பிளம்பேட்டு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

பிளம்பேட்டு (Plumbate) என்பது ஈயத்தைக் கொண்டுள்ள ஆக்சோ எதிர்மின்னயனி உப்பாகும். பிளம்பேட்டு என்ற சொல் பிளம்பேட்டு(II) மற்றும் பிளம்பேட்டு(IV) ஆகிய உப்புகளையும் குறிக்கும். பாரம்பரியமாக பிளம்பேட்டு(IV) உப்பு பொதுவாக பிளம்பேட்டு என்றும் பிளம்பேட்டு(II) உப்பு பிளம்பைட்டு என்றும் அழைக்கப்பட்டு வந்தது.

ஈய(IV) ஆக்சைடுடன் (PbO2) நீர்க்காரம் வினைபுரிவதால் பிளம்பேட்டுகள் உருவாகின்றன. பிளம்பேட்டு உப்புகளில் நீரேற்றம் பெற்ற பிளம்பேட்டு எதிர்மின் அயனிகளோ (Pb(OH)2−6) அல்லது நீரிலி எதிர்மின் அயனிகளான (PbO2−3) மெட்டா பிளம்பேட்டு அல்லது ஆர்த்தோ பிளம்பேட்டு (PbO4−4)அயனிகளோ இருக்கும்.[1] உதாரணமாக, ஈய ஈராக்சைடை சூடான அடர் பொட்டாசியம் ஐதராக்சைடு கரைசலில் கரைக்கும்போது K2Pb(OH)6. உப்பு உருவாகிறது. ஈய ஈராக்சைடுடன் உலோக ஆக்சைடுகள் அல்லது ஐதராக்சைடுகள் சேர்த்து சூடுபடுத்தினால் நீரற்ற உப்புகள் கிடைக்கின்றன. பிளம்பேட்டு(IV) உப்புகள் அனைத்தும் மிகவலிமையான ஆக்சிசனேற்றும் முகவர்களாகச் செயல்படுகின்றன. நீரேற்றம் பெற்ற பிளம்பேட்டு(IV) உப்புகளில் சில நீரிறக்கம் அடையும்போது சிதைகின்றன. கார்பனீராக்சைடாலும் அவை சிதைவடைகின்றன.[2]

Pb3O4 என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் சிவப்பு ஈயம் என அறியப்படும் ஈய நான்காக்சைடு ஒரு கலப்பு ஆக்சைடாகும். இதை ஈய(II) ஆர்த்தோபிளம்பேட்டு(IV) (IV)([Pb2+]2[PbO4]4−) என கருதலாம். நைட்ரிக் அமிலத்துடன் இது ஈடுபடும் வினையைக் கொண்டு இவ்வுப்பின் கட்டமைப்பு விளக்கப்படுகிறது. வினையில் ஈய(II) நைட்ரேட்டு உப்பும் (Pb(NO3)2 ) ஈய ஈராக்சைடும் (PbO2) உருவாகின்றன. ஈய செசுகியுவாக்சைடு (Pb2O3) உப்புகளும் அறியப்படுகின்றன. இவற்றின் கட்டமைப்பு ஈய(II) மெட்டா-பிளம்பேட்டு(IV) ([Pb2+][PbO3]2− ) கட்டமைப்பு ஆகும்.

மேற்கோள்கள்[தொகு]

  1. Egon Wiberg; Nils Wiberg; Arnold Frederick Holleman (2001). Inorganic chemistry. Academic Press. பக். 920. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:0-12-352651-5. 
  2. Amit Arora (2005). Text Book Of Inorganic Chemistry. Discovery Publishing House. பக். 450–452. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:81-8356-013-X. 

புற இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=பிளம்பேட்டு&oldid=3074577" இலிருந்து மீள்விக்கப்பட்டது