செல்லமல்லா சுகுணா குமாரி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
செல்லமல்லா சுகுணா குமாரி
நாடாளுமன்ற உறுப்பினர்
முன்னையவர்ஜி. வெங்கட்சுவாமி
பின்னவர்ஜி. வெங்கட்சுவாமி
தொகுதிபெத்தபள்ளி
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு25 சூலை 1955 (1955-07-25) (அகவை 68)
ஐதராபாத்து, தெலங்காணா, இந்தியா
அரசியல் கட்சிதெலுங்கு தேசம் கட்சி
துணைவர்எம். ராஜேந்திர பிரசாத்
பிள்ளைகள்இரண்டு
வாழிடம்ஐதராபாத்து
மூலம்: [1]

செல்லமல்லா சுகுணா குமாரி (Chellamalla Suguna Kumari) ஒரு இந்திய நாடாளுமன்ற உறுப்பினர் ஆவார். இவர் தெலங்கானா மாநிலத்தில் ஐதராபாத் தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஆவார்.[1]

தனிப்பட்ட வாழ்க்கை[தொகு]

செல்லமல்லா இந்தியாவின் ஆந்திரப்பிரதேச மாநிலத்தில் உள்ள ஐதராபாத்தில் 1955 ஆம் ஆண்டு பிறந்தார். இவரது தந்தையார் சி. போச்சையா ஆவார். இவர் தனது மருத்துவ இளங்கலைப் படடம் மற்றும் முதுகலைப்பட்டம் மற்றும் பிற பட்டயப் படிப்புகளை ஓசுமானியா மருத்துவக் கல்லூரியில் வெற்றிகரமாக முடித்தார். மருத்துவப் பணியை மேற்கொண்ட அவர் கூடவே சமூகப்பணியிலும் தன்னை ஈடுபடுத்திக் கொண்டார். மருத்துவர் எம். ராஜேந்திரப் பிரசாத்தை 1981 ஆம் ஆண்டில் மணம் முடித்தார். இவர்களுக்கு இரண்டு மகன்கள் உண்டு.[2]

அரசியல் வாழ்க்கை[தொகு]

குமாரி பன்னிரெண்டாவது மக்களவைக்கு பெத்தபள்ளி மக்களவைத் தொகுதியிலிருந்து 1998 ஆம் ஆண்டில் தெலுங்கு தேசம் கட்சி சார்பாக தேர்ந்தெடுக்கப்பட்டார். இவர் இரண்டாவது முறையாக இதே தொகுதியிலிருந்து பதின்மூன்றாவது மக்களவைக்கு 2004 ஆம் ஆண்டில் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

இவர் பெட்ரோலியம் மற்றும் இரசாயணம், அரசு ஈட்டுறுதித் திட்டங்கள் மற்றும் சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை போன்ற பல்வேறு நாடாளுமன்றக் குழுக்களின் உறுப்பினராகப் பணிபுரிந்துள்ளார்..

மேற்கோள்கள்[தொகு]

  1. "Biography at Parliament of India". Archived from the original on 1 June 2013. பார்க்கப்பட்ட நாள் 26 February 2013.
  2. "Members : Lok Sabha". 164.100.47.194. பார்க்கப்பட்ட நாள் 2020-12-04.