நடுவண் அரசு அதிகார வரம்பின் கீழ் உள்ள மாவட்டங்கள்

ஆள்கூறுகள்: 39°0′N 70°0′E / 39.000°N 70.000°E / 39.000; 70.000
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
நடுவண் அரசு அதிகார வரம்பின் கீழ் உள்ள மாவட்டங்கள்
Ноҳияҳои тобеи ҷумҳурӣ
ناحیه های تابع جمهوری
பிராந்தியம்
தஜிகிஸ்தானில் நடுவண் அரசு அதிகார வரம்பின் கீழ் உள்ள மாவட்டங்கள்
தஜிகிஸ்தானில் நடுவண் அரசு அதிகார வரம்பின் கீழ் உள்ள மாவட்டங்கள்
ஆள்கூறுகள்: 39°0′N 70°0′E / 39.000°N 70.000°E / 39.000; 70.000
நாடு தஜிகிஸ்தான்
தலைநகரம்துசான்பே
பரப்பளவு
 • மொத்தம்28,500 km2 (11,000 sq mi)
மக்கள்தொகை (2020)
 • மொத்தம்2,165,900
 • அடர்த்தி76/km2 (200/sq mi)
ஐ.எஸ்.ஓ 3166 குறியீடுTJ-RA
ம.மே.சு. (2017)0.641[1]
medium

நடுவண் அரசு அதிகார வரம்பின் கீழ் உள்ள மாவட்டங்கள் (Districts under Central Government Jurisdiction, தாஜிக் மொழி : Ноҳияҳои тобеи ҷумҳурӣ ) என்பது தஜிகிஸ்தானில் உள்ள ஒரு பிராந்தியம் ஆகும். இதில் 9 மாவட்டங்கள் மற்றும் 4 மாவட்ட அளவிலான நகரங்கள் உள்ளன. இவை நேரடியாக நடுவண் நிர்வாகத்தின் கீழ் உள்ளன. [2] தஜிகிஸ்தானின் தலைநகரான துசான்பே, நடுவண் அரசு அதிகார வரம்பின் கீழ் உள்ள மாவட்டங்களால் சூழப்பட்டுள்ளது. என்றாலும் அதன் ஒரு பகுதியாக இல்லை. இப்பகுதி 28,500 சதுர கிலோமீட்டர் பரப்பளவைக் கொண்டுள்ளது, மொத்த மக்கள் தொகை 2,165,900 (2020) ஆகும். 2010 ஆம் ஆண்டில் மாவட்டங்களின் இன அமைப்பானது 85% தாஜிக்குகள் மற்றும் 11.7% உஸ்பெக்கியர் ஆகும். [3]

வரலாறு[தொகு]

நடுவண் அரசு அதிகார வரம்பின் கீழ் உள்ள மாவட்டங்கள் 1955 ஆம் ஆண்டில் கலைக்கப்பட்ட முன்னாள் மாகாணமான கர்ம் ஒப்லாஸ்ட்டின் பெரும்பகுதியை உள்ளடக்கியது. இவை முன்பு கரோடெஜின் பிராந்தியம் என்று அழைக்கப்பட்டது.

நிர்வாக பிரிவுகள்[தொகு]

நடுவண் அரசு அதிகார வரம்பின் கீழ் உள்ள மாவட்டங்கள் 9 மாவட்டங்களையும் 4 மாவட்ட அளவிலான நகரங்களையும் உள்ளடக்கியது. அவை வஹதத், துர்சுன்சோடா, ஹிசோர் மற்றும் ரோகுன் . மாவட்டங்கள் ஆகும். [2]

  • பைசோபோட் மாவட்டம்
  • லக்ஷ் மாவட்டம் (முன்னர் ஜிர்கடோல் மாவட்டம்)
  • நியூரோபோட் மாவட்டம் (முன்னர் தர்பாண்ட் மாவட்டம் )
  • ராஷ்ட் மாவட்டம் (முன்னர் கர்ம் மாவட்டம்)
  • ருடாக்கி மாவட்டம் (முன்னர் லெனின்ஸ்கி மாவட்டம்)
  • சாங்வோர் மாவட்டம் (முன்னர் தவில்தாரா மாவட்டம் )
  • ஷாஹ்ரினவ் மாவட்டம்
  • டோஜிகோபோட் மாவட்டம்
  • வர்சோப் மாவட்டம்

நிலவியல்[தொகு]

இந்த பீடபூமியில் ஆமூ தாரியாவின் வலது கை துணை ஆறான வக்ஷ் ஆறு பாய்கிறது. வடக்கு எல்லையில் கிஸ்ஸர் மற்றும் ஜெராவ்ஷன் மலைகள் உள்ளன. தெற்கு எல்லையில் தர்வாஸ் 7,600 மீட்டர் (24,900 அடி) மலை உள்ளது. பிராந்தியத்தின் குளிர்கால காலநிலையானது மிகவும் மோசமானதாக இருக்கும். அக்டோபரில் பனி பெய்யத் தொடங்குகிறது, அது மறைவதற்கு மே மாதமாகும். இருப்பினும், வெப்பமான மாதங்களில், மலைச்சரிவுகளில் மேப்பிள், மலை சாம்பல், ஆப்பிள், பேரிக்காய், வாதுமை மரங்கள் பசுமையாக நிறைந்திருக்கின்றன; பழத் தோட்டங்களில் ஆப்பிள், பேரீச்சம்பழங்கள் மட்டுமல்லாமல், பீச், செர்ரி, முசுக்கொட்டை, பாதாமி பழங்களும் விளைகின்றன. இங்கு உள்ள மாடுகளும், குதிரைகளும் குட்டையானவை என்றாலும், இவை திடமான இனத்தைச் சேர்ந்தவையாகும். [4]

குறிப்புகள்[தொகு]

  1. "Sub-national HDI - Area Database - Global Data Lab". hdi.globaldatalab.org (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2018-09-13.
  2. 2.0 2.1 "Population of the Republic of Tajikistan as of 1 January 2020" (PDF) (in ரஷியன்). Statistics office of Tajikistan. Archived from the original (PDF) on 1 ஜூன் 2021. பார்க்கப்பட்ட நாள் 12 October 2020. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
  3. "CensusInfo - Data". www.censusinfo.tj. பார்க்கப்பட்ட நாள் 2019-09-09.[தொடர்பிழந்த இணைப்பு]
  4.  ஒன்று அல்லது மேற்பட்ட முந்தைய வரிகள்  தற்போது பொது உரிமைப் பரப்பிலுள்ள நூலிலிருந்து உரையைக் கொண்டுள்ளது:  "Karateghin". பிரித்தானிக்கா கலைக்களஞ்சியம் (11th) 15. (1911). Cambridge University Press.