங்களில், இப்பகுதி லெனினாபாத்திலிருந்த அப்போதைய ஆளும் உயரடுக்கினரோடு ஒத்துழைப்பாக இருந்தது. மேலும் குடிப்படை, இராணுவம் மற்றும் பாதுகாப்புப் படைகளுக்கு பொறுப்பாக இருந்தது. குலோப் மிகவும் பழமைவாத பிராந்தியமாக கருதப்படுகிறது. தலைநகர் குர்கொன்டெப்பா மற்றும் குலோப்பின் சில பகுதிகளில், இஸ்லாமிய எதிர்ப்பிற்கு கார்மிகளிடையே நிறைய ஆதரவு உள்ளது.[4]

குல்யாப் இனம் கட்லானை அடிப்படையாக கொண்டுள்ளனர்.[5] 1996 பெப்ரவரியில், கர்னல் மஹ்மூத் குடோய்பெர்டியேவ் ஒரு கிளர்ச்சியைத் தொடங்கினார். அவர் கிளர்ச்சியை முடிவுக்கு கொண்டுவருவதற்கு முன்னர் குலியாப் குலத்தைச் சேர்ந்த மூன்று அதிகாரிகள் ராஜினாமா செய்ய வேண்டும் என்று வலியுறுத்தினார். அரசாங்கம் அதற்கு இணங்கியது. கூடுதலாக, பிரதம மந்திரி தாம்ஷெட் கரிமோவ் மற்றும் லெனினாபாத் ஒப்லாஸ்ட் நிர்வாகக் குழுவின் தலைவரான அபுட்ஷலில் காமிடோவ் ஆகியோர் ராஜினாமா செய்தனர்.[6]

மாவட்டங்கள்[தொகு]

கிழக்கு காட்லான் மாவட்டங்கள்[தொகு]

  • பால்ஜுவோன் மாவட்டம்
  • டங்காரா மாவட்டம்
  • ஃபார்கோர் மாவட்டம்
  • ஹமடோனி மாவட்டம் (மொஸ்கோவ்ஸ்கி மாவட்டம்)
  • கோவாலிங் மாவட்டம்
  • குலோப் மாவட்டம்
  • முமினோபோட் மாவட்டம்
  • நோராக் மாவட்டம்
  • பஜ் மாவட்டம்
  • ஷூரோ-ஓபோட் மாவட்டம்
  • தேமுர்மாலிக் மாவட்டம் (கிசில்- மஜோர் மாவட்டம், சோவெட்ஸ்கி மாவட்டம்)
  • வோஸ் 'மாவட்டம்

மேற்கு காட்லான் மாவட்டங்கள்[தொகு]

  • போக்தார் மாவட்டம்
  • த்சாமி (ஜோமி) மாவட்டம்
  • ஜிலிகுல் மாவட்டம் (டஸ்டி)
  • குரோசன் மாவட்டம் (கோசிமாலிக் மாவட்டம்)
  • நோசிரி குஸ்ரவ் மாவட்டம் ( பெஷ்கண்ட் மாவட்டம்)
  • கபோடியான் மாவட்டம்
  • கும்சங்கிர் மாவட்டம்
  • ரூமி மாவட்டம் (கொல்கோசோபோட் மாவட்டம்)
  • சர்பந்த் மாவட்டம்
  • ஷார்டூஸ் மாவட்டம்
  • வக்ஷ் மாவட்டம்
  • யோவன் மாவட்டம்

மக்கள்வகைப்பாடு[தொகு]

2010 ஆம் ஆண்டில், காட்லான் பிராந்தியத்தின் இன அமைப்பானது 81.8% தாஜிக்குகள், 12.9% உஸ்பெக்குகள், 0.5% துர்க்மென்கள் மற்றும் 4.6% பிறர் [7] என்றுள்ளது. குலோப் பிராந்தியத்தின் இன அமைப்பானது 85% தஜிக்குகள், 13% உஸ்பெக்கியர், 2% பிற இனத்தவர் என்று உள்ளது. குர்கொண்டெப்பா பகுதியியல் இன விகிதமானது 59% தாஜிக்குகள், 32% உஸ்பெக்குகள் மற்றும் மூன்று சதவீதம் ரஷ்யர்கள் என்று உள்ளது.

பயங்கரவாத தாக்குதல்[தொகு]

29 ஜூலை 2018 அன்று, மிதிவண்டியியல் சென்ற நான்கு பயணிகளான, இரண்டு அமெரிக்கர்கள், ஒரு டச்சு நாட்டவர் மற்றும் ஒரு சுவிஸ் நாட்டைச் சேர்ந்தவர்கள் பயங்கரவாதிகளால் கொல்லப்பட்டனர், மேலும் மூன்று பேர் காயமடைந்தனர். இந்த நகழ்வு தொடர்பாக 4 சந்தேக நபர்கள் பாதுகாப்பு படையினரால் கொல்லப்பட்டனர் மற்றும் 1 சந்தேக நபர் கைது செய்யப்பட்டார்.[8][9][10]

குறிப்புகள்[தொகு]

  1. Borjian, H., “Khatlon”, Encyclopaedia Iranica. Volume 16, Issue 4, 2018, pp. 437-439.
  2. Population of the Republic of Tajikistan as of 1 January 2008, State Statistical Committee, Dushanbe, 2008 (உருசிய மொழியில்)
  3. Muriel Atkin. Tajikistan in: Glenn E. Curtis (ed.): Kazakhstan, Kyrgyzstan, Tajikistan, Turkmenistan, and Uzbekistan, Country Studies, Washington: 1997. pp. 197–290.
  4. Borjian, Habib, Kurgan Tepe, Encyclopaedia Iranica Online
  5. Ethnic groups at risk: The status of Tajiks Heritage Society
  6. Tajikistan: Central Asian Powderkeg பரணிடப்பட்டது 2007-09-30 at the வந்தவழி இயந்திரம் The Jamestown Foundation
  7. "CensusInfo - Data". www.censusinfo.tj. பார்க்கப்பட்ட நாள் 2019-09-09.[தொடர்பிழந்த இணைப்பு]
  8. US cyclists killed in ISIS-claimed attack in Tajikistan identified
  9. [1]
  10. [2]
"https://ta.wikipedia.org/w/index.php?title=காத்தலோன்_பிராந்தியம்&oldid=3239405" இலிருந்து மீள்விக்கப்பட்டது