ஸ்ரீதர் ராஜன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

ஸ்ரீதர் ராஜன் (Sreedhar Rajan) என்பவர் ஒரு இந்திய பத்திரிகையாளர் மற்றும் திரைப்பட விமர்சகர் ஆவார். தமிழ்நாட்டின் சென்னையில் விளம்பர நிர்வாகியாக தனது வாழ்க்கையைத் தொடங்கிய இவர் திரைப்பட இயக்குநராகவும், திரைக்கதை எழுத்தாளராகவும் மாறினார். கீழ்வெண்மணிப் படுகொலைகள் (1968) குறித்த இந்திரா பார்த்தசாரதியின் புதினத்தை அடிப்படையாகக் கொண்டு இவர் கண் சிவந்தால் மண் சிவக்கும் என்ற படத்தை இயக்கினார். இப்படம் 1983 ஆம் ஆண்டில் சிறந்த அறிமுக இயக்குநருக்கான இந்திரா காந்தி விருதை பெற்றுத்தந்தது. அதைத் தொடர்ந்து, இவர் இரவுப் பூக்கள் (1986) மற்றும் பூக்கள் விடும் தூது (1987) போன்ற படங்களில் பணியாற்றினார். இந்தியத் திரைப்படத் தணிக்கை குழு மற்றும் இந்திய தேசியத் திரைப்பட வளர்ச்சிக் கழகம் போன்றவற்றின் ஆலோசனைக் குழு உறுப்பினர் உள்ளிட்ட பல்வேறு பதவிகளிலும் இருந்துள்ளார். [1] இவர் தமிழ் நடிகர் ஜெமினி கணேசனின் மகள் ஜெய ஸ்ரீதர் ராஜனை மணந்தார். [2]

தேர்ந்தெடுக்கபட்ட திரைப்படவியல்[தொகு]

குறிப்புகள்[தொகு]

  1. "30th National Film Festival, 1983". Directorate of Film Festivals. p. 5. Archived from the original on 3 October 2015. பார்க்கப்பட்ட நாள் 31 May 2015.
  2. N, Sathiya Moorthy (27 November 1999). "Real estate 'sparked' Gemini Ganesan woes". Rediff.com. பார்க்கப்பட்ட நாள் 31 May 2015.
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஸ்ரீதர்_ராஜன்&oldid=3076074" இலிருந்து மீள்விக்கப்பட்டது