தியர்பாகர் மாகாணம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தியர்பாகர் மாகாணம்
Diyarbakır ili
துருக்கியின் மாகாணம்
துருக்கியில் தியர்பாகர் மாகாணத்தின் அமைவிடம்
துருக்கியில் தியர்பாகர் மாகாணத்தின் அமைவிடம்
நாடுதுருக்கி
பகுதிதென்கிழக்கு அனதோலியா
துணைப் பகுதிசன்லூபா
அரசு
 • தேர்தல் மாவட்டம்தியர்பாகர்
 • ஆளுநர்முனிர் கரலோஸ்லு
பரப்பளவு
 • Total15,355 km2 (5,929 sq mi)
மக்கள்தொகை (2018)[1]
 • Total17,32,396
 • அடர்த்தி110/km2 (290/sq mi)
தொலைபேசி குறியீடு0412
வாகனப் பதிவு21

தியர்பாகர் மாகாணம் (Diyarbakır Province, துருக்கியம்: Diyarbakır ili , திமிலி : Suke Diyarbekır [2] Kurdish [3] ), என்பது தென்கிழக்கு துருக்கியில் உள்ள ஒரு மாகாணமாகும் . இந்த மாகாணம் 15,355  கிமீ 2 பரப்பளவைக் கொண்டுள்ளது. இதன் மக்கள் தொகையானது 1,528,958 ஆகும். மாகாண தலைநகராக தியர்பாகர் நகரம் உள்ளது.

வரலாறு[தொகு]

இப்பகுதி பல நாகரிகங்களுக்கு தாயகமாக இருந்து வருகிறது. மேலும் இப்பகுதியிலும் இதைச் சுற்றியுள்ள பகுதிகளிலும் பல இடைக் கற்கால கல் செதுக்குதல்கள் மற்றும் கலைப்பொருட்கள் உள்ளன. இந்த மாகாணப்பகுதியை அக்காடியர்கள், ஹுரியத்துகள், மித்தானியர், மீடியர், இட்டைடுகள், ஆர்மீனியர்கள், சீரியர், புது-பாபிலோனியர்கள், அகாமனியர்கள், கிரேக்கர்கள், உரோமர், பார்த்தியர்கள், பைசாந்தியர்கள், சசானித்துகள், அரேபியர்கள், செல்ஜக்கியர்கள், மங்கோலியர், சபாவித்துகள், மார்வானியர், அய்யூபிட்ஸ் போன்றோர் ஆண்டுள்ளனர்.

இன்று மாகாணத்தின் பெரும்பான்மையான மக்களாக குர்து மக்கள் உள்ளனர். [4]

துருக்கியில்[தொகு]

உள்ளூர் மக்களை துருக்கியமயமாக்குவதற்காக, [5] 1927 சூனில் சட்டம் 1164 நிறைவேற்றப்பட்டது [6] இச்சட்டம் இன்ஸ்பெக்டரேட்டுகள்- ஜெனரல் பகுதிகளை உருவாக்க அனுமதித்தது ( துருக்கியம் : உமுமி மெஃபெடிலிக், யுஎம்). [7] எனவே தியர்பாகர் மாகாணம் முதல் இன்ஸ்பெக்டரேட் ஜெனரல் ( துருக்கியம்: Birinci Umumi Müffetişlik ) என்று அழைக்கபட்டது. இதில் ஹக்கரி, சியர்ட், வான், மார்டின், பிட்லிஸ், சான்லூர்பா, எலாஜிக் தியர்பாகர் போன்ற மாகாணங்களை உள்ளடக்கியதாக இருந்தது. [8] முதல் யுஎம் 1928 சனவரி முதல் நாள் உருவாக்கப்பட்டது. இது தியர்பாகர் நகரை மையமாகக் கொண்டிருந்தது. [9] யு.எம் ஒரு இன்ஸ்பெக்டர் ஜெனரலால் நிர்வகிக்கப்பட்டது, அவர் குடிமை சமூகம், நீதித்துறை, இராணுவ விஷயங்களில் பரந்த அளவிலான அதிகாரங்களைக் கொண்டு ஆட்சி செய்தார். இன்ஸ்பெக்டர் ஜெனரலின் அலுவலகம் 1952 இல் ஜனநாயகக் கட்சியின் அரசாங்கத்தின் போது கலைக்கப்பட்டது. [10] தியர்பாகர் மாகாணத்துக்குள் வெளிநாட்டு குடிமக்கள் வருவதற்கு 1965 வரை தடை விதிக்கப்பட்டிருந்தது. துருக்கியமயமாக்கள் கொள்கையின்படி, 1930 களில், மாகாணத்தின் பல இடங்களின் பெயர்கள் துருக்கிய பெயர்களாக மாற்றபட்டன.

