லாவோஸ் திரைப்படத்துறை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

லாவோஸ் திரைப்படத்துறை (Cinema of Laos) என்பது லாவோஸ் நாட்டில் வெளியாகும் திரைப்படங்களையும், அதைச் சார்ந்த தொழிலாளர்களையும் உள்ளடக்கிய திரைப்படத்துறை ஆகும். இந்த திரைப்படத்துறை அருகிலுள்ள வியட்நாம் மற்றும் கம்போடியத் திரைப்படத்துறையை விட பிற்பகுதியில் தோன்றியது.

காலனித்துவம் மற்றும் உள்நாட்டுப் போருக்குப் பிறகு லாவோஸ் நாட்டில் திரைப்படதுறை ஒரு முன்னுரிமையாக கருதப்படவில்லை. முடியாட்சி ஒழிக்கப்பட்ட பின்னர் தயாரிக்கப்பட்ட முதல் முழு நீள திரைப்படம் 1983 ஆம் ஆண்டில் சோம்சித் போல்சேனா என்பவர் இயக்கிய, 'கன் வாய்ஸ் ஃப்ரம் தி ப்ளைன் ஆஃப் ஜார்ஸ்' என்ற படம் ஆகும். ஆனால் அதன் வெளியீடு தணிக்கை குழு மூலம் தடுக்கப்பட்டது.[1] 2016 ஆம் ஆண்டு இயக்குனர் மேட்டி டூ என்பவர் இயக்கிய, 'டெரஸ்ட் சிஸ்டர்' என்ற படம் 2014 ஆம் ஆண்டு கான் திரைப்பட விழாவில் திரையிடப்பட்டது.[2]

மேற்கோள்கள்[தொகு]

  1. Southiponh, Som Ock; Gerow, Aaron (1999). "Starting an Asian Cinema: Laos Past and Present". Documentary Box (Yamagata International Documentary Film Festival) 12: 27. https://books.google.com/books?id=Dt9kAAAAMAAJ. 
  2. Caroline Besse, "La Fabrique des Cinémas du monde, possible tremplin pour les jeunes réalisateurs", Télérama, May 16, 2014.
"https://ta.wikipedia.org/w/index.php?title=லாவோஸ்_திரைப்படத்துறை&oldid=3077939" இலிருந்து மீள்விக்கப்பட்டது