திருச்சிராப்பள்ளி-ஹவுரா அதிவேக விரைவுவண்டி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
திருச்சிராப்பள்ளி - ஹவுரா
வாராந்திர அதிவேக விரைவுவண்டி
திருச்சிராப்பள்ளி ஹவுரா அதிவேக விரைவுவண்டி, துனியில்
கண்ணோட்டம்
வகைநரங்களுக்கிடையான விரைவுவண்டி விரைவுவண்டி
நிகழ்நிலைஇயக்கத்தில்
நிகழ்வு இயலிடம்தமிழ்நாடு, ஆந்திரப் பிரதேசம், ஒடிசா & மேற்கு வங்காளம்
முதல் சேவை1998; 26 ஆண்டுகளுக்கு முன்னர் (1998)
நடத்துனர்(கள்)தெற்கு இரயில்வே
வழி
தொடக்கம்திருச்சிராப்பள்ளி சந்திப்பு (TPJ)
இடைநிறுத்தங்கள்21
முடிவுஹவுரா (HWH)
ஓடும் தூரம்2,025 km (1,258 mi)
சராசரி பயண நேரம்35 மணிகள், 20 நிமிடங்கள்
சேவைகளின் காலஅளவுவாரத்திற்கு இருமுறை
தொடருந்தின் இலக்கம்12663/12664
பயணச் சேவைகள்
வகுப்பு(கள்)1A, 2A, 3A, SL, SLR, SLRD and UR/GS
மாற்றுத்திறனாளி அனுகல்Handicapped/disabled access
இருக்கை வசதிCorridor coach (UR/GS only)
படுக்கை வசதிCouchette car
Auto-rack arrangementsNo
உணவு வசதிகள்இரயிலில்
காணும் வசதிகள்சாளரம் அனைத்துப் பெட்டிகளிலும்
பொழுதுபோக்கு வசதிகள்No
சுமைதாங்கி வசதிகள்Overhead racks
Baggage carriage
தொழில்நுட்பத் தரவுகள்
சுழலிருப்புLocomotive:
TPJVSKP: (WAM 4/WAP 1 (AJJ) or WAP 1 (RPM));
VSKPHWH: (WAM 4 (VSKP) or WAP 4 (SRC/TATA))
பாதை1,676 மிமீ (5 அடி 6 அங்)
மின்சாரமயமாக்கல்25 kV AC, 50 Hz
வேகம்57 kilometres per hour (35 mph)
பாதை உரிமையாளர்தெற்கு இரயில்வே
காலஅட்டவணை எண்கள்21/21A/29/29A[1]
வழிகாட்டுக் குறிப்புப் படம்

திருச்சிராப்பள்ளி-ஹவுரா அதிவிரைவு விரைவுவண்டி (Tiruchirappalli–Howrah Superfast Express) என்பது இந்தியாவின் மேற்கு வங்காளத்தின் ஹவுராவுடன் (கொல்கத்தா) தமிழ்நாடு திருச்சிராப்பள்ளியை இணைக்கும் விரைவுவண்டி தொடருந்து சேவையாகும். இந்த விரைவு இரயில் திருச்சிராப்பள்ளி சந்திப்பு தொடருந்து நிலையத்திலிருந்து இயக்கப்படும் முதல் நீண்டதூர தொடருந்தாகும்.[2]

கண்ணோட்டம்[தொகு]

இந்த விரைவுவண்டி 1998–1999 இரயில்வே நிதி அறிக்கையில் செவ்வாய், வெள்ளி மற்றும் சனிக்கிழமைகளில் தமிழ்நாட்டின் திருச்சிராப்பள்ளியிலிருந்து மேற்கு வங்காளத்தின் ஹவுரா/கொல்கத்தா இடையே வாரத்திற்கு மூன்று நாட்கள் இயக்க அறிமுகப்படுத்தப்பட்டது.[3] 6803/6804 என எண்ணிடப்பட்ட இந்த இரயில் சேவை ஜூலை 2000 முதல் வாரத்திலிருந்து செவ்வாய் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் திருச்சிக்கு இரு வாரங்களுக்குக் குறைக்கப்பட்டு, சனிக்கிழமைகளில், 6355/6356 என்ற புதிய ரயிலாகக் கன்னியாகுமரி வரை சேவை நீட்டிக்கப்பட்டது.[4]

இந்த இரயில் அதிவேக விரைவு வண்டியாக 24 ஜனவரி 2006ல் (திருச்சி) மற்றும் 26 ஜனவரி 2006ல் (ஹவுரா) மாற்றப்பட்டு 2663/2664 என மறுபெயரிடப்பட்டது.[5] பின்னர், டிசம்பர் 2010ல் இத எண்ணானது ரயில் மேலாண்மை அமைப்பின் ஒரு பகுதியாக 12663/12664 என மாற்றப்பட்டது.[6][7]