நவீன வரலாறு[தொகு]

1987 முதல் 2002 வரை, தியர்பாகிர் மாகாணம் ஓஹால் (அவசரகால நிலை) பிராந்தியத்தின் ஒரு பகுதியாக இருந்தது. இது குர்திசுத்தான் தொழிலாளர் கட்சிக்கு (பி.கே.கே) எதிராக அறிவிக்கப்பட்டது. மேலும் சாதாரண ஒரு ஆளுநரை விட கூடுதல் அதிகாரங்களைக் கொண்ட சூப்பர்கவர்னர் என்று அழைக்கப்பட்ட ஆளுநரால் இது நிர்வாகிக்கபட்டது. 1987 ஆம் ஆண்டில் மாகாணத்தின் அனைத்து கிராமங்கள், ஊர்கள், குடியிருப்புகளில் உள்ளவர்களை இடமாற்றம் செய்து மீள்குடியேற்றும் அதிகாரம் அவருக்கு வழங்கப்பட்டது. 1990 திசம்பரில் ஆணை எண் 430 படி, ஓஹால் பிராந்தியத்தில் உள்ள சூப்பர் கவர்னரும் மாகாண ஆளுநர்களும் ஆணை எண் 430 இன்படி பெற்ற அதிகாரங்கள் காரணமாக அவர்களின் நடவடிக்கைகள் தொடர்பாக எந்தவொரு சட்டப்படியான வழக்குக்கிலிருந்தும் விலக்கு பெற்றனர்.. [11]

மாவட்டங்கள்[தொகு]

தியர்பாகர் மாகாணம் 14 மாவட்டங்களாக பிரிக்கப்பட்டுள்ளது:

  • பிஸ்மில்
  • செர்மிக்
  • அர்னர்
  • கங்கூஸ்
  • டிகில்
  • தியர்பாகர்
  • இகில்
  • எர்கானி
  • ஹனி, துருக்கி
  • ஹஸ்ரோ
  • கோகாக்கி
  • குல்ப்
  • பேன்
  • சில்வன்

குறிப்புகள்[தொகு]

  1. "Population of provinces by years - 2000-2018". பார்க்கப்பட்ட நாள் 9 மார்ச்சு 2019.
  2. Zazaca -Türkçe Sözlük, R. Hayıg-B. Werner
  3. "Odeya Pizîşkên Amedê: 200 kes bi koronayê ketine" (in tr). Rûpela nû. 8 April 2020. http://www.rupelanu.com/odeya-pizisken-amede-200-kes-bi-koronaye-ketine-10543h.htm. பார்த்த நாள்: 27 April 2020. 
  4. Watts, Nicole F. (2010). Activists in Office: Kurdish Politics and Protest in Turkey (Studies in Modernity and National Identity). Seattle: University of Washington Press. பக். 167. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-0-295-99050-7. 
  5. Üngör, Umut. "Young Turk social engineering : mass violence and the nation state in eastern Turkey, 1913- 1950" (PDF). University of Amsterdam. pp. 244–247. பார்க்கப்பட்ட நாள் 8 April 2020.
  6. Aydogan, Erdal. "Üçüncü Umumi Müfettişliği'nin Kurulması ve III. Umumî Müfettiş Tahsin Uzer'in Bazı Önemli Faaliyetleri". பார்க்கப்பட்ட நாள் 8 April 2020.
  7. Bayir, Derya (2016-04-22). Minorities and Nationalism in Turkish Law. Routledge. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-1-317-09579-8. 
  8. Jongerden, Joost (2007-01-01). The Settlement Issue in Turkey and the Kurds: An Analysis of Spatical Policies, Modernity and War. BRILL. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-90-04-15557-2. 
  9. Umut, Üngör. "Young Turk social engineering : mass violence and the nation state in eastern Turkey, 1913- 1950" (PDF). University of Amsterdam. p. 258. பார்க்கப்பட்ட நாள் 8 April 2020.
  10. Bozarslan, Hamit (2008-04-17). The Cambridge History of Turkey. Cambridge University Press. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-0-521-62096-3. 
  11. Norwegian Refugee Council/Global IDP Project (4 October 2002). "Profile of internal displacement: Turkey" (PDF). p. 78.
"https://ta.wikipedia.org/w/index.php?title=தியர்பாகர்_மாகாணம்&oldid=3071103" இலிருந்து மீள்விக்கப்பட்டது