முகர்ரக்கு ஆளுநரகம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
முஹாரக் கவர்னரேட்
محافظة المحرق
Muḥāfaẓat al-Muḥarraq
ஆளுநரகம்
முஹாரக் கவர்னரேட்-இன் கொடி
கொடி
பகுரைனில் முஹாரக் கவர்னரேட்டின் அமைவிடம்
பகுரைனில் முஹாரக் கவர்னரேட்டின் அமைவிடம்
நாடு பகுரைன்
அரசு
 • ஆளுநர்சல்மான் பின் ஈசா பின் இந்தி[1]
பரப்பளவு
 • மொத்தம்64.80 km2 (25.02 sq mi)
மக்கள்தொகை (2010[2])
 • மொத்தம்189,114
நேர வலயம்Arabia Standard Time (ஒசநே+3)

முஹாரக் கவர்னரேட் (Muharraq Governorate, அரபு மொழி: محافظة المحرق‎, romanized: Muḥāfaẓat al-Muḥarraq ) என்பது பகுரைனின் நான்கு ஆளுநரகங்களில் ஒன்றாகும் . இது இப்போது அல் முஹாரக் நகராட்சியுடனும், முஹாரக் தீவுடன், வெளிப்புற தீவுகளுடன் இணைந்து விரிவாக உள்ளது. அந்த தீவின் தெற்கு முனையில் உள்ள முன்னாள் நகராட்சியான அல் ஹட்டினும் இதில் அடங்கும்.

முஹாரக்கின் மையத்தில் இராச்சியத்தின் மிகப் பழமையான சில குடியிருப்புப் பகுதிகள் உள்ளன. அவற்றில் பல வெளிநாட்டுத் தொழிலாளர்களுக்கு அவற்றின் பகுரைன் உரிமையாளர்களால் வாடகைக்கு விடப்பட்டுள்ளன. இங்கு ஷேக் ஈசா பின் அலி ஹவுஸ், சியாடி ஹவுஸ், காற்றுக் கோபுரங்கள், பிரபலமற்ற பால்கன் சிலை, பத்திரிகையாளர் அப்துல்லா அல் சயீத் ஹவுஸ், அராத் கோட்டை உள்ளிட்டவையாக நகரத்தின் நெரிசலான பாதைகளில் வரலாற்று ஆர்வமுள்ள பல கட்டிடங்கள் உள்ளன .

இந்த வரலாற்று இடங்களை சுற்றுலா தலங்களாக மாற்றுவதற்கு போதுமான நிதி ஒதுக்கப்படவில்லை என்று அரசாங்கத்தின் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.[3]

முஹாரக் தீவு பஹ்ரைன் பன்னாட்டு வானூர்தி நிலையத்தின் தளமாகவும் உள்ளது, இருப்பினும் உள்ளூர் அசலா எம்.பி இதை இடமாற்றம் செய்ய கோரிக்கை விடுத்துள்ளார். ஏனெனில் வானூர்திகள் தரையிறங்கும்போதும், புறப்படும்போதும் ஏற்படும் ஒலிமாசு உள்ளூர்வாசிகளுக்கு ஒரு தொந்தரவாக உள்ளது என்றார்.

குறிப்புகள்[தொகு]

  1. Muharraq Governor stresses keenness to optimise services | DT News Bahrain - April 2, 2016
  2. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2018-07-22. பார்க்கப்பட்ட நாள் 2020-12-30.
  3. “Although Muharraq has a lot to offer to tourists, how can we attract them if most of our traditional sites are in crowded areas?" "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2007-03-11. பார்க்கப்பட்ட நாள் 2020-12-30.
"https://ta.wikipedia.org/w/index.php?title=முகர்ரக்கு_ஆளுநரகம்&oldid=3567899" இலிருந்து மீள்விக்கப்பட்டது