பெனுமுடி-புலிகத்தா பாலம்

ஆள்கூறுகள்: 16°2′22″N 80°53′25″E / 16.03944°N 80.89028°E / 16.03944; 80.89028
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பெனுமுடி-புலிகத்தா பாலம்
Penumudi–Puligadda Bridge
தாண்டுவது கிருஷ்ணா ஆறு
இடம் ஆந்திரப் பிரதேசம்
மொத்த நீளம் 2.95 km (1.83 mi)[1]
கட்டியவர் நவயுகா பொறியியல் நிறுவனம்.
அமைவு 16°2′22″N 80°53′25″E / 16.03944°N 80.89028°E / 16.03944; 80.89028

பெனுமுடி-புலிகத்தா பாலம் (Penumudi–Puligadda Bridge) இந்தியாவின் ஆந்திரப்பிரதேச மாநிலத்திலுள்ள குண்டுர் மாவட்டத்தில் அமைந்துள்ளது. தேசிய நெடுஞ்சாலை எண் 214 இல் கிருட்டிணா நதியின் மீது பெனுமுடி கிராமம் முதல் புலிகத்தா கிராமம் வரை இப்பாலம் நீண்டுள்ளது. இவ்விரண்டு கிராமங்களையும் இணைத்து கட்டப்பட்டுள்ளதால் பாலத்திற்கு பெனுமுடி-புலிகத்தா பாலம் எனப் பெயரிடப்பட்டுள்ளது.[2][3][4] 2006 ஆம் ஆண்டு மே மாதம் 27 முதல் இப்பாலம் திறந்து வைக்கப்பட்டது. முதலமைச்சர் எ.ச.இராசசேகர ரெட்டி பாலத்தை திறந்து வைத்தார். பெனுமுடி-புலிகத்தா பாலம் கட்டப்பட்டதால் இரண்டு மாவட்டங்களுக்கிடையில் தோராயமாக 100 கிலோமீட்டர் பயண நேரம் குறைதுள்ளது. ஐதராபாத்தை தலைமையிடமாகக் கொண்ட நவயுகா குழுமத்தைச் சேர்ந்த நவயுகா பொறியியல் நிறுவனம் 71 கோடி ரூபாய் செலவில் இப்பாலத்தைக் கட்டியது.[5]

மேற்கோள்கள்[தொகு]

  1. "Navayuga Engineering Company Limited". necltd.com. Archived from the original on 15 ஜூலை 2018. பார்க்கப்பட்ட நாள் 15 July 2018. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
  2. "Puligadda Penumudi Bridge Details". Roadprojects.in. Archived from the original on 16 ஜூலை 2014. பார்க்கப்பட்ட நாள் 15 July 2014. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
  3. "Projects on EPC/Turnkey and Build Operate & Transfer (BOT) basis". Navayuga Engineering Company Ltd. Archived from the original on 18 July 2014. பார்க்கப்பட்ட நாள் 15 July 2014.
  4. T.Appala Naidu (29 September 2013). "Puligadda toll plaza to have CC cameras". தி இந்து. http://www.thehindu.com/todays-paper/tp-national/tp-andhrapradesh/puligadda-toll-plaza-to-have-cc-cameras/article5181466.ece. பார்த்த நாள்: 15 July 2014. 
  5. K. Srimali (28 May 2006). "YSR sees bid to stall Polavaram, Pulichintala". The Hindu (Avanigadda). http://www.thehindu.com/todays-paper/ysr-sees-bid-to-stall-polavaram-pulichintala/article3139398.ece. பார்த்த நாள்: 24 July 2014.