பெட்டிகள்[தொகு]

இந்த இரயிலில் ஒரு குளிர்சாதன வசதிகொண்ட முதல் வகுப்பு, 1 ஏசி 2-அடுக்கு, 3 ஏசி 3-அடுக்கு, 12 தூங்கும் வசதிகொண்ட பெட்டிகள், நான்கு பொதுப் பெட்டிகள் (முன்பதிவு செய்யப்படாதவை), இரண்டு சுமை பெட்டி (எஸ்எல்ஆர்) மற்றும் 1 சமையலறைப் பெட்டியினைக் கொண்டது.[a]

லோகோ 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23
எஸ்.எல்.ஆர் யு.ஆர் எஸ் 13 எஸ் 12 எஸ் 11 எஸ் 10 எஸ் 9 எஸ் 8 எஸ் 7 எஸ் 6 பிசி எஸ் 5 எஸ் 4 எஸ் 3 எஸ் 2 எஸ் 1 பி 4 பி 3 பி 2 பி 1 எ 1 எச் 1 யு.ஆர் எஸ்.எல்.ஆர்

அட்டவணை[தொகு]

12664 திருச்சிரபள்ளி சந்திப்பிலிருந்து ஒவ்வொரு செவ்வாய் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் 13.45 மணிக்குப் புறப்பட்டு மறுநாள் 23.45 மணிக்கு ஹவுரா சந்திப்புக்கு வந்து சேர்கிறது; அதாவது புதன் மற்றும் சனிக்கிழமைகளில். மறுமார்க்கமாக வண்டி எண் 12663 ஒவ்வொரு வியாழன் மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் 17.35 மணிக்கு ஹவுரா சந்திப்பிலிருந்து புறப்பட்டு சனி மற்றும் செவ்வாய்க் கிழமைகளில் 02.50 மணிக்குத் திருச்சிராப்பள்ளி சந்திப்பிற்கு வந்து சேர்கிறது. இது ஸ்ரீரங்கம், அரியலூர், விருத்தாசலம், விழுப்புரம், மேல்மருவத்தூர், செங்கல்பட்டு, தாம்பரம், சென்னை எழும்பூர், நெல்லூர், ஓங்கோல், விஜயவாடா சந்திப்பு, எலூரு, இராஜமுந்திரி, விசாகப்பட்டினம், விசயநகரம், பெர்காம்பூர், குர்தா சாலை, புவனேசுவரம், கட்டக், பத்ரக், பாலேஸ்வர், கரக்பூர் சந்திப்பு முதலிய இடங்கள் வழியே, நின்று செல்லும்.

மேலும் காண்க[தொகு]

குறிப்புகள்[தொகு]

  1. The coach composition is subject to change.

மேற்கோள்கள்[தொகு]

  1. "Trains at a Glance July 2013 – June 2014". Indian Railways. பார்க்கப்பட்ட நாள் 25 February 2014.
  2. R. Rajaram (17 January 2011). "On board cleaning proposed in Tiruchi–Howrah Express". தி இந்து (Tiruchi). http://www.thehindu.com/todays-paper/tp-national/tp-tamilnadu/on-board-cleaning-proposed-in-tiruchi-howrah-express/article1096542.ece. பார்த்த நாள்: 25 February 2014. 
  3. "Railway Budget, 1998–99". Press Information Bureau. பார்க்கப்பட்ட நாள் 25 February 2014.
  4. "Over a dozen new trains to begin". Press Information Bureau. பார்க்கப்பட்ட நாள் 25 February 2014.
  5. "Tiruchi-Howrah Express made superfast". தி இந்து (சென்னை). 25 January 2006. http://www.thehindu.com/todays-paper/tp-national/tp-tamilnadu/briefly/article3244469.ece. பார்த்த நாள்: 25 February 2014. 
  6. "Railways to Switch to 'Five' – Digit System for Numbering all its Passenger Carrying Trains from December 2010". Press Information Bureau. 23 September 2010. பார்க்கப்பட்ட நாள் 25 February 2014.
  7. "Railways migrate to 5-digit number scheme to monitor trains". தி டைம்ஸ் ஆஃப் இந்தியா. 20 December 2010. http://timesofindia.indiatimes.com/india/Railways-migrate-to-5-digit-number-scheme-to-monitor-trains/articleshow/7132909.cms. பார்த்த நாள்: 25 February 2014. 

வெளி இணைப்புகள்[தொகு]